கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று
உத்தரவிட்டுள்ளது.
நாடு பூராகவும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறிப்பிட்ட தனிப்பட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன், சமயபாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை
எழுதி சிக்கியுள்ளார்.
சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நேற்று(24) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக