செவ்வாய், 27 அக்டோபர், 2020

பாகிஸ்தானில் பாடசாலையில் பாரிய குண்டு வெடிப்பு மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் மத பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் எழுவர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலேயே இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 5 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சப்காத் மலிக், பாகிஸ்தான் எக்ஸ்பிறஸ் ரிபியூன் என்ற ஊடகத்துக்கு 
தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் ஒருவர் பை ஒன்றை எடுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர் 
தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் அனைவரும் 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் நால்வர் 13 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மருத்துவமனை 
வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது பல மாணவர்கள் அங்கே படித்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற பகுதி ஆப்கான் எல்லையில் அமைந்துள்ளது.எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு 
கூறவில்லை.
இந்த தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தாக்குதல்தாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஆயுததாரி ஒருவர் இந்தப்பகுதியில் உள்ள படையினரின் பாடசாலை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழந்ததும் அவர்களில் பெருமளவானோர் சிறுவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.