ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நாட்டில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடரும்:பொருளாதார நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை

இலங்கையின்  அந்நியச் செலாவணி கையிருப்பு அன்னியச் செலாவணி வரவால் அவ்வப்போது வளர்ந்து வந்தாலும், இந்த ஆண்டும் தற்போதைய டொலர் நெருக்கடியை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய கடன் பொறுப்புகள் தீர்க்கப்படாமல் உள்ளமையினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.அதற்கமைய பொருட்கள் தட்டுப்பாடு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுதல், தொடர்ந்து இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்தல் 
போன்ற நிலைமையை
இந்த வருடம் முழுவதும் முகம் கொடுக்க நேரிடும்.அந்த நிதி நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாவிட்டால் அரசாங்கமும் மத்திய வங்கியும் வலுவான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
மத்திய வங்கியின் பல உத்திகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை எனவும் பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.