திங்கள், 18 நவம்பர், 2024

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில்

 பத்தாவது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் சாளரம் ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர 
தெரிவித்துள்ளார். 
 இந்த சாளரம் இன்றும் (19.11) நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அங்கு அனைத்து எம்.பி.க்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள் வழங்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் மேற்கொள்ளப்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.