யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக
தெரியவருகின்றது.
தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்பை பேணியதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த மாணவியின் தாய் மகளை கையும் மெய்யுமாகப் பிடித்து அந்த நம்பர் யாருடையது என விசாரித்து அறிந்து , மாணவனின் தாயிடம் மகன் தொடர்பான விபரத்தை கூறி இவ்வாறு நடக்க விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயம் மாணவனின் தந்தைக்கு தெரியாது தாயாரால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னரும் நள்ளிரவு வேளைகளில் மாணவன், தனது மகளை வட்சப்பில் தொடர்பு கொண்டதை அறிந்த தாயார் உடனடியாக மாணவனின் தந்தையின் கவனத்திற்கு
கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து தந்தை கடும் கோபம் கொண்டு மாணவனை தாக்கியதுடன் மனைவியின் பெறுமதி மிக்க ஐபோனையும் அடித்து உடைத்ததுடன் குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் மாணவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் பிரபல வங்கிகளில் முக்கிய அதிகாரிகளாகக் கடமையாற்றுவதாகவும்
கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக