மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
உறுதியளித்துள்ளார்.
தெஹியோவிட்டவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முறையற்ற அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தடுப்பது போன்ற பல விடயங்களில் அமைச்சு செயற்பட்டு
வருவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மேலும் விஞ்ஞான முறையின் கீழ் உரிமம் வழங்குவதற்கான அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம்
கையளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்
தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக