எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு
இந்தத் தகவலை லிற்றோ காஸ் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் 220,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவை
விரைவில்
நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தினமும் 90,000-100,000 வரை உள்நாட்டு எரிவாயு
சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதற்கு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் என குறித்த நிறுவனம்
நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.நாட்டில் தற்போது ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக