வியாழன், 18 ஜூலை, 2024

உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக Ursula von der Leyen இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
720 உறுப்பினர்களைக் கொண்ட அறையில் இரகசிய வாக்கெடுப்பில் 401 வாக்குகளும், எதிராக 284 வாக்குகளும் 
ஐரோப்பிய 
ஒன்றியத்தின் சக்திவாய்ந்த நிர்வாகக் குழுவின் தலைமையில் மற்றொரு ஐந்தாண்டு காலத்திற்கு வான் டெர் லேயனின் முயற்சியை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
முந்தைய நாள் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், உக்ரைனில் ரஷ்யாவின் போர், உலகப் பொருளாதாரப் போட்டி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் சவால்களால் வடிவமைக்கப்பட்ட செழிப்பு மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 
ஒரு திட்டத்தை வகுத்தார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகள், அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு உலகில் ஐரோப்பாவின் இடத்தை வரையறுக்கும். நமது எதிர்காலத்தை நாமே வடிவமைக்கலாமா அல்லது நிகழ்வுகளால் அல்லது மற்றவர்களால் வடிவமைக்கப்பட வேண்டுமா என்பதை இது 
தீர்மானிக்கும்” என்று வான் டெர் லேயன் தனது ரகசிய வாக்கெடுப்புக்கு முன்னதாக தெரிவித்தார்.
 காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தின் “பசுமை ஒப்பந்தம்” மாற்றத்தில் பின்வாங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 17 ஜூலை, 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது வெளியான அறிவிப்பு

இலங்கையில்  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில்  இடம்பெறுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(17.07.2024) காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலயத்திற்கு 
வருகை தந்திருந்தார்.
 இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது. இதன்போது புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை
 காணப்படும் நிலையில் அதன் அபிவிருத்தி தொடர்பில் 
கலந்துரையாடப்ட்டது.
 மேலும் 1300 வைத்தியர்கள் மற்றும் 500 தாதியர்கள் நாட்டினை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மேலும் 15 வைத்தியர்கள் மீள திரும்பியுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி
 குறைகின்ற 
பொழுது மீள நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் சுட்டிகாட்டப்பட்டது.
 இதேவேளை 850 வகையான மருந்து வகைகளில் 40 வகையான மருந்து வகையே தட்டுபாடு காணப்படுகின்றது
 ஊடகங்களே இதனை பெரிதாக்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக
 இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது 
எனவும் தெரிவித்தார்.
 இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என கேட்டார் ? இதன் பொழுது எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய 
குழு முடிவெடுக்கும்.
 இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன் . இதற்கு மக்கள் யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 16 ஜூலை, 2024

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு
 தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனு திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
 வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும்
 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 14 ஜூலை, 2024

யாழில் சூரிய மின்னிணைப்பில் மோசடி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை

யாழில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ளது.
 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு
 செல்லப்பட்டதை தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து 
அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச் சுக்கு உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும், யாழில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் 
சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள்
 சமர்ப்பிக்கப்படும்போது 
முறைகேடான விதத்தில்அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக
 நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப் பட்டுள்ளன என்றும், 
இவை குறித்து
 மின்சாரசபை யின் பொது முகாமையா ளருக்கு முறைப்பாடுசெய்த வாடிக்கை யாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதனையடுத்தே குறித்த விடயம் தொடர் பில் சுயாதீன விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிப தியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வைடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 13 ஜூலை, 2024

தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு 
வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றையதினம் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் எங்கே
 எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 12 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பதிவான நிலநடுக்கங்கள்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் கரையோர
 பகுதிகளில் இவ்வாறு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக 
தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
6.4 ரிச்டர் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு நிறுவனங்கள் 
அறிவித்துள்ளனர்.
முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுப் பகுதியில் கரையோரங்களில் சில நில அதிர்வுகள் 
பதிவாகியுள்ளன.
நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின் மா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வருடம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகின்றன எனவும் அதில் அனேகமானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
 அடிக்கடி நில அதிர்வு இடம் பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது உசிதமானது என அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள கலந்துரையாடலில் பங்கேற்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12.07.2024) நடைபெறவுள்ள 5 ஆவது அமெரிக்க - இலங்கை பங்காண்மை கலந்துரையாடலில் இலங்கை சார்பில் வெளிவிவகார 
செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
 இலங்கை - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்றைய தினம் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு 
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் 
செயலாளர் அருணி விஜேவர்தனவும், அமெரிக்கா சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் செயலர் ஜோன் பாஸும் இணைத்தலைமை 
தாங்கவுள்ளனர்.
 இக்கலந்துரையாடலில் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், காலநிலை மாற்றம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார 
ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
 அதேபோன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை ஊக்குவித்தல், இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், உலக
 அரங்கில் பொது அக்கறைக்குரிய விடயங்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பைப்பேணல் என்பன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
 இதில் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவும், அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்பர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 10 ஜூலை, 2024

அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அறிக்கை சமர்ப்பிப்பு

ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன.
 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.
 இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின்
 சுயநிர்ணய உரிமைக்கு தீர்வுகாணக்கூடிய அதன் சாத்தியப்பட்டாமையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடையும் தருணத்தில்
 இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 நல்லிணக்கம் பற்றி இலங்கை அரசாங்கம் பேசுகின்ற போதிலும் தமிழர் இனப்படுகொலையின் 15 வருட நினைவேந்தல் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
 குறித்து அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 இராணுவமயமாக்கல்,நிலஅபகரிப்பு,சித்திரவதைகள் தடுத்துவைத்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களிற்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி மக்கள் விசனம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி யில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  
கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று (8.07.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் 
காயமடைந்துள்ளனர்.  
எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு 
இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள் 
கிடைத்துள்ளன.  
அதற்கு அமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி 
அமைக்கப்பட்டுள்ளது.  
வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உற்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 என்பது  குறிப்பிடத்தக்கது
திங்கள், 8 ஜூலை, 2024

நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினால் வட் வரியை உயர்த்த வேண்டி வரும்

நாட்டில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கூற்றுப்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், தற்போதைய 18% VAT 20% - 21% ஆக 
அதிகரிக்கப்பட வேண்டும். 
பொதுமக்களை ஒடுக்கி இதுபோன்ற கோரிக்கையை நிறைவேற்றும் தகுதி அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். 
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளம் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 7 ஜூலை, 2024

நாட்டில் அம்பாள்குளம் பகுதியில் கட்டுமானப் பணிகளின் நிறைவுக்காக காத்திருக்கும் ஆலயம்

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமனோன் மணி அம்பாள் ஆலயம் கட்டுமானப் பணிகளின் நிறைவுக்காக
  காத்திருக்கிறது. 
குறித்த ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 6 ஜூலை, 2024

நாட்டில் அரச துறையினருக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது ஜனாதிபதி திட்டவட்டம்

நாட்டில் அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 
ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வில் இன்று (06.07) வெல்லவயில் இடம்பெற்ற
 நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி
 மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
 அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 5 ஜூலை, 2024

இந்திய முதல்வர் ஈழ தமிழ் பெண் உமா குமரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை
 சூடியுள்ளார்.
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அதில், "ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்" 
என்று பதிவிட்டுள்ளார். 
 பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக உமா குமரனுக்கு 
இந்த இணையத்தின் நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 4 ஜூலை, 2024

நாட்டில் தேர்தலுக்கு இடைக்கால உத்தரவு குறித்த மனு மீது அரசாங்கம் கவனம்

நாட்டில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு
 பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம்
 செலுத்தியுள்ளது.
 மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி 
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை 
நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு
 இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.
 இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 3 ஜூலை, 2024

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் காணியை உரிமை மாற்றம் செய்த பெண்கள் கைது

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு
 வழங்கியிருந்தார்.
இந் நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம்
 செய்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்துள்ளதுடன் 
அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இருவரையும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காக தான் ஆள்மாறாட்டம் செய்ததாக 
குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய இருவரும் விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது .
சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 2 ஜூலை, 2024

நாட்டில் பொலிஸார் புலனாய்வு விசாரணையின் போது மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகக்கூடாது

நாட்டில் பொலிசார் புலனாய்வு அலுவலர் என்ற வகையில் தங்களது புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிசார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார். 
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், குற்றவியல் சட்டப் புலனாய்வுகள் பொலிசில் முறைப்பாடொன்றினைச் செய்வதன் மூலமோ அல்லது முறைப்பாடின்றியோ பொலிசார் விசாரணைகளை 
ஆரம்பிக்கலாம். அம்மீறல்களை புலனாய்வு செய்வதன் நோக்கம் யார் யாருக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு இயன்றளவு
 விடையளிப்பதாகும்.
 மீறல் சம்பவம் எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளதென்பதையும் ஒரு சம்பவத்தில் எத்தனை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் இனங்காண இந்த புலனாய்வுகள் உதவும். 
இப்புலனாய்வுகளின் போது சந்தேக நபருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ உள ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தீங்கு ஏற்படாத வண்ணம் விசாரணைகள் செய்யப்படவேண்டும். 
மனித உரிமை மீறல் சம்பவம் என்பது ஆரம்பமும், 
முடிவும் உள்ள ஏதோவொரு நிகழ்வாகும். அது தனி நிகழ்வாக, தொடர் நிகழ்வாக. பலர் இணைந்து இடம்பெறும் கூட்டு 
நிகழ்வாக இருக்கலாம். 
இதனை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்கின்ற போது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் மீறல்கள் ஏற்படாத வகையில் பொலிசார் செயற்படவேண்டியது அவர்களின் கடமையிலான பணியாகும். 
முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும். இது மனித கௌரவத்தை 
பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாச்சாரம் இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன் வந்து செயற்படவேண்டும்” எனத் 
தெரிவித்துள்ளார். 
இந்நிகழ்வின் போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி. எம்.ஏ.சி.எம். பசால், மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெறோஸ் ஆகியோர் விரிவுரையாற்றினர். என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 1 ஜூலை, 2024

சோதனையின்போது சீனாவில் விழுந்து நொறுங்கிய ரொக்கெட்

சோதனையின் போது  சீனாவின் ராக்கெட் விழுந்து நொறுங்கியது. டியான்லாங்-3 என்ற ராக்கெட்தான் இப்படி விழுந்து 
நொறுங்கியுள்ளது. 
ராக்கெட் ஏவுகணை மையத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே அதன் முதல் கட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 
இதன் சில பகுதிகள் சீனாவின் கோங்கியில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 30 ஜூன், 2024

நாட்டில் மொனராகலையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

நாட்டில் 20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பேரில் 600 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெல்லவாய மகிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு 
இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகூடிய காணி உறுதிப் பத்திரங்களைக் கொண்ட பிரதேச
 செயலகப் பிரிவில் குளங்களை புனரமைப்பதற்காக மேலதிக ஒதுக்கீடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 29 ஜூன், 2024

எம் தமிழ் பொது வேட்பாளர் இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் ச
ந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. 
 சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன. யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். 
அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை கதைக்கவில்லை. மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது 
இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என
 தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் 
தோல்வியடைந்தது. 
 நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு 
அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் 
கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. 
ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வே
ட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது
 தொடர்பாக 
ஜெய் சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, 
சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார். 
 தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 
13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று 
சொல்கிறார்கள். 34வருடமாக பொலீஸ்
 அதிகாரம் இல்லை
 காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. 
குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர். எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் 
யார் என்பதை காட்டலாம் ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் 
பொதுவேட்பாளர். 
 தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 28 ஜூன், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ஆளுநர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 வடமேல் மாகாணத்தில் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) குருநாகல் நகர மண்டபத்தில், 
ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற
 போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் , சிந்தக அமல் மாயாதுன்ன , அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புற, அலி சப்ரி ரஹீம் மற்றும் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, மாகாண கல்வி
 அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் 
கலந்து கொண்டனர்
 இங்கு தொடர்ந்தும் பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மேலும் கூறியதாவது, இலங்கையில் தற்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது. மின்சாரம் இன்றி
 மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள். ஆனால் இன்று
 அந்த நிலை மாறியுள்ளது. 
அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றது. வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புகளை
 வழங்குவதற்கான 
நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம்
 வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் நான்காயிரத்து இருநூறு பேரளவானோருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
தலைமையிலான 
அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாதொழிக்கப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் இன்னொரு கட்டமாக 
வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் ஆயிரத்து ஐநூறு பேரளவிலானோருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளோம். 
 அதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது 
அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக
 நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றார். அவரின் கல்விக் கொள்கையை அடியொற்றி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை 
மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
 வடமேல் மாகாணத்தை , நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும். அதற்கான முக்கிய பொறுப்பு, இன்று பட்டதாரி ஆசிரியர்களாக
 நியமனம் பெறும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியினரை , நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய
 பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதனை உரிய 
முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் ஜூலையில் எண்ணாயிரம் பேருக்கு நிரந்தர நியமனம்

நாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு 
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, 
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.
 நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Blogger இயக்குவது.