வியாழன், 16 மே, 2024

நாட்டில் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

நாட்டில் க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி
 வருகின்றனர்.
 கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை
 சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






புதன், 15 மே, 2024

கனரக ஹென்டர் வாகனம் அம்பாறையில் கடலுக்குள் விழுந்துள்ளது

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.  
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே.15-05-2024. இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கண்காணிப்பில் பாரிய கற்கள்
 போடப்பட்டு வருகின்றன.  
இதன் தொடர்ச்சியாக கல் அணைகள் அமைத்து கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹென்டர் கனரக டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்தது.  
எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் பொதுமக்கள் ஏனைய கனரக ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 14 மே, 2024

ஆஸ்திரேலியாவில் பதின்நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. 
அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன 
வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு 
விளைவிக்கிறது. 
மேலும் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர். எனவே ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட 
குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் 
ஒப்புதல் அவசியம். 
இதற்கான நடைமுறையை ஆராய ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச் தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 13 மே, 2024

நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்த தடை நால்வருக்கு விளக்கமறியல்

நாட்டில்போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை
 நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  
நேற்றிரவு (மே 12.05) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, செல்வ வினோத் சுஜானி மற்றும் நவரத்னராசா ஹரிஹரகுமார் ஆகிய நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு.13-05-2024. இன்று  மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது. 
கைது செய்யப்பட்ட பெண்களை பொலிஸ் சீருடையில் இருந்த ஆண்கள்  கொடூரமாக தரையில் இழுத்துச் செல்வதையும் உள்ளூர்வாசிகள் காணொளி பதிவு செய்துள்ளனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் நினைவாக திருகோணமலை, சம்பூர் சேனையூர் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்றைய தினம் காலை அப்பிரதேச மக்கள் கஞ்சி காய்ச்சுவதற்கு தயாராகினர்.  
அப்போது, வெள்ள முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல், மக்கள் ஒன்றுகூடல் மற்றும் உணவு பானங்கள் வழங்குவதற்கு 
தடைவிதித்து நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவை 
அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடுக்க முற்பட்ட போது, போரில் உயிரிழந்த தமது உறவினர்களை
 நினைவு கூருவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துவதாகக் கூறி அதனை 
மறுத்துள்ளனர்.
குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106 (1) பிரிவின் பிரகாரம் வழக்கு இலக்கம் A 12 211/24 வழக்கின் முறைப்பாட்டாளரான சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு
 மூதூர் நீதிமன்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுவதாக, மே 12 நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அரசின் தடையால், நோய்க்கு மருந்தில்லாமல் பட்டினி கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றைய காலத்தில் உணவளித்ததை நினைவு கூர்ந்து, கனரக ஆயுதங்களால், பட்டினியால் 
$அல்லது நோயினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்படும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் நீதிமன்ற உத்தரவில் பின்வருமாறு 
விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  
"சம்பூர் பொலிஸ் பிரிவில் சட்ட ரீதியாக பிரயோசனமடைய கூடிய பொது இடங்களான பாடசாலை கோயில் போன்ற பொது 
இடங்களில் வெள்ளை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஞாபகார்த்தமூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயல்படுத்தல் சட்டவிரோதமானது. 
 மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வகையில் மக்களை ஒன்று கூட்டுதல், வாகன ஊர்வலம் மற்றும் மக்களுக்கு தொற்று 
நோய்கள் ஏற்படும் என்பதால் இந்த கட்டளை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில், மாவீரர் சங்கத் தலைவர், கந்தையா காண்டீபன், மாவீரர் சாங்க உப தலைவர், சாந்தலிங்கம் கோபிராசா, மாவீரர் சங்க
 பொருளாளர் நவரத்னராசா ஹரிஹரகுமார், மாவீரர் சங்க செயலாளர் செல்வ வினோத் சுஜானி, மாவீரர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 12 மே, 2024

சீன ஆராய்ச்சி கப்பல் இந்திய பெருங்கடலில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கை

இந்தியப் பெருங்கடலில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்வது குறித்த கவலைகளுக்கு மத்தியில், இலங்கைக்கான அமெரிக்க வேட்பாளர் எலிசபெத் கே. ஹோர்ஸ்ட், இந்த கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவதை உறுதிசெய்ய, இலங்கையுடன் இணைந்து
 பணியாற்றுவேன் என்று  அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவிடம் உறுதியளித்தார்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துடன் (பிஎல்ஏ) தொடர்பு இருப்பதாக நம்பப்படும் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தையை வெளிப்படுத்தும் கப்பல்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து செனட் குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார். 
தமது கடற்பரப்பில் ரோந்து செல்வதிலும் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை 
அவர் வலியுறுத்தினார். 
இலங்கை துறைமுகங்களில் சீனக் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம், பிராந்திய பாதுகாப்புக் கவலைகள் தொடர்பான விவாதங்களில் முன்னணியில் உள்ளது.
இலங்கையில் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு வெளிப்படையான மற்றும் வேறுபட்ட முதலீட்டு மாதிரியை வெளிப்படுத்தியதாகவும், இலங்கையர்களுக்கு அவர்களின் பொருளாதார 
பங்காளித்துவத்தில் ஒரு தெரிவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுதிப்படுத்தப்பட்டால், பிராந்தியத்தில் அமெரிக்க
 நடவடிக்கைகளை மேலும் ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் Horst உறுதியளித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 11 மே, 2024

நாட்டில் பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீதி நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
அவர்களில்  4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 
 இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதைப்பொருள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 மே, 2024

யாழில் வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக ஈடு வைத்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர். குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமையை கைது செய்யப்பட்ட நபர்
 விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 9 மே, 2024

நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் எப்போது: விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 இதன்படி தேர்தல் குறித்த வேட்பு னுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 8 மே, 2024

நாட்டில் முல்லைதீவில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி போராட்டம்

நாட்டில் மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால்.08-05-2024. இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு 
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி 
திட்டத்தை எமது
 மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே,
 மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து 
என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு 
போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கதது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 7 மே, 2024

நாட்டில் சுகாதார தொழிற்சங்கங்கள்மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
 பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
 சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, கொடுப்பனவுகளை வழங்குவதாக எழுத்து மூலம் வழங்கிய 
வாக்குறுதியின் அடிப்படையில் அது ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும்,
 இதுவரையில் அந்த
 வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம 
தெரிவித்தார்.
 இதன்படி, நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் 
சுகாதார நிலையங்களை கடமையில் இருந்து வெளியேறும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 தொழிற்சங்க நடவடிக்கையை செயல்படுத்தும் மாகாணங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 09 - வட மத்திய மாகாணம் 13 - மத்திய மாகாணம் 14 - சப்ரகமுவ மாகாணம் 15 - வடமேற்கு மாகாணம் 16 - தென் மாகாணம் 20 - ஊவா மாகாணம் 21 - மேல் மாகாணம் போன்றவற்றில் 
பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
 .என்பது குறிப்பிடத்தக்கதது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 6 மே, 2024

இலங்கையில் முதல் முறையாக 'AI' செய்தி வாசிப்பாளர்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்துள்ளது.
 இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி செய்தி 
வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
05-05-2024.  ஞாயிற்றுக்கிழமைஅன்று. இந்த செய்தி
 வாசிப்பாளர்களின் அறிமுகம் நடந்துள்ளது. நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 5 மே, 2024

இலங்கையில் இருந்து இரத்தினக்கற்களை இந்தியாவிற்கு கடத்திய நபர் கைது

இலங்கையில் இருந்து ஏராளமான ரத்தினக் கற்களை கடத்த முயன்ற நபரை விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கைது
 செய்துள்ளனர். 
இலங்கை விமானம் இலக்கமான யு.எல்.127 மூலம் சென்னைக்கு செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.  
சந்தேகத்திற்கிடமான பயணியின் பயணப் பொதியில் 482.02 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் 
காணப்பட்டன.
 எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க கார்பன் தாள்களில் அவை கவனமாக சுற்றப்பட்டிருந்ததாக மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த இரத்தினக் கற்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பயணியை விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஆஜர்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 4 மே, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி ஜனாதிபதிக்கு பறந்த விசேட கடிதம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என பயண முகவர்கள் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக வீசா கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
1949 ஆம் ஆண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை
 போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் 
வழங்கப்பட்டன.
1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் 
வசூலிக்கவில்லை.
ஆனால் 2012ல் ETA அல்லது Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப்
 பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டது.  
2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயல்முறை தடையின்றி நடந்தது. எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டை குடிவரவு
 மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து
 VFS GLOBAL என்ற தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. 
அதன்படி, முதலில் ஆன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு
 மாற்றப்பட்டது. அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை
 வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் 
நிறுவனத்திற்கு 
சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.  
இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டாலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமானது.  
மேலும், 2012 மற்றும் 2024 க்கு இடையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான வீசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.
  எனினும், அந்த கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் குழந்தையிடமிருந்து 100.5 டாலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  
இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டும்.  
இங்குள்ள மற்றுமொரு சிக்கல் என்னவென்றால், சுற்றுலாப் பயணி ஒருவர் ஆன்லைனில் விசா வசதியைப் பெறும்போது, ​​அது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்படும்,
 ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிக்கு On Arrival முறை மூலம் வழங்கப்படும் விசா வசதி முதலில் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. 
இந்நிலைமை 1949 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO அல்லது
 பயண முகவர்களின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 3 மே, 2024

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை
 நடைபெறவுள்ளதால்
 அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 2 மே, 2024

யாழ் அச்சுவேலிசங்கானை வீதியில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூவர் கைது

யாழ் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை 
வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த
 தாக்குதல்  02-05-2024.அன்று  நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக 
சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக 
கூறப்படுகிறது.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 1 மே, 2024

மே தினப் பிரகடனம் வடக்கு கிழக்கில் தமிழ் மரபுகளை சீரழிக்காமல் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.
 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும்
 அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய 
பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து
 பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை
 தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும். அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான
 பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான
 நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை 
ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
 வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன
. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.
 இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் 
அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் 
தொடர்கதையாகி வருகின்றது. 
இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம். கடந்த சில வருடங்களாக 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு 
செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக 
இழந்து நிற்கிறார்கள்.
 மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் 
விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும். நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் 
மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் 
அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும்
 தூண்டப்படுகின்றனர்.
 இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம்
 முன்வரவேண்டும். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள்
 இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
 அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு
 உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு
 உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
 அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக 
சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.
 இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.
 அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது.
 இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.
 வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் 
மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.