நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர், கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட
வேண்டும் என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், முறையான கலந்துரையாடலின் பின்னர்,
ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக