வியாழன், 31 மார்ச், 2022

ஹிரணவில் தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை ஹிரண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

32 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த சகோதரியுடன் தனது தந்தை பாலியல் உறவு கொள்வதை நேரில் பார்த்ததாக இளைய சகோதரியொருவர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்த வேளை சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் மகளுக்கு எதிராக இந்தக் குற்றங்களைச் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் நேற்றிரவு (மார்ச் 27) வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்ததாக காவல்துறையினர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாணந்துறையில் தனது ஒன்பதாம் ஆண்டு பாடசாலைக் கல்வியின் போது பாடசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் மனநலம் பாதிக்கப்பட்டு பாடசாலைக் கல்வி தடைபட்டதையடுத்து பெற்றோரின் கவனிப்புக்கு மத்தியில் 
வீட்டில் தங்கியுள்ளார்.
சிறுமியின் தாயிடம் வினவியபோது தானும் இதனை உணர்ந்ததாக தெரிவித்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 24 மார்ச், 2022

இலங்கையில் நாளைய தினம் நீண்ட நேர மின்வெட்டு

நாட்டில் நாளைமின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி நேரம் 30 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதற்கிடையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L மண்டலங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரமும் இருக்கும்.
40 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என பொதுப்பணித்துறை தலைவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2022

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய மது போத்தல்களில் மாற்றம்

 

தேசிய மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாராயம் மற்றும் பியர் மதுபான போத்தல்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க 
கூறியுள்ளார்.
ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்படுவது ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட முடியாத தேசிய மதுபான போத்தல்களில் டிஜிட்டல் அடையாளத்தை பதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

திங்கள், 21 மார்ச், 2022

வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
அரச பேருந்தொன்றினை தனியார் பேருந்தொன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி 
தடம்புரண்டுள்ளது.
குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்தவர்களை மக்கள் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>







சனி, 19 மார்ச், 2022

பலத்த காற்றுடன் கூடிய மழை கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில்  பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் 
அடைந்துள்ளன.
மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
மேலும் பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 18 மார்ச், 2022

நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை

எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு இன்று அதிகாலை சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் போன்று மஞ்சள் நிற கலனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 பேர் கொண்ட குழு, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடக்கும் போது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் எவ்வளவு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளை சம்பவம் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையர்களை துரிதமாக கைது செய்ய முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 17 மார்ச், 2022

இலங்கை இக்கட்டான நிலையில் புலம்பெயர் மக்களின் வெறுப்பான முடிவால்

புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையீனம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையில் தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடிக்கும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் 
தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
இலங்கையின் தற்போதைய நிலையானது, புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு தமது பணத்தை அனுப்பும் போது இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், அதில் இருக்கக்கூடிய சிக்கல் என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இது மிக நீண்ட காலமாக இருக்கின்ற ஒரு 
பிரச்சினையாகும்.
அது மாத்திமின்றி புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீது இருக்கக்கூடிய வெறுப்பும் இந் நிலைமைக்கு மிக முக்கியமான ஒரு 
காரணமாக அமைத்துள்ளது.
நாட்டில் இரண்டு வகையான அந்நியச்செலாவணி வீதம் இருந்தது. மத்திய வங்கி கொடுத்தது 203, 193 என இரு வீதங்கள் இருந்தது
ஒன்று ஒரு வங்கி ஒரு டொலரினை உங்களிடமிருந்து வாங்குவது 193 ரூபா, இன்னுமொருவர் அந்த டொலரை கேட்கிறார் எனில் அவருக்கு 203 ரூபாயாக இருந்தது. இது தான் அந்த மத்திய வங்கி நிர்ணயித்த
 நாணய வீதம்.
ஆனால் பொருளாதார நிலைமை மோசமடைந்து அந்நிய செலாவணிக்குத் தட்டுப்பாடு வந்தவுடன் வங்கிகள் இயங்கமுடியாத 
நிலைக்கு வந்தது.
அதாவது அந்நிய செலாவணி கையிருப்பு வங்கியிடம் குறைந்துவிட்டது. ஆகவே வங்கிகளிடம் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறவர்கள் வங்கியுடன் தொடர்புபட்டபோது அவர்களுக்குக் கிடைத்த வீதம் 
குறைவடைந்தது.
அவர்களுக்கு அது போதாது இருந்தது. இந்த நிலையில் தான் ஒரு கள்ளச்சந்தை உருவானது. கள்ளச்சந்தை 250, 260 ரூபாய்க்குப் போய்க்கொண்டிருந்தது. உத்தியோக பூர்வ நாணய மாற்று வீதம் 203 ரூபாயாக இருந்தது.
அது தமிழர்கள் மட்டுமல்ல கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த அனைவரும், தமிழர் சிங்களவர், முஸ்லிம் எனச் சகலரும் உண்டியல் ஊடாக தான் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஏனெனில் தங்களுடைய வீதம் போதாமலிருந்தது. இதனை தான் நிமல் சிறிபாத டி சில்வா அப்போதே சொல்லிக் கொண்டிருந்தார் ௨௪௦ ரூபா கொடுங்கள் என்று.
எல்லோருக்கும் அப்போதே அரசாங்கம் கொடுக்கும் வீதம் போதாது கள்ளச்சந்தையில் அந்நிய செலாவணிகள் வாங்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன என்பது விளங்கியது.
இன்றும் இந்தளவுக்குப் பெறுமதி குறைக்கப்பட்டு 270,260,275 வந்த பின்பும் நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை, இப்பொழுதும் ரூபாய்க்குக் கள்ளச்சந்தையில் ஒரு டொலரின் விலை 290, 295 ரூபாய்க்கு 
போவதாக நான் அறிகிறேன்.
ஆகவே இன்னும் அந்த உண்மையான நம்பிக்கை வரவில்லை. வெளிநாட்டு நீதியுடன் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் உண்மையான நம்பிக்கை வரவில்லை. காரணம் பொருளாதாரத்திலுள்ள நிச்சயமற்ற தன்மை.
இந்த நிச்சயமற்ற தன்மை எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போதே எல்லோரும் உத்தியோகப்பூர்வமாக அனுப்பத்
தொடங்குவார்கள்.
அதுவரை இரண்டும் இடம்பெறும். சிலர் உத்தியோகப் பூர்வமாகவும் அனுப்புவார்கள். உயர்ந்த லாபம் பெற விரும்புவோர் கள்ளச்சந்தை ஊடகவும் அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.
உண்டியல் ஊடக அனுப்புவது சட்டவிரோதமானது. அது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது. அதாவது யாரவது அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மத்திய வங்கியின் சட்டங்களின் படி சட்டவிரோதமானது.
நம்பிக்கை வராத போது வெளிநாட்டிலிருப்பவர் தமது நண்பரூடாக உண்டியல் முறையில் தமது உறவினருக்குப் பணத்தை வைப்பு செய்யும் போது அதை இலங்கை அரசாங்கம் இலகுவில் கண்காணிக்க முடியாது. ஏனெனில் வந்த விடயம் எவருக்கும் தெரியாது.
ஆகவே நீண்ட காலம் இருக்கும் இந்த நிலைமை வழமைக்குத் திரும்பி ஒரு நம்பிக்கை வரும் வரைக்கும் சரிசெய்ய முடியாது சிலர் உத்தியோகவர்வமாக அனுப்புவதை விரும்பவில்லை, அதற்கு நேரமும் ஒரு காரணம். ஏனெனில் உத்தியோகப்பூர்வமாக அனுப்புவதை விட உண்டியல் உடைக்க அனுப்பும் போது குறுகிய காலத்தில் அனுப்பிவிடலாம்.
நாட்டில் புலம்பெயர் இலங்கையர்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதற்கு ஒரு காரணம். ஏனெனில் தாம் எதிர்பார்த்த விடயங்கள் எதிர்பார்த்த திசையில் போவதில்லை. ஆனால் அவசியத் தேவைக்கு அவர்கள் பணம்
 அனுப்பித்தான் தீரவேண்டும்.
இருந்தாலும் நாட்டில் ஒரு விதமான வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது, ஏனெனில் தாம் நினைத்த மாதிரி இந்த அரசாங்கம் செயற்படவில்லை. நினைத்த மாதிரி பொருளாதாரம் செல்லவில்லை, ஆகவே
 அந்த வெறுப்பு இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட விடயங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் வெறுப்பு நிலையைக் காட்டுவார்களாக இருந்தால் இலங்கை இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை யாராலும் தடுக்க முடியாது என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 15 மார்ச், 2022

நாட்டிலுள்ள பணக்காரர்களும் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏழைகளுக்கு மேலதிகமாக பணக்காரர்களும் உணர்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை பணக்காரர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடந்த காலங்களில் கூட இரண்டு வகை மக்கள் இருந்தனர். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் ஏழைகள் மாத்திரமே
 பாதிக்கப்பட்டனர்.
இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பணக்காரர்களும் இன்று உணருகின்றனர். நாடு இன்று எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை யாரும் விளக்க வேண்டியதில்லை.
பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தந்தைகள் 
தற்கொலை செய்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. LIOC ஆரம்பத்தில் அவற்றின் விலைகளை அதிகரித்தது மற்றும் CPC சில நாட்களுக்குப் பின்னர் அதைத் தொடர்ந்தது.
கடந்த ஆட்சியில் எரிபொருள் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது சில அரசியல்வாதிகள் மாட்டு வண்டியில் செல்ல ஆரம்பித்து சைக்கிளில் நாடாளுமன்றம் வந்தனர்.எனினும் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தவர்களே விலையை 75 ரூபாவினால் 
அதிகரித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வுக்கு ரஷ்யா – உக்ரைன் போர்தான் காரணம் என அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. தொற்று நோயின் போது எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போது மக்களுக்கு நன்மைகளை வழங்க 
அரசாங்கம் தவறிவிட்டது.
தற்போது ரூபா மதிப்பு சரிவு பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணமும் குறைந்துள்ளது.ஹோட்டல்களில் சமைப்பது பிரச்சினையாகிவிட்டதால், எரிவாயு பற்றாக்குறையால் சுற்றுலாத்துறை புதிய சவாலை எதிர்கொள்கிறது.எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவாக உணவு கிடைக்கவில்லை என்றால் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவார்களா என கேள்வி 
எழுப்பியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 14 மார்ச், 2022

உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக எச்சரிக்கை

புதிய“டெல்டக்ரோன்” (Deltacron) என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனை உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் உறுதிசெய்தார். இந்த திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்றும் உலக சுகாதார 
அமைப்பு கூறியது.
தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி 
நிறுவனம் குறிப்பிட்டது.
அதேவேளை அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு 
நிறுவனம் கூறியது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை 14-03-2022.அன்றுமுதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் 
தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,13-03.2022.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது.
அதேவேளை நோயாளிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 13 மார்ச், 2022

நரேந்திர மோடி மற்றும் ஜெய்சங்கர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன.
இதற்கிடையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் கரிசனை இந்த மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வருகிறது.பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக 
இந்தியாவின் கரிசனை இலங்கையினால் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது.இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, பிம்ஸ்டாக் என்ற பல்துறை, 
தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு
 வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில்
 வந்திறங்கவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியன்று பலாலி விமான நிலையத்துக்கு அவர்கள் வரவுள்ளனர் அவர்களை வரவேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்
இதேவேளை மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.இந்தநிலையில் ஆசியாவின் மிக வெற்றிகரமான அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நரேந்திர மோடி, தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தனது எட்டாவது ஆண்டில் ஆட்சி செய்கிறார்.
ஐந்து முக்கிய மாநிலங்களுக்கான அண்மைய தேர்தலில், மோடியின் பாரதிய ஜனதா கட்சி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.அத்துடன் பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் இலங்கையின் 2.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக 
வைத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக இந்தியாவின் பணவீக்க 
விகிதம் 6% ஆக சீராக உள்ளது,
எனினும் இலங்கையில் மார்ச் 10 ஆம் திகதி, எரிபொருள் விலையுயர்த்தப்படுவதற்கு முன்னர் பணவீக்கம் 16.9% ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




நாட்டில்2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 12-03-2022.அன்றிரவுவெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.இந்த பரீட்சையில் தமிழ் மொழிமூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் 
தோற்றியிருந்தனர்.
மேலும் இப்பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 12 மார்ச், 2022

யாழ் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் விபத்து

யாழ் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் சாரதிக்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளரை ஏற்றிச் செல்லும் வான் என தெரிவிக்கப்பட்டது. பொறியியலாளரை வீட்டில் இறக்கி விட்டு வரும் போது இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 
இடம்பெற்றுள்ளது.
வானின் சில்லு காற்று குறைந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியது.
மன்னாரைச் சேர்ந்த வான் மற்றும் சாரதி என 
அறியமுடிகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





நாட்டில்ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம்

கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் 11-03-2022.அன்று உத்தரவிட்டுள்ளார்.
34 வயதுடைய ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை நான்கு வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தற்போது 20 வயது எனவும் குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை தனது அடையாள அட்டையை பயன்படுத்தி கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் முன்பதிவு செய்து மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில்
 தெரியவந்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு
11-03-2022.அன்று  உத்தரவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> 

வெள்ளி, 11 மார்ச், 2022

யாழ் நல்லூர் பிரதேச சபை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை அனைத்து உதவுமாறு தவிசளார் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்இது குறித்து மேலும்
 தெரிவிக்கையில்,
மாலை நேரங்களில் மின் விளக்குகளை நேரகாலத்துடன் அணைத்து உதவுமாறும்,அதே நேரம் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழ்கள் இனங்காணப்பட்டு துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை மீளவும் பொருத்தி கெள்வதில் மிகுந்த சிரமங்களை மக்கள் எதிர் 
கொள்ள வேண்டி வரும்.
ஆகவே தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு பிரதேச மக்களிடம் நல்லூர் பிரதேச சபை தவிசளார் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள்
 விடுத்துள்ளார்.
.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 9 மார்ச், 2022

நாட்டில் மதுப்பிரியர்களுக்கு தற்போது வெளியான அதிர்ச்சி செய்தி

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன. மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் 
தயாரிக்கிறது.
இருப்பினும், 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் 
தெரிவித்தார். 
பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றரும் உற்பத்தி செய்யப்படுகிறது.டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி, இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள்
ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், திட்டமிட்டபடி எத்தனால் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 8 மார்ச், 2022

யாழ் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக ஆயிரம் தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பருத்தித்துறை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையானது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
தேசிய பாடசாலையாக மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வானது இன்று காலை 11:00 மணியளவில் பாடாசாலை மாநாட்டு மண்டபத்தில்  அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலமையில் இடம் பெற்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்களை வீதியிலிருந்து விழா மண்படபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கள விளக்குகள் 
ஏற்றப்பட்டன.
மங்கள விளக்குகளை இந்து, கிறிஸ்தவ குருமுதல்வர்கள், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மீன்பிடி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி கு.சிவராம் , ஆளுநரின் பிரதிநி பாடாசாலை அதிபர் உட்பட்ட பிரதம அதிதிகள் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ மத குருமார்களின் 
ஆசி உரைகள்
இடம் பெற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலமையில் இணையவளி நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்தன மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் பலரும் 
உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சு அதிகாரியால் தேசிய பாடசாலையாக. மாற்றுவதற்க்கான சான்றிதழ் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தாவிடம் கையளிக்கப்பட அதனை மீன்பிடி அமைச்சர் பாடசாலை அதிபர். திருமதி பாலராணி சிறிதரனிடம் 
கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி, கு. சிவராமன், மாவட்ட செயலர் க.மகேசன், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், பருத்தித்துறை பிரதேச செயலர்
 திரு சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராஜ். பாடசாலை சமூகம், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் 
கலந்து கொணடனர். 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் சீமெந்து தொழிற்சாலை திறப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள புதிய தொழிற்சாலை
 07-03-2022.அன்று  திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது. இதன்படி, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 06 உள்ளுர் சீமெந்து தொழிற்சாலைகளின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை 
இதுவாகும்.
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாட்டப்பட்டது. 
இந்த புதிய சீமெந்து ஆலையின் மூலம் வருடத்திற்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் சீமெந்து சந்தைக்கு வெளியிட முடியும் என
 மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , சந்தையில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைப் போக்கக்கூடிய வகையில் புதிய சிமென்ட் தொழிற்சாலை அமையும் என கணிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் மகளிர் தினத்தன்று யாழ் பெண்ணின் பாடல்

FabDb Records இன் தயாரிப்பில் படைப்பாளிகள் உலகம் வெளியீடாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக வெளிவந்திருக்கும் பாடல் “முகம்” – எழுந்து வா.ஜொனாவின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி 
பாடியுள்ளார் ஆரணி.
ஆரணி, சௌமி, அஜீரா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை வட்ஸூவும், படத்தொகுப்பை பிரியந்தனும் மேற்கொண்டுள்ளனர். காந்தரூபனின் கலை இயக்கத்துடன் பாடலை சிறப்பாக இயக்கியிருக்கின்றார் நிவேதிகன்.அவர்களின் முயற்சிக்கு நீங்களும் ஆதரவு வழங்க பாடலை
கீழுள்ள YouTube link இல் சென்று பார்வையிடுவதுடன் உங்கள்  ஆதரவினையும் வழங்குங்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 6 மார்ச், 2022

நாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுங்கத்துறையின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த குறித்த பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் 
தடுத்து நிறுத்தினர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காலணியின் அடியில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 393 கிராம் தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு இந்திய ரூபாய் 18.84 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணயச்செய்திகள் >>>




Blogger இயக்குவது.