சனி, 31 அக்டோபர், 2020

வெளி மாவட்டத்தில் இருந்து யாழிற்கு வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

யாழ்ப்பாணதிற்கு வரும் வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் அனைவரும் 31-10-20-இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைமுறை14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே அவர் இந்த அறிவித்தலை 
விடுத்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர் குறித்த மாநகர பகுதியில் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை, 
உடனடியாக 
ஆராயும்படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய இந்த நடைமுறை. 31-10-20-இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 30 அக்டோபர், 2020

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியேறும் மக்களை தேடுதல் பொலிஸார்

பொலிஸ் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில், இலங்கையின் மேல் மாகாணத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களை கண்டறிவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
 பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் மாகாணத்திற்குள் இருக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும்; பெரும்பாலானோர்
 மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்துக்கு வெளியே பயணித்தவர்கள் தங்கிருக்கலாம் என்று நம்பப்படும் விருந்தகங்கள் மற்றும் பிற தங்குமிடங்கள்
 ஆகியவை தொடர்பில் காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை
 மீறி மேல்மாகாணத்துக்கு வெளியே பயணித்த மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் 
எச்சரித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை,உத்தரவு நீக்கப்பட்டவுடன் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கு மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களை அடையாளம் காண ஏற்பாடுகள் நடந்து வருவதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>>



வியாழன், 29 அக்டோபர், 2020

நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் மூவர் பலி பலர் காயம்

பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் 
தெரிவிக்கின்றது
இன்றையதினம் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
இதனை நிஸ் நகர மேயர் மற்றும் பிரான்ஸ் அரசியல்வாதி ஒருவரும் உறுதி செய்துள்ளதுடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தேவாலய பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து 
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தேவாலய பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




யாழ் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம் 29-10-20

யாழ் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் 29-10-20.இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் போது, வலி தெற்கு பிரதேச சபை வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே என பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள். 29-10-20.இன்றைய தினம் தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டிட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதேச சபையினால் வழங்கப்பட
 இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா?
எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள். உங்களுடைய முதலாலித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் 
மீது திணிக்காதே.
"வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்" என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் ஏந்தியிருந்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





சுற்றுலா பயணங்களை நுவரெலியாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை 
விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என மாவட்ட செயலாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>





செவ்வாய், 27 அக்டோபர், 2020

பாகிஸ்தானில் பாடசாலையில் பாரிய குண்டு வெடிப்பு மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் மத பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் எழுவர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலேயே இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 5 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சப்காத் மலிக், பாகிஸ்தான் எக்ஸ்பிறஸ் ரிபியூன் என்ற ஊடகத்துக்கு 
தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் ஒருவர் பை ஒன்றை எடுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர் 
தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் அனைவரும் 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் நால்வர் 13 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மருத்துவமனை 
வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது பல மாணவர்கள் அங்கே படித்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற பகுதி ஆப்கான் எல்லையில் அமைந்துள்ளது.எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு 
கூறவில்லை.
இந்த தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தாக்குதல்தாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஆயுததாரி ஒருவர் இந்தப்பகுதியில் உள்ள படையினரின் பாடசாலை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழந்ததும் அவர்களில் பெருமளவானோர் சிறுவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 26 அக்டோபர், 2020

மனோவும் கூட்டணியும் துமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் கையெழுத்து

பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை
 பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது 
கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான
 சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, 
வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு
 வழங்கிய அறிக்கையில்,
“முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, 
அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு அதிகாரிகள் அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.
நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை செயற்பாட்டாளன். வெள்ளை வான் கடத்தல், சட்டத்துக்கு 
அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். எனவே எனக்கு மனித உரிமை தொடர்பில் கற்பிதம் தேவையில்லை.
இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. 
குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான 
கொள்கை நிலைப்பாடு.
 துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என
 நான் எண்ணுகிறேன்.
அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை 
இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். 
அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ
 விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் 
கோருகிறேன்.என்றுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 அக்டோபர், 2020

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோர்.

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த 
சம்பவம் பதிவாகியுள்ளது.
திரு. அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது ஐந்து வயது பெண் குழந்தை, மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து 
வந்துள்ளனர். குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து, அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
.இதனையடுத்து 
குழந்தைகள் இருவரும், மூன்று தினங்கள் சடலங்களுடன் இருந்துள்ளனர்.இதனிடையே விக்டோரியா யாகுனின் உறவினர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ள
 நிலையில், பெண் குழந்தை அதற்கு பதில் அளித்துள்ளார்.
 இதன் போது, தமது தாய் மற்றும் தந்தை நீண்ட நேரம் ‘தூங்கிக் கொண்டிருக்கிறான்’ என்றும், தாயின் உடல் 
அனைத்தும் கறுப்பாக 
மாற்றிவிட்டது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சந்தேகித்த உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதுடன், பொலிஸாரின் உதவியுடன் குழந்தைகளை மீட்டுள்ளார்.மூன்று 
தினங்களும் ஐந்து வயது பெண்குழந்தை தமது ஒரு வயது சகோதரனை பராமரித்து வந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, எரிவாயு ஆலைத் தொழிலாளி
 ஒருவர் யாகுனினுக்கு இறப்பதற்கு 
முதல் நாள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊருகாய் போத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.குறித்த ஊருகாய் போத்தல் சமையலறையில் திறந்திருந்து வைக்கப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இவர்கள் ஊருகாய் உட்கொண்டதையடுத்து ஊறுகாயிலிருந்து வரும் போட்லினம் நஞ்சுதான் மரணத்திற்கு காரணம் என்று 
சந்தேகிக்கப்படுகிறது. போட்லினம் நச்சு 
மூலம் முடக்கம் மற்றும் சுவாசக் கோளாறு மூலம் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த தம்பதியினர் உயிரிழப்பிற்கும் இது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் இடையே வேறு எந்த 
பிரச்சினையும் இருக்கவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும் குழந்தைகளை யாகுனின் தந்தை 
பராமரித்து வருகிறார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 23 அக்டோபர், 2020

நடுக்கடலில் வைத்து இரவிரவாக பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல்

பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது நடுக்கடலில் வைத்து முகமூடி அணிந்த ஒன்பது பேர் குறித்த இருவர் மீதும் தாக்குதல் 
நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம்22-10-20. அன்று இரவு இடம் பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் கடல் தொழிலுக்காக பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து இருவர் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு
 இருந்துள்ளனர்.
இதன்போது மூன்று படகுகளில் வந்த முகமூடி அணிந்த ஒன்பது பேர் தொழிலில் ஈடுபட்ட இருவரையும் சுற்றி வளைத்து இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை இரண்டு மணிவரை கடுமையாக 
தாக்கியுள்ளனர்.
அவர்கள் தாக்குதல் நடாத்தும் போது “நீங்கள் தானே எம்மை கடலட்டை தொழில் செய்ய விடாது தடுத்தது”, என கேட்டுக் கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்த 45,000 பெறுமதியான ஜீபிஎஸ் நங்கூரம் உட்பட்ட பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இருவரும் அவர்களிடமிருந்து தப்பி படகுடன் கரை வந்து சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அனைத்து இந்துக்களுக்கும் முக்கிய செய்தி

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26-10-20.ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அறிவித்துள்ளார்.
ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25-10-20.ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி
 திதி நிற்கின்றது.
. நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே. 26-10-20.ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் 
செய்யவேண்டும்.
அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட்டார்கள்.
எனவே 26.10.2020. திங்கள் காலை 9.மணி 3 நிமிடத்திற்க்கு மேல். 10.மணி 15.நிமிடத்திற்குள். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வீதிகளில் வீசுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகக்கவசங்களை பொறுப்பற்ற விதத்திலும், பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன 
தெரிவித்தார்.
எனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஒரு குப்பைத் தொட்டியில் அல்லது பொருத்தமான இடத்தில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் போது, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்
 வலியுறுத்தினார்.¨

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 21 அக்டோபர், 2020

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவரை இலங்கையில் தேடல்

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு
 கண்டனங்களும் எழுந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நிவித்திகலவில் 7 வயதுச் சிறுவன் மீது பட்டாசு கொழுத்திப் போட்ட கடை முதலாளி

இரத்தினபுரி – நிவித்திகல பிரசேத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு
 காரணமாக கடை முதலாளி ஒருவர் பளி  தீர்க்கும் வகையில் ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி 
போட்டதில் சிறுவனின் முகம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிவித்திகல 
பொலிஸார் தெரிவித்தனர்.இதில், காயமடைந்த சிறுவன் நிவித்திகலை பிங்கந்த தோட்ட பிரிவை சேர்ந்த தமிழ் பாடசாலை 
ஒன்றில் தரம் இரண்டில் கல்வி கற்று வருகின்றார்.குறித்த சிறுவனின் தாய் வேலைக்கு சென்றதாகவும் தந்தை 
கொழும்புக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, சிறுவன் சந்தேகநபரின் கடை முன் வீதியில் நடந்து சென்று 
கொண்டிருந்த போது கடை முதலாளி சிறுவன் மீது பட்டாசு கொழுத்தி போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேற்படி 
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை 
நடாத்தி வருவதோடு தலைமறைவாகி உள்ள சந்தேகநபரை தேடி பொலிசார் 
வலை விரித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 20 அக்டோபர், 2020

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கு இலங்கையில் இருந்து அடிக்கல்

இந்தியா.அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு
 அனுப்பி வைக்கப்படவுள்ளது.இந்தக் கல் இலங்கையின் மலைப் பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட 
ஒன்றாகும்.
இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது.அந்த ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், பின் இதுவரை
 காலமும் அந்தக் கல் பூஜிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான
 அடிக்கற்களில் ஒன்றாக இதனை 
பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தக் கல் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திலும், ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு
 அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பவும் ஏற்பாடுகளும் 
செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





களுத்துறைஉட்பட ஐந்து பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு அமுல்

நாட்டில்.களுத்துறை – குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல, தும்மலசூரிய பொலிஸ் பகுதிகளில்.20-10-20. இன்று உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை பொலிஸ் பேச்சாளர்
 தெரிவித்தார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 அக்டோபர், 2020

மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.19-10-20

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல்.19-10-20. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், 19-10-20.இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத்தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார். பின்னர் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன், ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி
 செலுத்தினார்கள்.
போர் சூழலில் யாழில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்றவற்றில்
 பணியாற்றி இருந்தார்.
அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நாட்டில் பேருந்திலிருந்து பரவிய கொரோனா கடற்படை கப்பல்துறையின் ஊழியர்களுக்கு

கொழும்பு கடற்படை கப்பல்துறையின் (dockyard) ஐந்து ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஐந்து ஊழியர்களின் நெருங்கிய கூட்டாளிகள் ஏற்கனவே புலனாய்வு 
மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.மத்துகம
 பேருந்துடன் தொடர்புடையதே, 
கொழும்பு கடற்படை கப்பல்துறையில் அடையாளம் காணப்பட்ட தொற்று என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.மத்துகம
 பேருந்து உரிமையாளர், சாரதி, நடத்துனர், அந்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி ஆகியோர் கொரோனா
 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அந்தப் பேருந்தில் பயணித்த 
துறைமுக ஊழியர் ஒருவரும் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்குகிறார். அவர் மூலம், ஏனைய நால்வரிற்கும் பரவியிலிருக்கலாமென கருதப்படுகிறது.இதனால் துறைமுக பணிகள் பாதிக்கப்படாது. கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 
பணிகள் தொடரும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 17 அக்டோபர், 2020

சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணிவெற்றி பெற்றுள்ளது

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 34வது போட்டி.17-10-20. இன்று நிறைவுக்கு வந்தது. சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்களினால் அதிரடி வெற்றியை
 பெற்றுள்ளது.
போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ஓட்டங்களைப் 
பெற்றுக் கொண்டது.
சென்னை அணிசார்பாக பப்டு ப்ளஸிஸ் 58, அம்பாத்தி ராயுடு 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். டெல்லியின் பந்துவீச்சில் அதிகபட்சம் அன்ரிச் நொர்ஜே 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 180 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 19.5வது ஓவரில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று 
வெற்றியடைந்தது.
டெல்லி அணிசார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய சிகார்த் தவான் 58 பந்துகளில் 101, ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சென்னையின் பந்துவீச்சில் தீபக் ஷாஹர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 16 அக்டோபர், 2020

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில், மூவர் பலி

கொலம்பியாவில் விமானம் ஒன்று எதிர்பாராமல் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்தவர்களில் மூவர் பலியாகினர்.கொலம்பிய தலைநகர் Bogotaவில் பிரபல மருத்துவர் Fabio Grandas. Grandas, தன் மனைவி
 Mayerly Diaz Rojas, குழந்தை Martin, மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஆயாவான Nuris Maza ஆகியோருடன் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.அப்போது 
எதிர்பாராவிதமாக திடீரென அந்த விமானம் விழுந்து 
நொறுங்கியுள்ளது. பதறிய மக்கள் அங்குமிங்கும் ஓட, உதவிக்குழுவினர் வந்து விமானத்திலிருந்தவர்களை வெளியே எடுக்க 
முயன்றுள்ளனர்.அப்போது, Grandas, அவரது மனைவி Rojas, மற்றும் ஆயா Nuris ஆகியோர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
மீட்புக்குழுவினர் Rojasஇன் உடலை விமானத்திலிருந்து வெளியே எடுக்கும்போது, அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.Rojas, தன் குழந்தை Martinஐ கட்டியணைத்து, தனது உடலை 
ஒரு கவசமாக பயன்படுத்தி பாதுகாத்துக்கொண்டிருந்திருக்கிறார்.Rojasஇன் கைகளை விலக்கியபோது, அவரது 
கைகளுக்குள் இருந்த குழந்தை Martin உயிருடன் இருந்திருக்கிறான்.தான் உயிரிழந்தாலும், Rojas தன் மகனை காப்பாற்றிய
 விதம் கண்டு, மீட்புக்குழுவினர் நெகிழ்ந்துபோனார்கள். குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை 
அளிக்கப்பட்டு வருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




Blogger இயக்குவது.