செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மீள கையளிக்கப்படும் மயிலிட்டி துறைமுகம் ; மங்கள சமரவீர!

மயிலிட்டி – துறைமுகத்தை அடுத்த வருடத்திற்குள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் வடக்கிற்கு வந்து, நேரடியாக மக்களது பிரச்சினைகளை பார்க்கவில்லை என்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே ஆட்சியை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவினரின் வழிகாட்டல் நடமாடும் சேவை, நேற்று யாழ். நல்லூர் ஆலய பகுதியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் இவ்வாறு
 குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியில் குறிப்பிடத்தக்க அளவு காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் செய்யவில்லை என்றும் அவர் 
தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விஷ ஊசி ஏற்றப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அரசாங்கத்தினுடாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன், இங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்து எமது மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறை மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களை சென்று
 பார்வையிட்டிருந்தார்.
இதன்போது, மக்கள் படுகின்ற துன்பங்களை பார்த்து மிகவும் மனவேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார். மக்களுடைய பிரச்சினைகளை தனது தொலைபேசியில் படமெடுத்துள்ள அவர், இவற்றை நாடாளுமன்றத்திலே அனைவருக்கும் காண்பிக்க போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நடாத்தப்பட்ட கொடுமைகளுக்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசாங்கமானது மயிலிட்டி, துறைமுகத்தை விடுவிப்பதுடன், அப்பகுதிகளிலுள்ள மக்களது சொந்த காணிகளையும் மக்களிடம் மீளவும் கையளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனூடாக ஆறு மாத காலங்களில் அம் மக்கள் தமது தொழில் துறைகளில் முன்னேற்றமடைந்து அரசாங்கத்திற்கும் பொருளாதார ரீதியில் பக்கபலமாக செயற்படுவார்கள்.
அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்புக்களை சந்தித்த மக்களுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தற்போது எழுந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றியுள்ள விடயம் தொடர்பாகவும் உடனடியான தீர்வை வழங்கும் வகையில் நடமாடும் சேவைகளை வழங்கி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க 
வேண்டும்.
அல்லது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மனைவி கணவன் உண்ட தட்டில் உண்ண இதுதான் காரணம்?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கு ம் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்.
பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.
என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு.
மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சொக்க வைக்கும் குட்டீஸ்களின் கலக்கல் காட்சி நடனம். !

வீட்டில் செல்லக்குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கு இடமிருக்காது என்றே கூறலாம் ஆம் நம் வீட்டு செல்ல குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான்.
அதிலும் மழலையர் தொடக்க பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு அங்கு பல போட்டிகள் நடத்துவர். மாறுவேட போட்டி, நடனம் என அவைகளில் கலந்து கொண்டு நின்றாலே அதுவே பெற்றோர்களுக்கு பெருமையும் சந்தோஷம் கூடி கொள்ளும்.
அதிலும் மேடையேறி அவர்கள் செய்யும் ஒரு சின்ன அசைவோ அல்லது பேச்சோ அங்கு இருக்கும் அனைவரின் கவனத்தையும் 
கொள்ளை கொள்ளும். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 27 ஆகஸ்ட், 2016

நீங்கள் எமனை நண்பணாக்கனுமா? இதோ அதற்க்கான வழி!..

தினமும் திரிகடுகம் திரிபலா எடுத்துக்கொள்ளுங்கள் எமன் உங்களுக்கு நண்பன்
சங்கக்காலம் முதற்கொண்டே நம் தமிழர்கள் சித்தமருத்துவத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த மும்மருந்து மற்றும் முப்பலை என்ற இரண்டு மருந்துகள் ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தின்று வர அவனுக்கு எந்த வித நோய்களும் அண்டாது.
மேற்சொன்ன மும்மருந்து என்பது திரிபலாசூரணம் ஆகும். இந்த திரிபலா சூரணத்தில் மூன்று மூலிகை மருந்துகள் உள்ளது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றும் உள்ளது. இந்த திரபலாசூரணத்தில் மூன்று மருந்துகளும் இடித்து சலித்து பொடியாக்கி கலந்திருக்கும்.
திரிபலாவின் நன்மைகள்
1. திரிபலாவில் கலந்துள்ள நெல்லிக்காய்ப் பொடியானது. இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது.
2. நரைமுடி, பித்தம், முடிகொட்டுதல், சருமம் சுருக்கமடைதல், முதிர்ந்த தோல், போன்றவைகள் ஏற்படாமல் இந்த நெல்லிக்காய்ப் பொடி உதவுகின்றது.
3. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கவல்லது.
4. மலச்சிக்கலை போக்க கடுக்காய்ப் பொடி உதவுகின்றது.
5. தான்றிக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றது.
6. திரிபலா இரத்தத்தை சுத்தம் செய்கின்றது.
7. புண்கள் மற்றும் கொப்புளங்கள் வராது. உடல் சூட்டை சரிசெய்து விடுகின்றது.
8. செரிமானம், அஜீரணம் முதற்கொண்டு அனைத்தையும் சரிசெய்து விடுகின்றது.
திரிகடுகத்தின் நன்மைகள்
திரிகடுகம் பெயரே மூன்று கடுகத்தை உள்ளடக்கியது. முப்பலை என்று இதற்கு பெயர். திரிகடுகத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூலிகைகள் உள்ளது. இந்த மூலிகை மிகவும் பயன்தரக்கூடியது. திரிகடுகத்தை சாப்பிட அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
1. திரிகடுகத்தில் உள்ள மிளகு வாயுப்பிரச்சினைகள், கபம் போன்றவற்றை நீக்கவல்லது.
2. சுக்கு வாயுத்தொல்லை, இருமல், செரிமானப்பிரச்சினைகள் போன்றவற்றை தீக்குகின்றது.
3. திப்பிலி ஆண்மையை, அழகை, வடிவத்தை தரக்கூடியது.
4. திப்பிலி உடலுக்கு வலிமையும், வளத்தையும் தரும்.
5. திப்பில் ஒரு வெப்பப்பொருள். உடல் வெப்பத்தை சமன் செய்து ஆஸ்துமா நோயை விரட்டும்.
6. தொடர்ந்து திரிபலா சாப்பிட்டு வர உடலில் இதய, ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள் அரவே வராது.
7. நீண்ட நாட்கள் வாழ திரிபலா ஒரு முக்கிய மருந்து.
சாப்பிடும் முறை
காலையில் பல் துலக்கிவிட்டு அல்லது வாய் நன்றாக கொப்பளித்துவிட்டு ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட வேண்டும். தவறாமல் வெறும் வயிற்றில் இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் தினமும் இரண்டு நெல்லிக்கனியை சாப்பிட்டதற்கு 
சமமாகும்.
திரிபலாவையும் திரிகடுகத்தையும் ஒன்றாக சாப்பிட வேண்டாம். இரண்டும் வேறு வேறு வேளையில் சாப்பிடலாம். காலையில் திரிபலா என்றால் இரவில் உறங்குவதற்கு முன் பால் அல்லது தண்ணீருடன் ஒரு ஸ்பூன் திரிகடுகத்தை பொடியாக சாப்பிட வேண்டும்.
வளமுடன் வாழ இந்த உணவுகள் மிக முக்கியமானது. நோய் வந்தவுடன் ஆயிரங்களாகவும், லட்சங்களாகவும் மருத்துவனைியில் செலவழிக்காமல். திரிபலாவைவும், திரிகடுகத்தையும், தம் குடும்பத்தோடு மருந்தை உணவாக உட்கொள்ளவேண்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு!!!

மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி
 வருகின்றனர்.
மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா , லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 மேலும் 
பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ரோம் நகருக்கு வட கிழக்கே, 100 கி.மீ. தொலைவில் புதன்கிழமையன்று அதிகாலை 3.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 24 ஆகஸ்ட், 2016

எங்களை ஆளாக்கிய பெற்றோரை ஏளனம் செய்யலாமா ?

இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதிப்பதில்லை என்று பலர் கூற கேட்டிருப்போம்.
படிப்பறிவில்லை, நாகரீகமாக நடந்துகொள்ளாமல் பட்டிக்காடு போல் நடந்து கொள்கிறீர்கள் என பெரியவர்களை ஏளனம் பேசுவார்கள் 
அவர்கள்.
அப்படி ஒரு அப்பா-மகன் நடுவில் நடக்கும் ஒரு உரையாடலை பதிவு செய்துள்ளது இந்த வார செல்பி 
அக்கம் பக்கம்...
காணொளி இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

285 மில்லியன் ரூபா செலவில் காரைநகரில் தொழிற்சால¨!


காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது.
சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் நாளை இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அனைத்துலக கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, காரை நகரில் புதிய படகு கட்டுமான தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது.
சிறிலங்காவின் மீன் உற்பத்தியில் வடக்கு மாகாணம் முதன்மையான பங்கை வகித்து வரும் நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சாரதி அனுமதிப்பத்திரங்களில்உடல் உறுப்பு தானம் உள்ளடக்கம்

தமது உடல் உறுப்புகளை தானம் செய்யும் விரும்புவோரது விருப்பங்களையும் சாரதி அனுமதிப் பத்திரங்களில் உள்ளடக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவால் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் சாரதி அனுமதிஅட்டையிலேயே இவை உள்ளடக்கபடவுள்ளதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில்சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறந்த நபர்களது உடல் உறுப்புகள் பெறமுடியாத நிலையில் திடீர் விபத்துகளில்உயிரிழக்கும் சாரதிகளின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள்அதிகம் காண்படுவதானால் அதற்கான அனுமதியை சாரதிகளிடம் பெற்று அதனை சாரதிஅனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்குவதற்க எதிர்பார்த்துள்ளதாகவும்
 அரசகுறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தேகாரோக்கியத்துடன் காணப்படும் நபர்கள் திடீர் விபத்தினால்இறக்கும் போது அவர்களது உடல் அவயங்கள் மற்றவர்களுக்கு பிரயோசனம் படும் எனவும்சுகாதார அமைச்சர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் புதிய தேசிய அடையாள அட்டை !!

நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டை. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் இவை..
12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன.
இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும்.
இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும்.
இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும்.
எனினும் நேற்று முதல் 12 இலக்கங்களை கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஆங்கில இலக்கம் சேர்க்கப்பட மாட்டாது.
பழைய 9 எண்களைக் கொண்ட நடைமுறை பின்பற்றப்படும் போது, 1916ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும், 2016ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் நிலை காணப்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்காகவே இந்த 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும், புதிய எண்தொடர் கொண்ட அடையாள அட்டையைபெற்றுக் கொள்ளும் வரையில், தற்போதுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் என்றும் ஆட்பதிவு திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இலட்சக்கணக்கானோர் மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில்பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர்.
இம்முறை திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
திருநாள் திருப்பலி நிறைவில் மடுமாதா திச்செரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம் பெற்றது. 
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருவிழா கடந்த 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி. தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றதுடன் நேற்று நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இன்று மும் மொழிகளிலும் திருப்பலி
 பூஜைகள் நடை பெற்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 15 ஆகஸ்ட், 2016

குண்டு வெடிப்பு! ஒருவர் பலி, மற்றும் ஒருவர் படுகாயம்!

முகமாலையில் இடம்பெற்ற இருவேறு வெடிப்பு சம்பவங்களில் ஒரு உயிரிழந்துள்ள அதேவேளை, மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
கண்ணிவெடி அகற்றப்படாத ஆபத்து மிக்க குறித்த பிரதேசத்திற்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து, அதன் மருந்தை விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிட்டார் சந்திரிக்கா?

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்த காணிகள் அற்ற 129 குடும்பங்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் 
குடியேற்றப்பட்டனர்.
இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கா இராணுவம்இ தலா 25 இலட்சம் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இந்த வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் பணியில் 
ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் குறித்த வீட்டு திட்டத்தை பார்வையிட்டார்.
இந்த விஐயத்தின்போது யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ்சேனநாயக்காவும் கலந்து கொண்டார்.
இதேவேளை வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரின் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு
 உள்ளன.
அந்த மக்களின் காணிகளை அரசாங்கம் கட்டம் கட்டமாக விடுவித்து வரும் நிலையில் எஞ்சிய காணிகளை விடுவிக்குமாறு வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 13 ஆகஸ்ட், 2016

விமான நிலையத்தில் கோப்பி குடிக்க சென்ற மகிந்தவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு சென்ற சமயத்தில், தேனீர் பருகும் அவசியம் உண்டா என அதன் ஊழியர் ஒருவர் வினவியுள்ளார். இதன்போது தனக்கு ஒரு கோப்பை தேனீர் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஒரு கோப்பை கோப்பியும், அதற்காக 4500 ரூபா கட்டண சீட்டு ஒன்றும் மஹிந்தவிடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் இவ்வாறான சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எப்படியிருப்பினும் விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் யாருக்கும் தேனீருக்கு கட்டணம் அறவிடப்படாதென விமான நிலையத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் கேட்டரிங் சேவையை பெற்றுக் கொண்டால் மாத்திரமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

எல்லோருக்கும் இந்திரன் ரவி இவர்களை தெரியும்?

எத்தனை ஆயிரம் எம்மவர்களை சிரிக்க சிந்திக்க பல குறு நாடகங்களை முகபுத்தகம் ஊடாக பதிவேற்றி எங்கள் அகப்புத்தகத்தில் நிறைந்த பிரான்ஸ் வாழ் எம் தேசத்தின் கலைஞர்கள் இந்திரன் & றவி அண்ணாமார் …
எத்தனை அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர் தமிழ்தேசியத்தின் வழியில் பயணிக்கும் கலைஞன் தானே பாடலெழுதி பாடும் வல்லோன் நடிகன் அறிவிப்பாளன் பல்சுவை கலைஞன் இந்திரன் அண்ணா ..
அவரோடு இணைந்து தன் திறனை காட்டும் றவி அண்ணா …
இவர்களின் கலைத்திறமையை உணர்ந்து தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இவர்களுக்கான இரசிகர்கள் பட்டாளம். என புகழின் உச்சியினை தொட்டு நிற்க்கும் இந்த கலைஞர்களை…
வாழ்த்தவும் ஊக்கபடுத்தவும் இரசிகர்கள் இருந்தும்…
இவர்களுக்கான தளங்களை
ஊடகங்களும் நிகழ்வுகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களும் ஏன் மறந்து போகின்றார்கள் என்னும் கேள்வி என் மனதில் எழுகிறது ..
எங்கள் தேசத்து கலைஞர்கள் என்றால் இவர்களும் தானே உள்ளடங்குவர்.
என்பதை இனிமேல் சரி உணர்ந்து எம்மின கலைஞர்கள் இவர்கள் மட்டும் அல்ல இன்னும் பல கலைஞர்களை மறந்து அல்லது மறைத்து நிகழ்வுகளை நடத்தாமல் அவர்கள் திறமைகளை மதிப்பளித்து நிகழ்வுகளை நடத்துவோமாக…!
எம்மின கலைஞர்களையும் அவர்கள் திறமைகளையும் வாழ்த்துவது எம் கடமை…
அவர்கள் திறமைகளை அரங்கேற்றுவது
ஊடகங்களினதும் நிகழ்வு நடத்தும் எம்மவர்களின் கடமை….
வாழ்த்துக்கள் இந்திரன்& றவி அண்ணாமார்
எம் கலைஞர்கள் எமக்கானவர்கள் உணர்வோம்
அவர்கள் திறமைகளை வாழ்த்தி வரவேற்ப்போம்..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 3 ஆகஸ்ட், 2016

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்!

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி பெருமளவு பணத்தை கபளீகரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று யாழ்.நகரில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த க.கிருஸ்ணன்(57)என்பவர் பொலிஸாரினால் கைது 
செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீர்வேலி பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி அந்த இளைஞரின் சகோதரரிடம் இருந்து 2 இலட்சம் 87 ஆயிரம் ரூபாய் பணத்தை சூறையாடியிருந்தார்.
பின்னர் எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலையில் தலைமறைவான அவரை நேற்று யாழ்.நகரில் தற்செயலாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி கிருஸ்ணன் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த விசாரணைகளில் மேற்படி பண பறிப்பு சம்பவத்துடன் படையினர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்குள் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவரை சந்திக்க வந்த பெண் ஒருவர் பை ஒன்றில் மதுபானம் மற்றும் கத்தி ஆகியவற்றை வழங்கியதாகவும், கிருஸ்ணன் மதுபானத்தை குடித்த பின்னர் கத்தியால் காணாமல் போன இளைஞனின் சகோதரனை குத்த முயன்று தனக்கு தானே காயத்தை உண்டாக்கியதாகவும்
 கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றய தினம் மாலை 6.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபரை தாம் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் மேற்படி கிருஷ்ணன் என்பவர் காணாமல்போன இளைஞருடைய சகோதரனை போத்தலால் குத்த முயன்றதுடன் தானும் நஞ்சை உட்கொண்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் 
கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உங்கள் குருப் பெயர்ச்சி பலன்கள் 2016

அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60% எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால்
 கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும். பிரபலங்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு விசா வந்து சேரும்.
குருபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் குரு ,6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும்.
 எவ்வளவு பணம்
 வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 காலகட்டத்தில் வீடுமாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்
தாயாரின் ஆரோக்கியம் சீராகும். கடனில் ஒருபகுதியை திரும்பத் தருவதற்கு வழிபிறக்கும். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 7-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால்
 உங்களுடைய உழைப்பிற்கும்
, நீங்கள் சிந்திய வியர்வைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், எதிலும் நிம்மதியின்மை, வழக்கால் நெருக்கடிகள் வந்துச் செல்லும்.இந்த குருமாற்றம் திட்டமிடுதலும், முன்னெச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை
 உணர வைக்கும்.
ரிஷபம்
கிருத்திகை 2,3,4ம் பாதம் 70% ரோகிணி 77% மிருகசீரிஷம் 1,2 ம் பாதம் 85%
எப்போதும் நேர்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு நாலாவிதத்திலும் பாடாய்படுத்திய குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை 5-ம் வீட்டில்
 நுழைவதால் இனி 
புதிய சகாப்தம் படைப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு 
உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையார் உதவிகரமாக இருப்பர். உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு ்தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
வேலை நியமன உத்தரவுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
 செல்வதால் உங்கள் ரசனை மாறும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை
 செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் வீண் செலவினங்கள், பதற்றம் வந்து போகும். விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். குரு 5-ல் நுழைவதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்தபடி உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன்
 புது வேலை
 கிடைக்கும். சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் உங்கள் உழைப்பையும், நல்ல மனதையும், சக ஊழியர்கள் புரிந்துக் கொள்வார்கள். பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.
இந்த குருப்பெயர்ச்சி முனகிக்கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன், எதிலும் முதலிடம் 
பிடிக்க வைக்கும்.
மிதுனம்
மிருகசீரிஷம் 3,4ம் பாதம் 70% திருவாதிரை 65% புனர்பூசம்1,2,3-ம் பாதம் 68%
இளகிய மனசு உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்துக் கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் முடக்கிப் போட்ட குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சகிப்புத் தன்மையையும், விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் மூளைபலத்தால் முன்னேறுவீர்கள். பழையப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால்
 தீர்வு காண்பீர்கள். நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதை 
வாங்குவீர்கள்.
குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகளுக்கு நிச்சயமாகும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் பயனமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வராத பணம் கைக்கு வரும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். 25.11.2016 முதல்
 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வீண் விரயம், தயக்கம், தடுமாற்றம், சகோதர வகையில் சச்சரவு, தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்புகள், முன்கோபம் வந்துச் செல்லும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். ரத்த அழுத்தம் அதிகமாகும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அவருக்கு முழங்கால் வலி, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் சற்று தாமதமாகும்.
இந்த குருப்பெயர்ச்சி நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், எதிர்நீச்சல்
 போட வைக்கும்.
கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம் 73% பூசம் 70% ஆயில்யம் 85%

சொல்வன்மையும், செயல்திறனும் கொண்ட வர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை மூன்றாம் வீட்டில் மறைவதால் எதையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. என்றாலும் உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வரும். என்றாலும் அன்பும், அன்யோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தையாரின் நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த மோதல்களும் விலகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் 3-ம் வீட்டில் குரு தொடர்வதால் எடுத்த வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். தினமும் எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி 

ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.

ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால் இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவது, மாற்றுவது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள்.
இந்த குரு மாற்றம் சோர்வு, சலிப்பு, அலைச்சல், வேலைச்சுமையை தந்தாலும், அனுசரித்துப் போகும் குணத்தால் ஓரளவு 
வெற்றி பெற வைக்கும்.
சிம்மம்
மகம் 77% பூரம் 85% உத்திரம் 1-ம் பாதம் 70%
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டுபவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்மகுருவாக அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தையும், எப்போதும் மருந்து, மாத்திரைகளுமாக சுற்றித் திரிய வைத்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்கள் முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து
 விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். உங்களை கிள்ளுக்கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலை கிடைக்கும். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வழக்கு சாதகமாகும்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான்
 செல்வதால் வசதி, 
வாய்ப்புகள் கூடும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க 
வைப்பதாக அமையும்.
கன்னி

உத்திரம் 2,3,4-ம் பாதம் 65% அஸ்தம் 70% சித்திரை 1,2-ம் பாதம் 73%

கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்களையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக அமர்வதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழுக்கவனம் செலுத்தப்பாருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் காட்டுங்கள். என்றாலும் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்னக் கசப்புணர்வுகள் வந்தாலும் அன்பு குறையாது.

குரு, உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல விதத்தில் முடியும். குருபகவான் ராசிக்குள்ளேயே தொடர்வதால் தலைச் சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசப் 

போய் சண்டையில் முடியும்.கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. காசோலை மற்றும் பத்திரங்கள் விஷயத்தில் கவனம் தேவை. சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நினைத்தது முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 2-ம் வீட்டில் குரு அமர்வதால் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.
இந்த குருப் பெயர்ச்சி உள்மனதில் ஒருவித பயத்தை தந்தாலும் அவ்வப்போது வளைந்துக் கொடுப்பதன் மூலமாக
 வெற்றியைத் தரும்
துலாம்

சித்திரை 3,4-ம் பாதம் 75% சுவாதி 80% விசாகம் 1,2,3-ம் பாதம் 77%

விறுவிறுப்பையும், உண்மையையும் நேசிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கவுரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரயஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பங்குவர்த்தகம் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள்.

பிள்ளைகளை அன்பால் வழி நடத்துங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசுக்காரியங்கள் தாமதமாகி முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும்.

குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதாக அமையும்.
விருச்சிகம்
விசாகம் 4-ம் பாதம் 85% அனுஷம் 90% கேட்டை 91%
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால்
 தீர்வு காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் 
கிடைக்கும்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும்.
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும்.
வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள்.
இந்த குரு மாற்றம் தொடர் வெற்றிகளையும், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தருவதாக 
அமையும் 
தனுசு
மூலம் 68% பூராடம் 72% உத்திராடம் 1ம் பாதம் 77%
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம்! ஓரளவு நன்மையே உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். என்றாலும் குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த
 தொகை கைக்கு வரும்
. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு. குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு
 அதிகரிக்கும்.
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கவுரவப் பதவி தேடி வரும். ஆனால் குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில்
 தாமதம் வேண்டாம்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டா கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று
 வீடு களை கட்டும்.
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத 
பயணங்கள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்க
ளுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை                                                                                உருவாகும்.
இந்த குருமாற்றம் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
மகரம்

உத்திராடம் 2,3,4-பாதம் 80% திருவோணம் 90% அவிட்டம் 1,2-ம் பாதம் 85%

பெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 9-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல உத்யோகம் அமையும். இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். குருபகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.

குருபகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு சில நாட்களில் குடிப்புகுவீர்கள். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது 
வீடு வாங்குவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வீண் பழிச் சொல் வரக்கூடும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள்
 தேடி வரும்.
கும்பம்

அவிட்டம் 3,4 பாதம் 72% சதயம் 85% பூரட்டாதி 1,2,3-ம் பாதம் 77%

மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு பகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். குருபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் குரு அமர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.
கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நெருங்கிய உறவினர், நண்பர்களாக
 இருந்தாலும்
 அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் 
பெறுவீர்கள்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு 
அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடிப் பெற வேண்டி வரும்.
இந்த குருப்பெயர்ச்சி ஒரு பக்கம் பணவரவையும், மறுபக்கம் கூடுதல் செலவுகளையும் தருவதாக அமையும்.
மீனம்
பூரட்டாதி 4ம் பாதம் 80% உத்திரட்டாதி 85% ரேவதி 83%
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வெளியில் சொல்ல முடியாதபடி பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும், வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும்.
உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி
 வீட்டு மனை 
வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம்
 பணம் வரும்.
இந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
புதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து 
பெண் அமையும்.
மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும்
 ஆர்வமின்மை,
 காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால்
 எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் 
நீங்கள் இருப்பீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புத் தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தையும், பணம், பதவியையும் தந்து உயர்த்தும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Blogger இயக்குவது.