வியாழன், 25 ஆகஸ்ட், 2022

மகிழ்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்திய சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து இந்த தளர்வு 
அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்து எமக்கு ஒரு முக்கியமான சந்தையாகும்.
குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையை சிறந்த பயண இடமாக பார்ப்பதாக இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் விஜேதுங்க 
சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்து.
இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.