புதன், 21 மார்ச், 2018

சாவகச் சேரி வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர் குழு அட்டகாசம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலை பொருட்களை 
சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் போது வைத்தியசாலையின்
 இரும்புக் கதவு, மேசை ஆகியன சேதமடைந்துள்ளன.அட்டகாசத்தில் ஈடுபட்ட இந்த குழு, வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மிரட்டி விட்டு தப்பிச் 
சென்றுள்ளது.
இன்று(21-03-2018) காலை வைத்தியசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களை மிரட்டியமைக்காக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அச்சுதனினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் 
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..நேற்றையதினம்(20-03-2018) செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் சாவகச்சேரி நகரை அண்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் வீதியில் 
கிடந்துள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலைக்கு தெரியப்படுத்திய நேரத்தில் அம்புலன்ஸ் இல்லாமையை காரணம் காட்டியதில் இந்த விஷமச் செயல் இடம்பெற்றதாக 
தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குறித்த சமயம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பொலிஸ் வீரர்கள் தினம் காங்கேசன்துறையில் நடைபெற்றது

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் (21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர
 பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூரப்பட்டது.இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ்
 அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிசிர 
குமார ஹேரத் மற்றும் பிரியந்த ஆகியோர் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ளடங்கும் பலாலி அச்சுவேலி
 இளவாலை தெல்லிப்ளை காங்கேசன்துறை நெல்லியடி பருத்தித்துறை வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
 கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






Blogger இயக்குவது.