வெள்ளி, 14 ஏப்ரல், 2023

நோர்வே அரசாங்கம் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளது

உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக 
வெளியேற்றியுள்ளது.
கடந்தாண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கியதுடன் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன.
உளவுத்தகவல்களை திருடும் ரஷ்ய  அதிகாரிகள்
இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதிய நிலையில், குறித்த அதிகாரிகளிடத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டு அவர்களது செயல்பாடுகள் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு
 செய்துள்ளது.
இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில்,
ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியிருந்தது. இதேசமயம் நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.