இன்றையதினம்.01-05-2022. இடம்பெறவுள்ள மே தின ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு
பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்
வீதி பாதுகாப்பை
வழங்குவதுடன் போக்குவரத்தை வழமையாக பேணுவதற்கும் பொலிஸார் ஏற்கனவே ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் நுகேகொடையில் நடைபயணங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக