வியாழன், 6 ஏப்ரல், 2023

நாட்டில் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கும்
 போக்குவரத்து 
கொடுப்பனவாக 2 ஆயிரத்தி 900 ரூபா செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்நிலையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் 
இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரம் திறைசேரி மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.