திங்கள், 30 மே, 2022

நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும்ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

நாட்டில் தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து எட்டு மாதங்களாக பெறப்பட்ட மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய 23 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியதன் காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூடப்படுவதாக உள்ளுர் எரிசக்தி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கடனை செலுத்தத் தவறியமையினால் தனியார் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் சுமார் 7000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளுர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 29 மே, 2022

வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ் பல்கலைகழகம் தெரிவிப்பு

நாட்டில்.29-05-2022. இன்று வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.
செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் 29-05-2022.இன்று தோன்றவுள்ளது.
இதனை மக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பின் தகவல்

இலங்கைப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் 
மறுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.¨

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 26 மே, 2022

கல்முனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம்;

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று 
உத்தரவிட்டுள்ளது.
நாடு பூராகவும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறிப்பிட்ட தனிப்பட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன், சமயபாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை 
எழுதி சிக்கியுள்ளார்.
சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நேற்று(24) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



நாட்டில் விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில்
 தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து
 வரும் விமானங்கள் கூட தரையிறங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கையில்
 இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் கடந்த மாதம் 9ஆம் திகதி ஊடறுப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார்
இவ்வாறானதொரு சூழலிலேயே தற்போது விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 25 மே, 2022

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.முன்னதாக நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சார்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் ரணில் 
பதவியேற்றுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படும் நிலையிலேயே இந்த பதவியேற்பு 
இடம்பெற்றுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





ஞாயிறு, 22 மே, 2022

மரத்தடிசந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் 21-05-2022.அன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 21 மே, 2022

இலங்கைக்கு ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் அமெரிக்கா தகவல்

இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மை தற்போதைய குறைந்த மதிப்பை விட பத்திரங்களின் மதிப்பு உயர வழிவகுக்கும் என வங்கி 
சுட்டிக்காட்டியுள்ளது.
இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் 
என்று வங்கி கணித்துள்ளது.
இந்த ஸ்திரத்தன்மை சர்வதேச நாணய நிதியத்தின் விவாதங்கள் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமனம் செய்யும் செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், என ஜே.பி.மோர்கன் வங்கி ஆய்வாளர்களை அடிப்படையாக கொண்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மையானது, குறைந்த அளவிலிருந்து பத்திரங்கள் உயர வழி வகுக்கும் என ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள்
 தெரிவித்தனர்.
ஏற்கனவே சில கடன் பத்திர வட்டிக் கொடுப்பனவுகள் புதனன்று காலாவதியாகி விட்டது. சலுகை காலம் என அழைக்கப்படும் கால அவகாசம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு 
வந்துள்ளது.
இதேவேளை, மீளச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பிலான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

இலங்கையில் இணையத்தில் வைரல் ஆகும் இளைஞரின் பதிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியான நிலையே உள்லூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை தற்போது பேசுபொருளாகியுள்ளது.மக்கள் அன்றாடம் நீண்டவரிசையின் நின்று பொருகளுக்காக காத்திருக்கும் அவலநிலையும் 
தோன்றியுள்ளது. எரிபொருள் முதல் அத்தியாவசிய 
உணவுகளை பெறுவதற்காகவும் இலங்கை மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர் தெரிவிலேயே படுத்துறங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து தென்னிலங்கையர் ஒருவர் தனது முகநூலில்,
இந்தக் குழந்தை பைத்தியம், இல்லையா?தரையில் படுத்துக் கொள்ளுங்கள் கனவுகள் அனைத்தும் தொலைந்து போகும் போது
வாழ்க்கையின் சிறந்த நேரத்தை இப்படி ஒரு வரிசையில் 
வீணாக்கும்போது. ⁇நல்ல வேலை செய்து, சொந்தமாக கார்,வீடு கட்டி, அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கனவு கண்ட இளைஞனின் கனவுகள் அனைத்தும் கலைந்து போயுள்ளன. ⁇ 
என பதிவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 20 மே, 2022

கடன் நிவாரணம் இலங்கைக்கு வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவிப்பு

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு 
குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் செலுத்துவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் G7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
G7 என்பது உலகின் ஏழு பெரிய “மேம்பட்ட” பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும், இது உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





புதன், 18 மே, 2022

பேரறிவாளனின் 31 ஆண்டுகள் சிறை வாசம் முடிவுக்கு வந்தது விடுதலை காற்றை சுவாசித்தார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம்.18-05-2022. இன்று விடுதலை செய்துள்ளது.
முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு .18-05-2022.இன்று 
வழங்கப்பட்டுள்ளது. 
பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தில், இந்திய மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக இந்திய மத்திய மற்றும் தமிழ் நாடு மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும்
 நடைபெற்றன.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படடதுடன், தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதியரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதியரசர்கள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பை
 வழங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமை
 சட்டப்படி தவறு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் படி முடிவுகளை எடுக்க  தமிழக ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 142 பிரிவை பயன்படுத்தி இந்திய உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர். 
30 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அமர்வு இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 17 மே, 2022

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் அனுப்பினால் ஆபத்து

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பறிமாற்றம்) சோதனையிட பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை
 ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 50,000 யூரோக்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பணம் எவ்வாறு சம்பாதித்தார்கள் அல்லது எவ்வாறு கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 47,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை முழுமையாக முறியடிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை புறக்கோட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெற்று வருவது 
கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
 வருகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 16 மே, 2022

இலங்கையில் பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி 
கோரியுள்ளனர்.
நாடடின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மே மாதம் 9ஆம் திகதி வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம்  கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு, 071 859 4901, 071 859 4915, 071 859 2087, 071 859 4942, 071 232 0145, 011 242 2176

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





ஞாயிறு, 15 மே, 2022

நாட்டில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் பிரதமர் ரணிலின் அதிரடி

இலங்கை  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தன்னெழுச்சியான போராட்டமும் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.கோட்டா கோ கோம் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாது என நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க 
அறிவித்தார்.
கோட்டா கோ கம போராட்டப் பகுதியை பராமரிப்பதற்கும் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று கோட்டா கோகம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார்.
இதற்கிடையில், போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், போராட்ட பகுதிகளில் இடைவிடாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் பிரதமர் ரணில் உறுதியளித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 14 மே, 2022

இலங்கையில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் தென்மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் 
கூடிய மழை பெய்யும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய 
மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது 40 – 50 கிலோமீற்றர் 
வேகத்தில் வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தல் 
வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் 
விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2022

இலங்கை பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

2022, மே 09 அன்று இலங்கையின் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்; தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை
 கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இந்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் 
கேட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொதுமக்கள் தமது தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைதியின்மை காரணமாக காயங்கள், சேதங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள், இந்த தொடர்பு எண்கள் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 12 மே, 2022

நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்.12-05-2022. இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியிருந்தனர்.
ம் என அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி மற்றும் நிறுவன அடையாள அட்டைகளுடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பணிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தேவையின்றி மற்றும் அனுமதியின்றி ஏனையோருக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்து நடமாட அனுமதியில்லை எனவும், இவ்வாறு நடமாடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணைச்செய்திகள் >>>


இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி
 விலகியிருந்தார்
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை
 நடத்தியிருந்தார்.
அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் மேல்மாகாண அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் 
தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்12-05-2022. இன்று மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.
சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளை நடாத்துவது சாத்தியமற்றது என்பதனால் பாடசாலைகளை நடாத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளை நாளைய தினம் நடாத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்
 தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்புகள் வலய கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ஹோட்டலுக்கு தீவைப்பு

தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி
 வெளியிட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் கடந்த திங்கட்கிழமை அரசாங்க ஆதரவு தரப்பினர்கள் ஏற்படுத்திய குழப்பம் வன்முறையாக மாறியது. இதனால் பலர் கொல்லப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீவைத்து கொழுத்தப்பட்டது. மேலும், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள்
 தீவைத்து எரிக்கப்பட்டன.
ந்த வகையில், தங்காலை பெலியத்த வீதியிலுள்ள கார்ல்டன் கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், தங்காலை மெடில்ல பிரதேசத்தில் உள்ள ராஜபக்சக்களுக்கு சொந்தமான ஹோட்டலுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் தங்காலை – பெலியத்த வீதியிலுள்ள கார்ல்டன் கட்டிடம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




புதன், 11 மே, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலை; இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவும் படைத்தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவர்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது எனவும் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



Blogger இயக்குவது.