வெள்ளி, 2 அக்டோபர், 2026

யாழ் நல்லூரில் அணையா விளக்கு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம்  வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுள்ளது.
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக கடந்த புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் ,வெள்ளிக்கிழமை இறுதிநாள் போராட்டம் மக்கள் எழுச்சி போராட்டமாக இடம்பெறவுள்ளது.
.மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. 
போராட்டத்தின் நிறைவினை அடுத்து , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வேலன் சுவாமி உள்ளிட்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாட்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5ஆவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவைத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும்
 வழங்கிக் கௌரவிப்பார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியற்பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 
வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 680 உள்வாரி மாணவர்களுக்கும், 417 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதுடன், 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


வியாழன், 1 அக்டோபர், 2026

நாட்டில் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்த உணவகம் ஒன்றுக்கு அபராதம்

நாட்டில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை
 விதித்துள்ளது. 
குற்றச்சாட்டை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ள 96 ஆம் இலக்க உத்தரவின்படி, 500 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் வரையான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த உணவகம் 500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தலை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வழக்குத் தொடர்ந்திருந்தது.
அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தலை உணவகங்கள் அல்லது விடுதிகள் உட்பட எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் அந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm

யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை கையளித்த இராணுவம்

 யாழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு  படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர்.
 பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் மாவட்ட செயலக  அலுவலகத்தில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளார்.
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள்,  குறித்த 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 









நாட்டில் பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த அதிவேக இணையத் திட்டம்

நாடு முழுவதும் உள்ள 3,700 பாடசாலைகளை இலக்காகக் கொண்டு  அதிவேக Fiber இணையத்தள வசதிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,200 பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள இணைப்பு வெற்றிகரமாக 
வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 1,564 பாடசாலைகளுக்கும் துரிதமாக அதிவேக இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கல்வி வளங்களை இலகுவாக அணுகுவதற்கு இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாடசாலைகளின் இணையத்தள உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


புதன், 30 செப்டம்பர், 2026

தென் கொரியாவில் சுறா மீன் லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது

தற்போது தென் கொரியாவின் துறைமுக நகரமான புசானில் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள சுறா ஒன்று,  அந்நகரின் புதிய பிரபலமாக மாறியுள்ளது. சுறாவை மீண்டும் கடலுக்குள் அனுப்ப அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.
செப்டம்பர் 18ஆம் திகதி புசானின் வடக்குத் துறைமுகத்தில் உள்ள குறுகிய நீர்வழியில் இந்தச் சுறா முதன்முதலில் காணப்பட்டது. சுமார் 3.5 மீட்டர் (11 அடி 6 அங்குலம்) நீளமுள்ள இந்தச் சுறா, ரெக்வியம் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது காளைச் சுறா அல்லது வெண்கலத் திமிங்கலச் சுறாவாக இருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புசானின் வடக்குத் துறைமுகத்தின் கொரியப் பெயரான ‘புக் ஹாங்’ என்பதிலிருந்து இந்தச் சுறாவுக்கு ‘புகாங்கி’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுறாவைக் காண கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 6 லட்சம் பேர் வந்துள்ளதாக புசான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக,
 நான்கு நாள் சூசோக் விடுமுறை வார இறுதியில் சுறா காணப்பட்ட கடற்கரைப் பூங்காவிற்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் சென்றுள்ளனர். வழக்கமான வார இறுதிகளில் அந்தப் பகுதிக்கு சராசரியாக சுமார் 2,000 பேர் மட்டுமே வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுறாவின் பிரபலத்தால் அருகிலுள்ள கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுறா வடிவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்கள் அதிகமாக விற்பனையாகி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
இந்த பரபரப்புக்கு மத்தியில், சமூக வலைதளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 91 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, புசான் நகரம் ‘புகாங்கி’ சுறாவை கௌரவத் தூதராக நியமித்துள்ளது.
இதற்கிடையில், வைரலான ‘பேபி ஷார்க்’ பாடலை உருவாக்கிய பிங்க்ஃபாங் நிறுவனத்தின் பங்குகளும் இந்த பரபரப்பின் போது ஒரு கட்டத்தில் சுமார் 7 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
சுறாவைச் சுற்றியுள்ள ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அது இரண்டாவது முறையாகக் காணப்பட்டதாகவும், காணாமல் போன சுறா அதன் குட்டியாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் சில தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இத்தகைய தகவல்களுக்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை.
கடலுக்குத் திரும்ப முடியாமல் கால்வாயில் சிக்கியுள்ள ‘புகாங்கி’, தற்போது புசானின் சுற்றுலா ஆர்வத்தை அதிகரித்துள்ள எதிர்பாராத பிரபலமாக மாறியுள்ளது.
இது ஓரளவு பெரிய சுறா, கிட்டத்தட்ட 3.5 மீட்டர் (சுமார் 11 அடி, 6 அங்குலம்) நீளம் கொண்டதாகத் தெரிகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் நல்லூரில்தியாக தீபத்தின் நினைவாலயம் முன் ஏற்றப்பட்ட அணையா விளக்கு

யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை
 மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை வரையில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றய தினம்  புதன்கிழமை மாலை தீபம் ஏற்றப்பட்டு , அதனை அணைய விடாது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
 குறித்த அணையா விளக்கு போராட்டம் , பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து 
எடுத்து சென்றுள்ளனர்.
பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லபப்ட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை குறித்த சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என சிலை எடுத்து செல்லப்பட்ட தினமான ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபனின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டிலும், மறுநாள் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும்,  மூன்றாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இந்நிலையில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய  தினம் புதன்கிழமை நினைவாலயம் முன்பாக விளக்கு ஏற்பட்டு, நாளைய மறுதினம் வரையில் விளக்கினை அணைக்காது இரவு பகலாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை   என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் மெட்ரோ பேருந்து

 .யாழில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 50 மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணம்,கண்டி மற்றும் காலி நகரங்களில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கிறோம். நகரங்களுக்கு இடையிலான 
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தை 
அடைவதற்காக மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும்போது, நகர்ப்புற போக்குவரத்து அனுமதிப் பத்திர முறையைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு இதில் தனியார் துறையையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க 
தெரிவித்தார்
மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பஸ்களை சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு 
குறிப்பிட்டார்.
நகர்ப்புற போக்குவரத்திற்காக 112 பஸ்கள் நேற்று முதல் பொதுப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், இந்நாடு பயணிக்கும் திசையைக் காட்டும் ஒரு குறியீடாக இந்த நிகழ்வை அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
மெட்ரோ சேவையை நிறுவுவதற்காக அரசாங்கம் சுமார் 7.5 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஒரு புறம் இது நாட்டின் பொருளாதார பலத்தின் அடையாளம் என்றும் கூற வேண்டும். இந்த 
அரசாங்கத்தின் 2 ஆண்டுப் பயணத்தின் லிட்மஸ் பரிசோதனையில் 
நாம் வெற்றி 
பெற்றுள்ளோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த வேலைத்திட்டத்திற்காக நாம் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தையே எடுத்துக்கொண்டோம். 356 நாட்கள் போன்ற காலப்பகுதிக்குள் அனைத்து சுற்றறிக்கைகளையும் பின்பற்றி நாம் ஒரு பெரிய சவாலை வென்றுள்ளோம்.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 50 மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி நகரங்களில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கிறோம். நகரங்களுக்கு 
இடையிலான
 போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தை அடைவதற்காக மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும்போதுஇ நகர்ப்புற போக்குவரத்து அனுமதிப் பத்திர முறையைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு இதில் தனியார் துறையையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இந்த பஸ் திட்டத்தைத் தொடங்குவதற்காக 8 பஸ்களை வழங்கி ஜப்பான் அரசாங்கம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. 
அதேபோல் ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக,
 மெட்ரோ நிறுவனத்திற்கு 100 பஸ்களை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் உட்பட, இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 
என்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

நாட்டில் மன்னார் பகுதியில் உணவகத்தில் வாங்கிய வடையில் வெட்டுக்கிளி

நாட்டில் மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை  சாப்பிட முற்பட்ட வேளையில்  வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக 
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,  நேற்று முன்தினம்  மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (29) செவ்வாய்க்கிழமை மற்றொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாக உரிய முறையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை
 விடுத்துள்ளனர்.
பொது மக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

நாட்டில் கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காணத் தயாராக இருப்பதுடன், பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறை தொடர்பில் மறுபரிசீலனை செய்து விரைவாகத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் 
தெரிவித்தார்.
அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சியில் தொடர் கொள்ளை -பவுண் நகைகள் மற்றும் பணத்துடன் தாயும் மகனும் கைது

நாட்டில் கிளிநொச்சியில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர் 
இராமநாதபுரம் மற்றும் அக்கராஜன் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து அண்மைக்காலமாக  கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன 
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பெண்ணொருவரையும் , அவரது மகனையும் கைது செய்துள்ளனர் 
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 21 அரை பவுண் தங்க நகைகள் மற்றும் 10 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார்
 மீட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் காவலில் வைத்து போலீசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 28 செப்டம்பர், 2026

தொடரும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டுகள்

தொடரும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள், வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட 100 சம்பவங்கள் 2021 முதல் 2023 வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, பதிவான 100 திருட்டுச் சம்பவங்களில் 11 சம்பவங்களுக்கான இழப்பு ரூ.580 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய 89 சம்பவங்களின் பெறுமதி இதுவரை கண்டறியப்படவில்லை என 
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கேபிள்கள் முழுமையான கொன்கிரீட் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருந்ததால், அவற்றை இலகுவாக வெட்டி அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை 
சுட்டிக்காட்டியுள்ளது.
முதல் திருட்டுச் சம்பவம் பதிவான 2021ஆம் ஆண்டிலிருந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததாலும், பொறுப்பான அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனிடையே, அதிவேக நெடுஞ்சாலையின் முழுமையான சேதங்களை சீரமைப்பதற்கான செலவு ரூ.1,770 மில்லியனைத் தாண்டும் எனவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 
எனினும், இந்தத் திருட்டுகள் மற்றும் சேதங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திரு சி.வீ.கே கேள்வி பொலிஸாருக்கு சொல்லி சிலையை அகற்றுமளவுக்கு நாம் சக்தி வாய்ந்தவர்களா

 என்னுடைய தோ, கட்சியின்  கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ  சிலை அகற்றப்பட்டது என்பது ஒரு அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். 
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.
குறித்த சிலையை அகற்றவதற்கு , தமிழரசு கட்சியும் அதன் தலைமையும் ஒரு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். 
அது தொடர்பில் தமிழரசு கட்சியினர் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை யாழ்ப்பாணத்தில் நடாத்திய போதே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில், 
நானும் தமிழ் அரசு கட்சியும் சிலை வைப்பிற்கு எதிரானவர்களாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும், எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் தான் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அபாண்டமான குற்றச்சாட்டு 
முன்வைக்கப்பட்டுள்ளது, 
அவ்வாறாக நாங்கள் சிலை வைத்தமைக்கு எதிரானவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
என்னுடைய கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ  சிலை அகற்றப்பட்டது என்பது ஒரு அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. 
நினைவேந்தல் விடயங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தாங்கள் தான் எல்லாம் செய்யலாம், தங்களுக்கு தான் நினைவேந்தல்கள் குத்தகை தரப்பட்டது போன்று , தாங்கள் தான் எல்லாம் என  தாமாகவே பிரகடனப்படுத்தி, நினைவேந்தல் குழுக்கள் என உருவாக்கி நினைவேந்தல்களை 
 செய்கிறார்கள்
தமிழ் தேசிய கட்சி என்று கூறக்கூடிய தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப், , டெலோ போன்ற கட்சிகள் இல்லாமல். தனியே தமது கட்சி ஏகபோகம் என ,  ஏனையவர்களை களங்கப்படுத்தி,  செயல்படுவது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இதனை மக்கள் புரிந்து 
கொள்ள வேண்டும். 
தியாகி திலீபனின் அஞ்சலியை வைத்து நாங்கள் யாரும் அரசியல் செய்கிறது நாகரிகமான விஷயம் அல்ல என்பதும், அப்படி நடக்கிறது என்ற கவலையையும் நான் பதிவு செய்ய 
விரும்புகின்றேன். 
இதற்கு மேல ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை. நானோ அல்லது எங்கள் கட்சியோ பொலிஸாருக்கு சொல்லி தான் இந்த சிலையை அகற்றினார்கள் என்று சொல்கிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களா நாம் ?

எனவே மக்கள் இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்  மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் ஒன்றரை பில்லியன் ரூபாய் பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை முன்னெடுக்கப்பட்ட்நடவடிக்கை குறித்து நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர என்பவர் அத்தகைய விபரங்களை
 வெளியிட்டுள்ளார்
 கடற்படையினரால் மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 81 கிலோகிராம் ஆகும்.
இதில் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 46 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் உள்ளடங்கியுள்ளன.
அண்மைய காலங்களில் வடபகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென பிரதி அமைச்சர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையின் பல குழுக்கள் ஒன்றிணைந்து முற்றுகையை வெற்றிகரமாக முன்னெடுத்ததாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 56 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

நாட்டில் நெடுங்கேணி வெடுக்குநாரி: ஆதிசிவன் சிவன் மேலே-புத்தர் கீழே

நாட்டில் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
.நேற்று புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாரி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து ஆதி சிவனுக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். 
இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர் ஆதி சிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முயன்றமை அப்பகுதியில் பதட்ட நிலையை தோற்றுவித்தது.
சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையிலும் பொதுமக்களினால் குறித்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
 எனினும் பிக்குகளால் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை எதிர்ப்பின் காரணமாக மலைக்கு கீழே வைத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அதற்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். 

 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


பெருந்தொகை பணம் கூரிய ஆயுதங்களுடன் யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட 09 பேர் கைது

பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் 
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் , இரண்டு மோட்டார் சைக்கிளிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றினை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர் 
அதன் போது , காரினுள் கூரிய ஆயுதங்களும் , 09 இலட்ச ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உள்ளிட்ட 09 பேரையும் கைது செய்ததுடன் , அவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர் 
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மாதகலில் சிக்கிய போதைப்பொருளின் மதிப்பு 1.5 பில்லியன் ரூபா

யாழ் மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்தப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மீட்டெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்த அளவு சுமார் 81 கிலோகிராம் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்குள் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 45 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், அண்மைய காலங்களில் வடக்கிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 75 பில்லியன் ரூபாய் எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதிகளின் பெறுமதி 56 பில்லியன் ரூபாய் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வடக்கு கட்டளை பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, பல குழுக்கள் இணைந்து இந்த முற்றுகையை மேற்கொண்டதாகத் 
தெரிவித்தார்.
அதற்கமைய, கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.
கடற்படையினர் தற்போது குழுக்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
அத்துடன், கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சிக்கலான சூழலில் இடம்பெறுவதாகவும், கடற்படை எதிர்காலத்தில் நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார்
இதற்காக தேவைப்படும் உபகரணங்கள் தற்போது கடற்படைக்கு கிடைத்து வருவதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் பரந்தளவில் முற்றகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.-என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
¨

சனி, 26 செப்டம்பர், 2026

நாட்டில் கபொத சாதாரண தர பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு

நாட்டில் 2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிக்கையில், பரீட்சைகள் திணைக்களத்தின் 
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பகுதிக்குச் சென்று, பரீட்சை சுட்டெண் அல்லது
 தேசிய அடையாள 
அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



இலங்கை பாராளுமன்றில் .22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது

நாட்டின் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. பாராளுமன்றில் நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் 
வாசிப்பின் போதான வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் 
அளிக்கப்பட்டன 
எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் பலாலி திருச்சி இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

 யாழ்  பலாலி திருச்சி இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள்
 இயக்கப்படவுள்ளன.
திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் 7 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமைஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

யாழ் கீரிமலை குப்பை மேடு - 'இது மிகப்பெரிய அனர்த்தமாகும்

யாழ்  கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை
 விடுத்துள்ளார்.
கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர். 
இதன்போது, குறித்த பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதை அவதானித்த ஆளுநர், 'இது மிகப்பெரிய அனர்த்தமாகும்' எனக் குறிப்பிட்டதுடன், இப்பகுதியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
கொட்டப்பட்ட கழிவுகளை மனித வலுவை மாத்திரம் பயன்படுத்தி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுகளைத் துரிதமாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு
 பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, வலி. தெற்கு பிரதேச சபையால் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் உறுதியளித்தார்.
அத்துடன், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலிருந்து குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக அங்கு கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இதன்போது, மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை தமது சபையால் ஏற்றிச் செல்வதில்லை என வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
கீரிமலை பிரதேசத்தில் காணப்படும் இந்நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, மக்கள் சுகாதாரத்துக்கும் 
சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இக்கண்காணிப்பு பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

உணவுதவிர்ப்பு போராட்டம் யாழ்.பல்கலை முன் குவிக்கப்பட்ட பொலிஸ்

பல்கலைக்கழக மாணவர்கள்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு
 நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக 
முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் . 
அதேவேளை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு   சென்றனர் 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




மருந்து விசிறிய வாலைக்குழையை யாழில்.விற்பனை செய்ய முயன்றவருக்கு சிறை

மருந்து விசிறிய வாலைக்குழையை யாழில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத 
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. 
வடமராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் , குறித்த ஆலய அன்னதான மடத்தினருக்கு விற்பனை செய்யவென ஒரு வருட காலத்துக்கு முன்னர் காலாவதியான மருந்து விசிறியை 424 கிலோ  வாழைக்குலைகளை 
கோப்பாய் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைப்பற்றி இருந்தனர் 
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நிலையில் வாழைக்குலைகள் காணப்பட்டமையால் , நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை முற்றாக அழிக்கப்பட்டன 
அந்நிலையில் குறித்த வாழைகுழைகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
அதன் போது, தன் மீதான குற்றச்சாட்டை வாழைக்குலை விற்பனையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , 05 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 24 செப்டம்பர், 2026

நாட்டில் வெறிநாய்க்கடியை ஒழிக்கவும் நாய்களைப் பதிவு செய்யவும் புதிய சட்ட ம்

நாட்டில்  வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும், நாட்டில் உள்ள நாய்களை முறையாகப் பதிவு செய்வதற்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
வெறிநாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு 
செய்தல்” என்ற தலைப்பிலான சட்ட வரைவு, பொது 
நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் நாட்டில் வெறிநாய்க்கடி நோயை கட்டுப்படுத்தி, இறுதியில் அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துதல் முக்கிய நடவடிக்கையாக அமையும். அதேபோல், கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும், வணிக நோக்கில் நாய்களை வளர்ப்பவர்களுக்கான நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த புதிய சட்டம் மூலம் விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன.அனைத்து நாய்களையும் பதிவு
 செய்யும் முறை
புதிய சட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் நாட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தொடர்பான
 தகவல்களை முறையாகப் பதிவு 
செய்து பராமரிக்க 
முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாய்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்கள்
வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக தேசிய வெறிநாய்க்கடி ஒழிப்பு 
ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்கவும் சட்ட வரைவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பிராந்திய மட்டத்திலும் வெறிநாய்க்கடி ஒழிப்பு ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தக் குழுக்கள் வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல் மற்றும் நடைமுறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
தற்போதுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டம்
இந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள வெறிநாய்க்கடி நோய் அவசரச் சட்டம் (அத்தியாயம் 476) மற்றும் நாய் பதிவு அவசரச் சட்டம் (அத்தியாயம் 477) ஆகியவை இரத்து 
செய்யப்படும்.
அவற்றுக்குப் பதிலாக, வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் ஆகிய இரு விடயங்களையும் உள்ளடக்கிய புதிய சட்ட விதிகள் நடைமுறைக்கு வரும்.
இதன் மூலம் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துதல், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை ஒரே சட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான புதிய சட்டக் கட்டமைப்பு உருவாகும்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.