திங்கள், 31 ஜனவரி, 2022

மீண்டும் இலங்கை முடக்கப்படுமா வெளியான முக்கிய தகவல்

நாட்டை மீண்டும் முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது தொடர்பில் எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் 
தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.நாடு திறந்திருக்கும் போதே, Covid19 தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>நாட்டை விட்டு வெளியேறும் பெருமளவான மக்கள் அதிர்ச்சித்தகவல்

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டின் அனைத்துப் துறைகளும் முடங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஹலீம் தெரிவித்துள்ளார்.கண்டியில் 29-01-2022.அன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,
கடன்களை பெற்றுக் கொண்டு கடனை அடைப்பதாகவும் தெரிவித்தார்.மின்சார உற்பத்திக்கு போதுமான எரிபொருளை நாடு பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவு கோரப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் வாகனங்களின் பயன்பாடும் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற
 உறுப்பினர் கூறினார்.
சில இலங்கையர்கள் அவமானத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி அரசாங்கம் தற்போது நிதிக்காக பிச்சை எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.நாட்டிற்கு எதிர்காலம் இல்லை எனக் கூறும் அதேவேளை, தனது பிரிவினரால் மட்டுமே நாட்டை உயர்த்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் தெளிவான பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து தனது தரப்பினரின் தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தை உயர்த்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன வேலை வாய்ப்புகளை உருவாக்கியதைப் போன்று வேலையில்லாத்
திண்டாட்டமும் தீர்க்கப்படும் என்றார். தற்போதைய முன்னேற்றங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டு இரத்தக்களரியில் முடிவடையும் அதே வேளையில் இராணுவ ஆட்சியும் நடைமுறைக்கு வரலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.இவ்வாறானதொரு அபிவிருத்தியை அனுமதிக்க முடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதாக 
உறுதியளித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அதிரடியாக யாழில் கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலையின் அதிபர்

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள்
 மேலும் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>வெள்ளி, 28 ஜனவரி, 2022

இலங்கையிலும் வெளிநாடுகளை போல் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்:

நாட்டிலும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் குறித்து பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களின் தொகுப்பை திருத்தியமைத்து புதிய சுற்றறிக்கை 
வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளரினால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர் ஒருவருக்கு காணப்பட்ட அறிகுறிகளில் இருந்து அவர் மீண்டும், 48 மணித்தியால காலப்பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்றால் 7 நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியும்.
மேலும், நோயாளி வீட்டிலேயே சிகிச்சை பெற்று, அறிகுறிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தால், மருந்துகள் இல்லாமல் 48 மணி நேரத்திற்குள் நோயாளிக்கு காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், 7 நாட்களுக்குப் பிறகு வீட்டு வைத்தியம் செய்து மீண்டும் வர முடியும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு 48 மணி நேரம் அறிகுறிகள் இல்லாமல் காய்ச்சல் இருந்தால், அந்த நபர் தொடர்பில் அருகில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.மேலும் கோவிட்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், பாதிக்கப்பட்ட கோவிட் தொற்றாளருடன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என அடையாளம் காணப்பட்டால் அவருக்கு எந்த அறிகுறிகளையும் 
காட்டவில்லை
என்றால், தனிமைப்படுத்தலின்றி இயல்பான நடவடிக்கைகளைத் தொடரலாம். ஆனால் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட ஒரு நபருக்கு ஏதேனும் அறிகுறிகளைக் காட்டினால், அவர் உடனடியாக கோவிட் பரிசோதனைக்குட்பட வேண்டும்.
கோவிட் தடுப்பூசி பெற்ற அல்லது பெறாத நபர், கோவிட் பாதிக்கப்பட்ட நபரின் நெருங்கிய செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டால், 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு செய்யப்படும் அன்டிஜன் அல்லது PCR சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் அந்த நபர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படலாம் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 27 ஜனவரி, 2022

நாட்டில் பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்போருக்கான புதிய சலுகை

பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறையொன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதிமீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அறவிட்ட கட்டணத்தை 
அறவிடும் வகையில்
புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்.அதன்படி அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்
 தெரிவித்தார்.
அத்துடன் சுகாதார விதிகளை மீறும் அனைத்து பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக பல பகுதிகளில் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் 
மேலும் கூறினார்.
 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
செவ்வாய், 25 ஜனவரி, 2022

நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்

இதுவரையில் உலகின் பணக்கார நாடுகளில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலைமையில் இருந்து தப்பி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல
கூறியுள்ளார். இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென அவர் தெரிவித்துள்ளார். நாடு மீண்டும் முடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை 
சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் தடுப்பூசி
செலுத்தும் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக
 முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகளை மிகவும் வெற்றிகரமாக செலுத்திய உலகின் முதல் 5 நாடுகளுக்கு இலங்கை உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
அந்த நிலைமையை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி
 செல்வதற்காக பூஸ்டர்
தடுப்பூசி பெற்றுக் கொள்வது மக்களின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். சிலர் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் தேவையற்ற அச்சத்தையும் அடிப்படையற்ற பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர். அதில் எவ்வித உண்மையும் இல்லை என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை
உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


கெற்பேலி பகுதியில்துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவம்.தப்பி ஓடிய நபர்கள்

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல்காரர்களை கைது முற்பட்ட நிலையில் அவர்கள் ஓடியுள்ளனர்.
இதனையடுத்து
இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது. சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.மேலும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

இலங்கையை நான் தனியொரு தமிழனாக ஆள்வேன் என பகீரங்கமாக சவால் விடுத்த தமிழன்

என்னிடம் முடியுமானால் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் (23-01-2022) பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு நடைபெற்றுள்ளது. குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவுறுத்தல் 
வழங்கப்பட்டடிருந்தது.
இருப்பினும், நேற்றையதினம் (23-01-2022) மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்லகம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,
அவரது பதிவில் இருந்தது, நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் 
பெரும்பான்மை ஆட்சிதான்.
அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது.
எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன். ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார்.
அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், (Sajith Premadesa) சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு 
கூட்டணி விரும்புகிறது.
அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


திங்கள், 24 ஜனவரி, 2022

வடக்கில் மீண்டும் தலைதூக்கும் இராணுவத்தினரின் அடாவடிதனம்

 

வடக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் .24.01.2022. இன்று அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சாரதிமீது இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையில
டிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலையில் டிப்பருடன் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் பயணித்த வேளை டிப்பரினை மறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரில்
எதுவும் இல்லாத நிலையில் சாரதியினை இறக்கி இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புலனாய்வாளர்கள் டிப்பரில் என்ன இருக்கின்றது என்று சாரதியிடம் கேட்ட நிலையில்
டிப்பரில் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் மதுபோதையில் நின்று தன்மீது கம்பியால் தாக்கியுள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இதன்போது கண்ணில் காயமடைந்த நிலையில்
 குறித்த குடும்பஸ்தர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய நவரத்தினம் உதயசீலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்களை இராணுவம் இராணுவ முகாமிற்கு அழைத்து சமரசம் செய்ய பேசிவருவதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


நாட்டில் அரச வேலையாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் அலுவலர்கள் மகிழ்ச்சியில்

நாட்டில் அரசாங்கம், வரவுசெலவுத்திட்ட தீர்மானங்களை கடைப்பிடித்து இந்த மாதம் முதல் அரசுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளின் தொலைபேசி கட்டண கொடுப்பனவுகளை குறைத்துள்ளது. அதன்படி, சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளின்
 தொலைபேசி
கட்டணங்கள் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.மாதத்திற்கு அதிகபட்சமாக .13,000 ரூபாவை தொலைபேசி கட்டண உதவித்தொகையாக பெற்ற அதிகாரி ஒருவர் புதிய முறைப்படி 9,750 ரூபாவை மாத்திரமே பெறுவார். தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக பணிப்பாளர், நிர்வாக
 பணிப்பாளர், 
பொது மேலாளர் ஆகியோருக்கு முன்னர் 10ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது, 7500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.இதேபோல், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரிகள் முன்னர் 9ஆயிரம் ரூபாவை பெற்று வந்த நிலையில், குறைப்பின்படி 6750ரூபாவை பெறுவார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
சனி, 22 ஜனவரி, 2022

ஏன் இந்த இன பாகுபாடு இலங்கைத் தமிழர்க்கு பொங்கல் வடை மட்டுமே

இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார். அதேசமயம் மற்ற தமிழ் யுவதி கணேஸ் இந்துகாதேவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை
 சேர்த்துள்ளார்.
ஆனால் அவருக்கு எவ்வித தடல்புடல் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார். இந்நிலையில் ஒருவருக்கு பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கி கௌரவித்த இந்த
 அரசாங்கம் , நாட்டை
கௌரவப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளானர். மேலும் இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய அரசாங்கம் , மற்றவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையும், தங்க்கப்பதக்கம் பெற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடியவர்களோ, அல்லது அந்த துறைசார்ந்த எந்த முக்கியஸ்தர்களோ வாழ்த்துக்களை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 21 ஜனவரி, 2022

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022; யாருக்கு முன்னேற்றம் வரும் 12 ராசிகளுக்குமான பலன்கள்

18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சி நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி மார்ச் மாதம் நிகழப்போகிறது. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷத்திற்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகப்போகிறார்.
செவ்வாய் போல ராகுவும் சுக்கிரன் போல கேதுவும் செயல்படுவார்கள். செவ்வாய் சுக்கிரன் வலுவாக இணைந்திருந்தால் நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் பண வரவும் கிடைக்கும்.
வரும் மார்ச் 21ஆம் திகதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பெயர்ச்சி முக்கியமானது. நீச்சம் பெற்றிருந்த ராகு தற்போது நீச்ச நிலையில் இருந்து பெயர்ச்சியாகிறார்.
கஷ்டங்களைத் தாண்டி பலருக்கும் முன்னேற்றம் உண்டாகும். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.
ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. அதேசமயம் ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது. இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.அதன்படி ராகு கேது பெயர்ச்சி 2022 -12 
ராசிகளுக்குமான பலன்
மேஷ ராசி மேஷ லக்னம்:மேஷ ராசி மேஷ லக்ன காரர்களுக்கு ஜென்ம ராகு, களத்திர கேது என கிரகப்பெயர்ச்சி நிகழ உள்ளது. குடும்ப ராகு சில குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இனி ஜென்ம ராகுவின் தீவிரம் 18 மாத காலம் அதிகமாக இருக்கும். எண்ண ஓட்டங்கள் சீராக இருக்காது. ராகு எதையாவது குறுக்குவழியில் யோசிக்க வைப்பார்.
சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்கு புதிய காதலை உருவாக்குவார். ஒன்றரை ஆண்டு காலம் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷப ராசி ரிஷப லக்னம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராகுவினால் ஏற்பட்ட சிக்கல்கள் மன குழப்பங்கள் நீங்கப்போகிறது. 12ஆம் வீட்டில் ராகு மறையப்போகிறார். கேது களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி வந்தார். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மன நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் ஏற்படப்போகிறது.
ராகு அமரப்போகும் இடம் அயன சயன போக ஸ்தானம். ராகு எதையும் வித்தியாசமாக யோசிப்பார். முழு திருப்தி ஏற்படாமல் வேறு இடத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடுவார். திருமண உறவை தாண்டிய உறவில் விழ வாய்ப்பு உள்ளது கவனமாக இருப்பது நல்லது.
மிதுன ராசி மிதுன லக்னம்:லாப ராகு மனதில் புதிய உற்சாகத்தை தரப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேது வரப்போகிறார். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். அஷ்டம சனியால் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி
 கிடைக்கும்.
நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை கொடுப்பார். உங்கள் ராசியில் ராகு சரியான நிலையில் இருந்தால் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மன மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடியதாக இருக்கப் போகிறது. மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது.
கடக ராசி கடக லக்னம்:நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மன நிம்மதி அதிகரிக்கப்போகிறது. ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி 
முதலாளி ஆகலாம்.
நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் 
வெற்றிகரமாக முடியும்.
சிம்ம ராசி சிம்ம லக்னம்:ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு கேது வரப்போகிறார். ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டிற்கு வரப்போகிறார். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். மீண்டு வந்து ஜெயிக்கப்போகிறீர்கள்.
குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கி வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசி கன்னி லக்னம்:இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்த சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும். வருமானம்
 சேமிப்பு உயரும்.
அஷ்டமத்து ராகு மறைவு ஸ்தானம். பிறப்பு உறுப்பு தொடர்பான இடம். அதிகப்படியான ஹார்மோன் சுரக்கும் தேவைகள் அதிகரிக்கும். தேவையற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறவில் இருந்து வழிமாறி செல்ல வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.
துலாம் ராசி துலாம் லக்னம்:துலாம் ராசிக்கு ராகு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். திருமண வாழ்க்கையை குறிக்கும் இடம் கூட்டுத் தொழிலை குறிக்கும் இடமும் ஏழாம்பாவம்தான். நண்பர்கள், வாழ்க்கை துணை ஆகியவைகளை குறிக்கும் இடத்திற்கு ராகு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.ஆசைகள் அதிகரிக்க புதிய துணையைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் என்பதால் கவனமாக
 இருப்பது நல்லது.
விருச்சிக ராசி விருச்சிக லக்னம்:ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள், ஜென்ம கேதுவால் ஏற்பட்ட வலிகள் வேதனைகள் முடிவுக்கு வரப்போகிறது. மனசுக்கு வேதனையோடு இருப்பவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது. ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார்.
புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும்.
தனுசு ராசி தனுசு லக்னம்:உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு ராகு வரப்போகிறார். பணப்பிரச்சினை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் 
வரப்போகிறது.
அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர பாக்கியத்தை குறிக்கும் இடம். காதலை சொல்லும் இடமும் 5ஆம் பாவம்தான். காதலை தூண்டுவார் ராகு. புதிய உறவுகளை ஏற்படுத்துவார். கவனமாக இருப்பது நல்லது.
போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள்
 வெற்றி பெறும்.
மகர ராசி மகர லக்னம்:உங்க ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டிற்கு ராகு வரப்போகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவ
பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். போட்டி பொறாமை எதிரிகள் சூழ்ச்சிகள் மறையும். தொழில் நிலை 
முன்னேற்றத்தை தரும்.
கும்ப ராசி கும்ப லக்னம்:ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழரை சனியால் தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
தேவைகள் பூர்த்தியாகும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் 
முடிவுக்கு வரும்.
மீன ராசி மீன லக்னம்:வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு வருவதால் எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது. திசைமாற வாய்ப்புள்ளது. போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.
எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம் கவனம் தேவை. வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 18 ஜனவரி, 2022

இலங்கை முற்று முழுமதாக ஸ்தம்பித்து நிக்கப்போகும் தகவல்

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது நஇறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் மின்சாரத்திற்காக எரிபொருள் வழங்கப்படவில்லை எனவும், டொலர்களை வழங்கினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபையிடம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மின்சாரத்துக்கான டொலர்களை கண்டுபிடிக்க முடியாத விடயம் என தெரிவித்த அமைச்சர், மின்சாரத்திற்கு தேவையான டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற விடயத்தினை கண்டுபிடிப்பது அதற்கான அதிகாரிகளின் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.
டொலர் பற்றாக்குறையால் இலங்கை கடற்பரப்பில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டொலர் வழங்கினால் அதில் ஒன்றை உடனடியாக விடுவித்து டீசல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளும், நாள் ஒன்றுக்கு 18000 டொலர் என்ற தாமத கட்டணத்தை செலுத்த நேரிடும் என அமைச்சர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

திங்கள், 17 ஜனவரி, 2022

அமெரிக்காதடுப்பூசி எந்த நிலையில் உள்ளது என வெளியிட்ட அறிக்கை

இந்த தடுப்பூசி அமெரிக்காவில் விலங்கு சோதனைக்கு முன்னேறியுள்ளது, அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நாங்கள் உறுதிசெய்தவுடன், அது மனித சோதனைகளாக முன்னேறும் “என்று தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் இருக்கும் பேராசிரியர் பெட்ரோவ்ஸ்கி கூறியுள்ளார்.அனைத்து சோதனைகளும் முடியும்வரை எதிர்பார்ப்புகளை 
அதிகரிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். எப்போது தொடங்கப்பட்டது? COVID-19 இன் மரபணு வரிசை ஜனவரி மாதத்தில் கிடைத்தவுடன், அவர்கள் உடனடியாக இதைப் பயன்படுத்தினர்,SARS கொரோனா
 வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய அவர்களின் முந்தைய அனுபவத்துடன் இணைந்து, ஸ்பைக் புரதம் எனப்படும் முக்கிய வைரஸ் இணைப்பு மூலக்கூறின் தன்மையைக் கண்டறிந்தனர். வைரஸ் மனித 
உயிரணுக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடையாளம் காண ஸ்பைக் புரதத்தின் கணினி மாதிரிகள் மற்றும் அதன் மனித ஏற்பியான ACE2 ஐப் பயன்படுத்தினோம்,
பின்னர் இந்த செயல்முறையைத் தடுக்க ஒரு தடுப்பூசியை வடிவமைக்க முடிந்தது. என்று அவர் கூறியுள்ளார். COVID 19 மற்ற கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இது இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. SARS வைரஸுடன் கொரோனா 
வைரஸ் நெருங்கிய தொடர்புடையது, மேலும் இவை ஒரே மாதிரியாக செயல்படுகிறது. சார்ஸ் வைரஸின் இறப்பு விகிதம் 10% சதவீதமாக இருந்தது.
இன்னும் முழுவதும் கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் 1-3% சதவீதமாக உள்ளது. இது இன்னும் அதிக ஆபத்தான வைரஸாக மாறும், ஏனெனில் இது 30 மனிதர்களில் ஒருவரைக் கொல்கிறது. MOST READ:உலக வரலாற்றில் ஒரு ஓட்டால் முடிவு மாறிய தேர்தல்கள்… இந்தியாவில் எத்தனை தெரியுமா?
கொரோனா வைரஸின் தனித்துவம் என்ன? கொரோனா வைரஸின் தனித்துவம் என்னவெனில்மனிதரிடமிருந்து மனிதனுக்கு விரைவாக பரவுவதற்கான அதன் திறனும், அதைச் சுமக்கும் நபருக்கு அறிகுறிகள் 
இல்லாதபோதும் பிறருக்கு பரவுவதற்கு திறனும் ஆகும். இந்த பண்புகள் மிகவும்
 ஆபத்தானவை அதேசமயம் இதனை கட்டுப்படுத்துவது கடினம் ஆகும்.
தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியுமா? கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
. அதனால்தான் SARS மற்றும் MERS வைரஸ் பற்றி 
ஏற்கனவே பல நாடுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் SARS வைரஸ் அமைப்புடன் தொடர்புடைய கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறிவது சாத்தியமானதுதான் என்று 
மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எவ்வளவு விரைவில் தடுப்பூசியை எதிர்பார்க்கலாம்? மனிதர்கள் மீதான தடுப்பூசிகளின் சோதனை தொடங்கிவிட்டதா என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் சந்தேகமாகும். மனிதர்களின் மீதான சோதனை அமெரிக்காவில் மற்றொரு மிகவும் சோதனைக்குரிய ஆர்.என்.ஏ அடிப்படையிலான
 முறையில் தொடங்கியது.
விலங்குகளின் செயல்திறன் சோதனையை முழுவதுமாக தவிர்ப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் இதை அடைந்தனர், இது மிகவும் ஆபத்தான படியாகும். நேரடி வைரஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையும் சீனாவில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த மனித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.
MOST READ:மரணம் வரப்போவதை உணர்த்தும் உலகம் முழுவதும் இருக்கும் அறிகுறிகள்…இதுல ஒன்னு இருந்தாலும் மரணம் உறுதி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வைரஸை வெல்ல ஒரே வழி மற்றவர்களுடன் நெருங்கிய
உடல் தொடர்பு இல்லாதது மற்றும் சமூக தனிமையை 
கடைபிடிப்பதுதான், மற்றும் சாப்பிடுவதற்கு அல்லது உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன்பு கைகளைக் கழுவுவதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 14 ஜனவரி, 2022

அனைவர்க்கும் என் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்.14.01.2022

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தமிழர் திருநாளாம் தைத்திருநாள் 
நல் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளான14-01-2022.இன்று
தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக
அனைவர் வாழ்விலும் நிம்மதி
நிலைக்கட்டும்.
பொங்கலோ பொங்கல்
வாழ்க தமிழ் தழரால்...!
கடவுளே துணை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
எமது நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்.
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வியாழன், 13 ஜனவரி, 2022

நாட்டில் இனி வரும் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் பாரிய ஆபத்தாம்

மீண்டும் கோவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது.இதன் காரணமாக மீண்டும் கோவிட் அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபுடனான கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது. அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>Blogger இயக்குவது.