செவ்வாய், 8 மார்ச், 2022

யாழ் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக ஆயிரம் தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பருத்தித்துறை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையானது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
தேசிய பாடசாலையாக மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வானது இன்று காலை 11:00 மணியளவில் பாடாசாலை மாநாட்டு மண்டபத்தில்  அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலமையில் இடம் பெற்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்களை வீதியிலிருந்து விழா மண்படபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கள விளக்குகள் 
ஏற்றப்பட்டன.
மங்கள விளக்குகளை இந்து, கிறிஸ்தவ குருமுதல்வர்கள், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மீன்பிடி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி கு.சிவராம் , ஆளுநரின் பிரதிநி பாடாசாலை அதிபர் உட்பட்ட பிரதம அதிதிகள் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ மத குருமார்களின் 
ஆசி உரைகள்
இடம் பெற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலமையில் இணையவளி நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்தன மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் பலரும் 
உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சு அதிகாரியால் தேசிய பாடசாலையாக. மாற்றுவதற்க்கான சான்றிதழ் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தாவிடம் கையளிக்கப்பட அதனை மீன்பிடி அமைச்சர் பாடசாலை அதிபர். திருமதி பாலராணி சிறிதரனிடம் 
கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி, கு. சிவராமன், மாவட்ட செயலர் க.மகேசன், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், பருத்தித்துறை பிரதேச செயலர்
 திரு சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராஜ். பாடசாலை சமூகம், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் 
கலந்து கொணடனர். 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.