புதன், 31 ஆகஸ்ட், 2022

இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும் குடியிருப்புக்கள் திறப்பு

தமிழகம் திண்டுக்கல்லில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை மாதிரியாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சிப் பகுதியில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி இந்திய ரூபா செலவில் 321 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கட்டுமானப் பணிகளை, தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கண்காணித்துள்ளார்.
இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், திண்டுக்கல்லில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 321 வீடுகளை மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் 
தமிழர்களுக்கும் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தக் குடியிருப்புகளை இலங்கைத் தமிழர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இந்தியாவில் ஓட்டமெடுத்த மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணப்பெண்

இந்தியாவில் மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் எனக் கூறி நடு ரோட்டில் ஓட்டம் பிடிக்கவே மணப்பெண் அவரை துரத்தி பிடித்து திருமணம் செய்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்ததுடன், இதையடுத்து வரதட்சணையாக பைக் மற்றும் ரூ.50,000 ஆயிரம் ரொக்க பணம் என்பனவும்
 கொடுத்துள்ளனர்.
எனினும் அந்த இளைஞர் திருமண திகதியை தள்ளிபோடுமாறு கூறியதனால் அவர்களது திருமணம் பிற்போடப்பட்டது.
பின்னர் திருமண திகதி நெருங்கவே திருமணத்தை தாமதப்படுத்துமாறு இளைஞரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளைஞருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருடன் சந்தைக்கு சென்றுள்ளார்.
அங்கு மணமகனை பார்த்த நிச்சயிக்கப்பட்ட பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் கூட்டம்கூட மாப்பிளை தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மாப்பிள்ளையை விடாமல் துரத்தி வளைத்து பிடித்தார்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இருதரப்பினரையும் பொலிஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து மாப்பிள்ளை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே இருவருக்கும் திருமணம் 
கோவிலில் நடைபெற்றது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், 29 ஆகஸ்ட், 2022

இலங்கையின் நெருக்கடியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார் வாங்கிய அரச அதிகாரி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
அண்மையில் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரின் கார் கனவுக்காக 600 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
600 லட்சம் ரொக்கமாக செலுத்தி புதிய பென்ஸ் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.
நாடு திவாலாகி, மக்கள் திவாலாகும் நிலையில், மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, அனைத்து தியாகங்களையும் செய்வதாக கூறி பதவிகளை ஏற்றவர்களின் இவ்வாறான செயல் அதிர்ச்சியளிப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 
கடன் தவணை செலுத்த முடியாமல், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல், பெரும் டொலர்
 நெருக்கடிக்கு முகம் கொடுத்து, நாடு திவால் 
நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சில அரசியல்வாதிகளுக்கும், சில உயர் அரச அதிகாரிகளுக்கும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளதாக 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
ஒரு எரிபொருள் கப்பலுக்குத் தேவையான டொலர்களைக் கண்டுபிடிப்பது முடியாத நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் கார் கனவுகளை நிறைவேற்ற தேவையான டொலர்கள் இலகுவாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

மானிப்பாயில் வீடு புகுந்து தாக்குதல் அதிகாலை 2 மணிக்கு சம்பவம்

யாழ் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது .28-08-2022.இன்றுஅதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற உந்துருளிக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மாறாக பாரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உந்துருளி முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறன்றது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 27 ஆகஸ்ட், 2022

மிகப் பிரபலமான உலகின் தலைவர்களின் பட்டியல் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் 
வெளியாகி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த “மோர்னிங் கன்சல்ட்” என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை 
பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் 2ஆவது இடத்தையும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், 5ஆவது இடத்தில் உள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வலிகாமம் பகுதியில் மகனின் காதலால் அம்மாவின் ஐபோனை நொருக்கிய அப்பா

யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக 
தெரியவருகின்றது.
தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்பை பேணியதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த மாணவியின் தாய் மகளை கையும் மெய்யுமாகப் பிடித்து அந்த நம்பர் யாருடையது என விசாரித்து அறிந்து , மாணவனின் தாயிடம் மகன் தொடர்பான விபரத்தை கூறி இவ்வாறு நடக்க விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயம் மாணவனின் தந்தைக்கு தெரியாது தாயாரால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னரும் நள்ளிரவு வேளைகளில் மாணவன், தனது மகளை வட்சப்பில் தொடர்பு கொண்டதை அறிந்த தாயார் உடனடியாக மாணவனின் தந்தையின் கவனத்திற்கு 
கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து தந்தை கடும் கோபம் கொண்டு மாணவனை தாக்கியதுடன் மனைவியின் பெறுமதி மிக்க ஐபோனையும் அடித்து உடைத்ததுடன் குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் மாணவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் பிரபல வங்கிகளில் முக்கிய அதிகாரிகளாகக் கடமையாற்றுவதாகவும் 
கூறப்படுகின்றது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் கொவிட் அபாயம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, பொதுமக்கள் Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும்
 வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்.25-08-2022. இன்று காலைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும்  தெரிவிக்கையில்,
கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், எனவே பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர் டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






மகிழ்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்திய சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து இந்த தளர்வு 
அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்து எமக்கு ஒரு முக்கியமான சந்தையாகும்.
குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையை சிறந்த பயண இடமாக பார்ப்பதாக இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் விஜேதுங்க 
சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்து.
இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


புதன், 24 ஆகஸ்ட், 2022

நாட்டில் யாழ் பல்கலையில் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது .
வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தடைக்காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளோ, மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவனை பாலசிங்கம் விடுதியில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூத்த மாணவன் ஒருவருக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீட புதுமுக மாணவனை பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் விஞ்ஞான பீட மூத்த மாணவர்கள் இருவருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்கு
 புதுமுக மாணவர்களை அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கலைப்பீடத்தை சேர்ந்த 18 மாணவர்களுக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

பிலிப்பைன்சில் இரண்டு ஆண்டுகால ஒன்லைன் வகுப்புகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 
எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தது. 
நீண்ட காலமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்களின் கல்வி சூழலை மோசமாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்சில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு 
பிறகு.22-08-2022.அன்று  அங்கு பள்ளிகள் மீண்டும்
. திறக்கப்பட்டன. 
லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் 
தெரிவித்தனர். 
அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சரிபாதி அளவு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> >





திங்கள், 22 ஆகஸ்ட், 2022

கணேசபுர ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாங்கனிகள்.

வவுனியாவில் நேற்றையதினம் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , 
ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளார்.
21-08-2022.அன்றயதினம்  இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த மாம்பழங்களையும், மாலையையும் குறித்த மாணவன் பெற்று கொண்டமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த ஏலத்தொகை குறித்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பலாலி விமான நிலையத்திற்கு ஒரே நாளில் இந்தியாவிலிருந்து வரவுள்ள 2,000 பேர்

யாழ் பலாலி விமான நிலையத்திற்கு சுமார் 2,000 யாத்ரீகர்களை ஒரே நேரத்தில் ஒரு பெரிய கூட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு (2022) குறைந்தது 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இலங்கை – இந்தியா இடையிலான மத மற்றும் கலாச்சார சார்ந்த சுற்றுலா முறை மிகவும் அவசியமானது.
நடப்பு ஆண்டில் இலங்கை ஏற்கனவே ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது.
மேலும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இந்த ஆண்டு நிறைவுறும் என்று நம்புகின்றோம்.
எங்களிடம் ஆரோக்கியம், யோகா, தியானம் மற்றும் ஆயுர்வேத 
மருந்துகள் உள்ளன.
அத்துடன் இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள் நிறைய உள்ளன என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



சனி, 20 ஆகஸ்ட், 2022

நாட்டுமக்களுக்கு அவசர அறிவித்தல் கடுமையாகும் நடைமுறை

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டையில், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தினால் 
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்யப்பட்டது.
பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு சமிக்ஞைகள் எரியும் போது சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது.
மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து பொலிஸாரிடம் இருந்து கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி வீதிகளைக் கடப்போரின் அடையாள அட்டை மற்றும் பிற விபரங்கள் கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுவார்களாயின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இலங்கையில்12 எரிபொருள் விநியோகம் அதிரடியாக இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடை நிறுத்த அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேசிய எரிபொருள் அனுமதி வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இணங்க தவறியதால் 
குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கமைய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு 
ஏரிசத்தி அமைச்சர் கட்டளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காத 
எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கான்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பலாலி யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பலாலி யாழ். சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட வகையில் விமானங்கள் மீண்டும் செயற்படுவதற்கு முன்னர், வரியில்லாத பொருட்களின் விற்பனை உட்பட்ட அதன் வசதிகளை மறுசீரமைப்பதற்காக திறமையான உள்ளூர் நிறுவனங்களைத் தேடும் பணியை அரசாங்கம் 
ஆரம்பித்துள்ளது.
இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்றில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் அனுபவமுள்ள புகழ்பெற்ற சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை உரிமையாளர்களிடம் இருந்து தேசிய போட்டி ஏலத்தின் கீழ் முன்மொழிவுகளுக்கமைய விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தச் செயற்பாடுகள் யாழ். விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ் பலாலி விமான நிலையத்தில் அனைத்து வகையான மதுபானங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் / கழிப்பறைகள், தின்பண்டங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் (புறப்படும் முனையத்தில் மட்டும்) ஆகியவற்றின் முக்கிய வரியில்லா விற்பனையை நடத்துவதற்கான ஏலங்கள்
 திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் ஏலம் தொடர்பான கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க அந்நியச் செலாவணியை ஈர்ப்பதற்கும் இந்தியாவில் இருந்து விடுமுறைக்கு வருபவர்களை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தியாவின் ஆதரவுடன் மீள் அபிவிருத்தித் திட்டம் இதற்கமைய பயணிகள் பொதுவாக உடைகள், அழகுசாதனப் பொருட்கள், $ 250 மதிப்புள்ள பரிசுகள், அதிகபட்சம் 1.5 லிட்டர் மதுபானம் , இரண்டு போத்தல் மதுபானங்கள் போன்ற தனிப்பட்ட உடமைகள் மீதான சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
இருப்பினும், கோவிட் தொற்றுநோயின் விளைவாக அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் 2020 மார்ச் 15வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கட்டமைக்கப்பட்ட விமான சேவைகள்
இந்தியாவின் ஆதரவுடன் மீள் அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பலாலி விமான நிலையம் 2019 நவம்பர் 11 யாழ் பலாலி சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறக்கப்பட்டது. 
தற்போது ​​யாழ்ப்பாணத்திற்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கு குறிப்பாக தென்னிந்திய இடங்களிலிருந்து வாடகைக்கு 
எடுக்கப்பட்ட விமானச் சுற்றுப்பயணங்கள் மற்றும் நேர கட்டமைக்கப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்க சர்வதேச மற்றும் பிராந்திய விமான நிறுவனங்கள் ஏற்கனவே கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 17 ஆகஸ்ட், 2022

இலங்கையிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு

வேலை வாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக .22-08-2022.திங்கட்கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கமருபீடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடவுசீட்டை பெறுவதற்காக தற்போது அதிகளவான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்
இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கமருபீடம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

தொலைபேசியில் யாழ். பல்கலைக்கழக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தினையும் மாணவிகள் வழங்கியுள்ளனர்.
மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
அவரின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வராதவாறு தடுத்தாலும் (ப்ளக்) வேறு இலக்கங்களில் இருந்து அழைப்பெடுத்து மாணவிகளை இம்சைக்கு உள்ளாக்கி உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்று மாணவிகள் தரப்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் சூழல் உருவானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திங்கள், 15 ஆகஸ்ட், 2022

நாட்டில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 
தெரிவித்தார்.
 இரண்டாம் கட்டத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் கட்டப் பணிகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதல் கட்டம் பழுதடைந்துள்ளமை திருத்தப்படும் வரை யுகடனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஊறவைத பாதாமை தோல் நீக்கியோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்

பாதாம் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும், ஆயுர்வேதத்தில் பாதாம் சிறந்ததொரு மருந்தாக 
கருதப்படுகிறது.
ஆயுர்வேதத்தின்படி வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவை சமநிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
இவற்றை சமநிலையில் வைத்துக்கொள்ள பாதாம் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்.பாதம் பருப்பின் சக்தியை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமாயின் அதனை தினமும் சாப்பிட வேண்டும்.
பாதாம் பருப்பு சாப்பிடுவது வீண் வாத மற்றும் பித்த தோஷங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது
பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடல் பலவீனம், நீரிழிவு நோயின் சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவக் கோளாறுகளுடன் தொடர்புடைய பிரமேஹா (நீரிழிவு) போன்றவற்றிலிருந்து பாதாம் நமது உடலை
 பாதுகாக்கிறது.
ஆயுர்வேதத்தின் படி தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வது, உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும்,
சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய
 பங்காற்றுகிறது.
பாதாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, அவை முடிக்கும் உறுதியளிக்கிறது.தனால் இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்றவை தடுக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




சனி, 13 ஆகஸ்ட், 2022

இந்தியாவின் பீகாரில் மாப்பிள்ளைச் சந்தை விநோத நடைமுறை

இந்தியாவின் பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், ‘மாப்பிள்ளை சந்தை’ என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.
பல புராண புத்தகங்களில் படித்து 
இருக்கிறோம்.
இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான ஆணை தேர்வு செய்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக இது கருதப்பட்டது.
குறிப்பாக, மன்னராட்சி காலத்தில் இது 
போன்று நடந்தது.
ஆனால், இதே போன்று இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து, தங்களுக்கான மணமகனை பெண்கள் தேர்வு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதை, ‘மாப்பிள்ளை சந்தை’ என்று
 அழைக்கின்றனர்.
பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தான் இந்த வினோத மாப்பிள்ளை சந்தை நடக்கிறது.
இன்று நேற்று அல்ல கடந்த 700 ஆண்டுகளாக இந்த சந்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வினோத சந்தையை ‘சவுரத் சபா’ என்றும்
 அழைக்கிறார்கள்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மகள்களுடன் இந்த சந்தைக்கு வந்து, தனது மகளுக்கு ஏற்ற, தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்வு செய்கின்றனர்.
அந்த அரச மரத்தடியில் 9 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான மாப்பிள்ளைகள் தங்களின் பெற்றோருடன் திரளாக கலந்து கொள்கின்றனராம்.
அதன்படி, மாப்பிள்ளையாக வரும் அனைவரும் வேட்டி, குர்தா, ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாப்பிள்ளைக்கும் அவர்களின் பின்னணி, கல்வி தகுதி அடிப்படையில் விலைகள் நிர்ணயம்
 செய்யப்படுகிறது.
மாப்பிள்ளை பிடித்த பிறகு, அவருடைய குடும்ப பின்னணி, தகுதி தகவல்கள் சரி பார்க்கப்படுகின்றன.
மணப்பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளையின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சந்தையிலேயே நேரில் சரிபார்க்கப்படுகின்றன.
அவற்றில் அவர்கள் திருப்தி அடைந்தால், இருவீட்டாரும் திருமணம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்கின்றனர்.
மாப்பிளை சந்தை வரதட்சணையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



Blogger இயக்குவது.