புதன், 9 மார்ச், 2022

நாட்டில் மதுப்பிரியர்களுக்கு தற்போது வெளியான அதிர்ச்சி செய்தி

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன. மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் 
தயாரிக்கிறது.
இருப்பினும், 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் 
தெரிவித்தார். 
பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றரும் உற்பத்தி செய்யப்படுகிறது.டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி, இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள்
ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், திட்டமிட்டபடி எத்தனால் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.