வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நாட்டில் திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் தடை

 தற்போது நாட்டில் நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் 03-05-2021-திங்கட்கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து பொது நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 29 ஏப்ரல், 2021

அதிரடியாக திருமலையில் 6 பிரிவுகள் முடக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன.
இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா 
தெரிவித்தார்.
உப்புவேலி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம​ சேவகர் பிரிவு
திருகோணமலை காவல் துறை  பிரிவில்- மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் 
முடக்கப்பட்டன.
சீனக்குடா காவல் துறை  பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், டயினாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு 
முடக்கப்பட்டன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>நாட்டில் முன்னறிவித்தல் இன்றிசில பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்

நாட்டில்எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (28) இரவு ரிவி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பலமுறை அறிவுறுத்திய போதும், சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
கணிசமான அளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் அறிவித்த உடன் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
இம்முறை முன்னறிவித்தல் வழங்கி பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலமை ஏற்படின் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படும் எனவும் 
அவர்தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயின் முழு நாட்டையும் முடக்குவதற்காக தயார் இல்லை எனவும் கொவிட் நிலமை அதிகரித்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னறிவித்தல் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>நாட்டின் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

நாட்டில் அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று (29)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொவிட்19 தாக்கம் மூன்றாம் கட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்றிருந்த நிலையில் ஐந்து நாட்கள் பாடசாலை முடக்கம் ஏன் மேதினத்தினை நடாத்த எடுத்த நடாடகமா இது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 27 ஏப்ரல், 2021

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணியில் மீண்டும் அறிவித்தல் பலகை நாட்டிய இராணுவம்

யாழ்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது.
பருத்தித்துறை பொன்னாலை வீதியில், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 27 ஆண்டுகளாக இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்திலேயே இவ்வாறு இரவோடு இரவாக இராணுவத்தினர் அறிவித்தல் பலகையினை 
நாட்டியுள்ளனர்.
இவ்வாறு அறிவித்தல் பலகை நாட்டியுள்ள காணியானது, இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியென்றும் 
தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர், காணி உரிமையாளர்கள் காணியை சுத்தம் செய்திருந்தபோதும் அக்காணியில் அவர்கள் மீள் குடியேறாத நிலையில், இராணுவத்தினர் அதனை கையகப்படுத்த முனைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>எதிர்வரும் காலங்களில் மலையகத்தில்10 ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டங்கள்

மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம்  இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் 
தெரிவித்துள்ளார்.
நுவரெலியா- ஹற்றன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது, கொட்டகலையிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு சென்ற அவர், தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றமையை அவதானித்துள்ளார்.
அதன்பின்னர் அப்பகுதியிலிருந்த லயன் குடியிருப்புகளுக்கு சென்று, அங்குள்ள வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துக்கொண்டார். அங்கு உள்ள இந்திய வம்சாவளி மலையக மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில், பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் மக்களுக்கு இந்திய துணைத் தூதுவர்  தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை ஹற்றனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அதன் நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துக்கொண்டார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம்.26-04-2021. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி
 செலுத்தியிருந்தனர்.
‘தந்தை செல்வா’ என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் இலங்கை தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தலைவராவார்.
மார்ச் மாதம் 31ஆம் திகதி ஆயிரத்து 898 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்த செல்வநாயகம், ‘ஈழத்து காந்தி’ என உலகத் தமிழர்களால்
 போற்றப்படுகின்றார்.
யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, பரியோவான் கல்லூரிகளில், பழைய மாணவரான இவர் இலங்கை சட்டக் கல்லூரியிலும், லண்டன் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில்
 பட்டம் பெற்றார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் அங்கம் வகித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், இலங்கையின் முதல் இனத்துவ அடையாளக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியை
 ஸ்தாபித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சியை வலியுறுத்திய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.
ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தனிநாட்டு தீர்வை அவர்
 முன்வைத்தார்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் மனங்களில் ‘தந்தை செல்வா’ என்னும் நாமத்துடன் இன்றும் நிலைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

தமிழ் இலக்கணமாலை” ஆசிரியர்களுக்கான இணையவழிச் செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றன

தமிழ்ச்சோலைகளின் ஆசிரியவாண்மையை மேம்படுத்தும் நோக்காகக் கொண்டு, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மற்றும் ஐக்கிய இராச்சியக் கிளையினதும் ஆதரவுடன், ‘தமிழ் இலக்கணமாலை” என்னும் தலைப்பில் சூம் செயலி ஊடான இணையவழிச் செயலமர்வு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால்  25.04.2021.அன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் (பிரித்தானிய நேரம் 13.00மணி) 
நடாத்தப்பட்டது.
இலக்கணத்தை எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்னும் பிரிவுகளாக மிகவும் இலகுவான நடையில் தாய்த்தமிழகத்தில் இருந்து பேராசிரியர் திருமதி பி.விஜயலட்சுமி அவர்கள் நடாத்தியிருந்ததுடன் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் இலகுநடையில் பதிலளித்திருந்தார்.
அகவணக்கத்தோடு தமிழ்ச்சோலை ஆசிரியை சிவானுஜா குமணன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து
 வரவேற்புரையை தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் சார்பில் ஆசிரியை 
விஜகலா செல்வநாயகம் அவர்கள் வழங்கியிருந்தார். தொகுப்புரையை தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் சார்பில் ஆசிரியை திருமதி எம்.றேணுகா அவர்களும் ஐக்கிய இராச்சியக்கிளையின் சார்பில் ஆசிரியை திருமதி கெங்காதரன் அவர்களும் நன்றியுரையினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனையின் சார்பில் ஆசிரியர் திரு.அகிலன் அவர்களும்
 ஆற்றியிருந்தனர்.
நிறைவாகக் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலரும் பேராசிரியருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமது நன்றியறிதலைத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயலமர்வுகளை மேலும் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் கேட்டுக்கொண்டனர். தமிழ் இலக்கணத்தை கசப்பின்றி இவ்வாறும் நுணுக்காமாகக் கற்பிக்கலாம் என்பதைத் தாம் அறிந்து கொண்டதாகவும் ஆசிரியர்கள் பலரும் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
செயலமர்வை நடாத்திய பேராசிரியர் திருமதி பி.விஜயலட்சுமி அவர்கள், செயலமர்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரின் கல்வித் தேடல்கள் குறித்து மிகவும் உணர்வோடு பாராட்டியதுடன், ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற வகையில் இன்றைய செயலமர்வில் சொற்ப நேரத்தில் எல்லா விடயங்களையும் கூறமுடியாத 
நிலையை உணர்த்தி, மீண்டும் தான் குறித்த 
செயலமர்வை நடாத்துவேன் எனவும் இயல்புநிலை திரும்புமிடத்து நேரடியாகக் கலந்துகொண்டு செயலமர்வை முழுநாள் செயலமர்வாக நடாத்தத் தான் ஆவலோடு உள்ளதாகவும் உறுதியோடு தெரிவித்து விடைபெற்றார்.
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் செயலமர்வின் நிறைவுவரை 400 இற்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பிரான்சு மற்றும் பிரித்தானியாவில் இருந்து கலந்து பயனடைந்தமை 
பாராட்டத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

உண்மையாக சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருப்படாது

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (25) பதுளை ரிவ சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணத்திற்கான புதிய காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான 
ஆர்.ராஜாராம் மலையக
 தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா மகளிர் அணி செயலாளர் சுவர்ணலதா பிரதேச சபை உறுப்பினர், கிருஸ்ணவேனி பிரதேச சபை 
உறுப்பினர் சிவநேசன் பிரதி செயலாளர் பத்மநாதன் பிரதி செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவஞானம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் 
கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராதாகிருஸ்ணன், இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் பொது மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதே போல 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பொழுது மலையக மக்கள் அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டார்கள்.
அன்று அந்த விடயங்களை நினைத்தும் பார்த்தும் ஒரு சில பெரும்பான்மை சமூகத்தினர் சந்தோசப்பட்டார்கள். இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லை இது தனியே பெரும்பான்மை மக்களுக்கான நாடு என்று 
பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? பல நாடுகள் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு காரணம் பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரையும் இந்த நாட்டின் பிரஜைகளாக
 நினைக்கவில்லை.
தனியே இந்த நாடு பெரும்பான்மை மக்களுக்கு சொந்தமான நாடு என கூறுகின்றார்கள். இந்த நிலைமை தொடருமானால் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் பல தீவுகள் உருவாகலாம். அதன் முதலாவது தீவாக தற்பொழுது கொழும்பில் அமைக்கப்பட்டு வருகின்ற போட் சிடி என்று சொல்லப்படுகின்ற அபிவிருத்தி சீனாவின் 
தீவாக மாறிவிடும்.
இப்படி பல தீவுகள் இங்கே உருவாகி இலங்கை என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விடும். எனவே இந்த நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.
அப்படி ஒன்றுபடாவிட்டால் ஆண்டவன் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. எனவே இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் தமிழர்கள் முஸ்லிம்கள் ஏனையவர்களையும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாக 
இந்த நாட்டை 
காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருவப்படாது.என்பதுதான் உண்மை. எனவே இதனை புரிந்து இந்த அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 24 ஏப்ரல், 2021

ஆனைக்கோட்டையில் வீதியால் சென்ற இளம்பெண்ணின் மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டுள்ளது

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம்
 23-04-2021.அன்று  மாலை 6.45 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.அவர்களிடமிருந்து
 தப்பிக்க மோட்டார்
 சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு குறித்த பெண் வீடொன்றுக்குள் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு
 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மீண்டும் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.23-04-2021. இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது.
நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி 
செலுத்தப்பட்டது.
இறுதிக் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு உடைக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக இந்த தூபியை தகர்த்திருந்த நிலையில், அன்றிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய போராட்டம் தொடங்கியது.
இந்த நிலையில், அன்று முதல் தமிழர் பகுதிகளில் போராட்டங்கள்
 வலுப் பெற்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் எதிர்ப்புக்கள் தொடங்கின.
இவ்வாறான போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், மீண்டும் தூபியை நிர்மாணிக்க பல்கலைக்கழக நிர்வாகம் 
அனுமதி வழங்கியது.
முள்ளிவாய்க்கால்: இலங்கைப் போரின் இறுதி சாட்சி
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்
இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி, புதிதாக நினைவுத்தூபியை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பின்னர், தூபியை நிர்மாணிக்கும் பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இந்த தூபி திறந்து 
வைக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 22 ஏப்ரல், 2021

முசுரம்பட்டியில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள் வெட்டு

 கிளிநொச்சி, தருமபுரம் காவல் துறை  பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில்  21.04.2021.அன்று  இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
 சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>அநாவசியமாக 119 அவசர பிரிவை பயன்படுத்த வேண்டாம்

நாட்டில் 119 அவசர பிரிவை அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டாம் என காவல் துறை  ஊடக பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள் , அனர்த்தங்கள் மற் றும் திடீர் விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு துரிதமாகத் தெரி விக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காவல் துறை அவசர பிரிவான 119 துரித அழைப்பு சேவையைச் சிலர் அநாவசியமான முறை யில் பயன்படுத்துவதாக அஜித் ரோகண 
தெரிவித்துள்ளார் .
காவல் துறை அவசர பிரிவான 119 துரித அழைப்பு தொடர்பில் முன்னெடுக் கப்பட்ட நீண்ட ஆய்விலேயே மேற்படி தகவலானது கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மாத்திரம் குறித்த அவசர பிரிவிற்கு 1,232, 272 அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்தார் .
குறித்த புள்ளிவிபரங்களுக்கு அமைய நாளொன்றுக்கு 3000 இற்கு அதிக மான அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் , 8000 இறகும் அதிக மானோர் இத்துரித எண்ணைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றுள்ள தாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வசர பிரிவிற்கு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் 93% மான அழைப்புக்கள் தேவையற்ற விடயங்களுக்காகவே மேற்கொள்ளப் படுவதாகவும் இது அவசர பிரிவின் பணிகளுக்கு இடையூறாகவுள்ள தாகவும் அவர் மேலும்தெரிவித்தார் .
எனவே அவசர நிலைமைகளின் போது மாத்திரம் இத்துரித அவசர பிரிவு எண்ணை தொடர்புகொள்ளுமாறு பொது மக்களிடம் அஜித் ரோகண கோரிக்கை விடுத்துள்ளனர் .
காணி தகராறு , காசோலை மோசடிகள் மற்றும் பிற விடயங்கள் தொடர் பாக அவசர பிரிவான 119 துரித அழைப்பிற்கு அறிவிப்பதால் எவ்வித பய னையும் பெற்றுக்கொள்ள முடியாது என மேலும்
 தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>புதன், 21 ஏப்ரல், 2021

வடக்கில் பல இடங்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விஷேடவழிபாடு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன் 
ஆலயத்தில் 21-04-2021.இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய
 கடும்போக்காளர்களால்
 குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அத்தாக்குதலில் பலியான மக்களை
 நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் 
இடம்பெற்றதுடன், இறந்தவர்களிற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்விருட்சம் சமூக 
ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரபாகரக்குருக்கள்,சந்திரகுமார் கண்ணன்,தமிழருவி த.சிவகுமாரன்,நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,கிராமசேவையாளர்
 மற்றும் சமூகஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது
.கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர
 விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250 இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி 
நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் ,
 தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு , மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 19 ஏப்ரல், 2021

நவற்கிரி நிலாவரையில் அரச கடமைக்கு தடை ஏற்படுத்திய நிரோஸை துரத்தும் காவல்துறை

யாழ்  நவற்கிரி நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி 
அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய 
அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும்  இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் 
முறையிட்டனர்.
 அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி 
பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி  சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் 
உடன்படவில்லை.
தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 
பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு 
அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என 
அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை
 ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.  அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை 
எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி
 எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான்
 நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார்.  இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார
 சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது. 
இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி
 அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்  எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


இலங்கையில் இணைய ஊடகங்களை முடக்க சட்டம்

இலங்கை அரசு சத்தம் சந்தடியின்றி ஊடகங்களை முடக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.
இதன் ஒரு கட்டடமாக இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிப்புக்களை 
விடுத்துள்ளது.
இணையத்தில் போலி பிரசாரத்தைப் பரப்புபவர்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குற்றவியல் தண்டனைக் கோவை திருத்தப்படவுள்ளது.
இத்திருத்தமானது, பொதுமக்கள் அமைச்சர் சரத் வீரசேகரவால் முன்மொழியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்போதிருக்கும் சட்டமானது திருத்தப்படவுள்ளதாக, வீரசேகர,  தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நட்டில் கொழும்புதுறைமுநகரில் சட்டமொழுங்கிற்கு பொறுப்பு யார்

 கொழும்பு துறைமுகநகரில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா காவல் துறையினர்  ஈடுபடுவார்கள் என இராஜாங்க அமைச்சர் அஜித்கப்ரால் 
தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகநகரம் சீனாவின் காலனியாக காணப்படும் அங்கு சீனகாவல் துறையினரே  கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
கொழும்புதுறைமுகநகரம் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே காணப்படும் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
உத்தேச கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் துறைமுகநகரை சீனாவின் ஒரு பகுதியாக மாற்றாது என தெரிவித்துள்ள அவர் இலங்கைiயின் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுவிடமே துறைமுக நகர்மீதான கட்டுபாடு காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 சனி, 17 ஏப்ரல், 2021

சந்தேகத்தின்பேரில் தெரணியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
 திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்றைய தினம் 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வத்தளை யில் 2.4 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை பகுதியில் 2.400 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை  மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல் துறை  போதைப் பொருள் பணியகத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண
 தெரிவித்துள்ளார்.
ஹேரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
முச்சக்கரவண்டி சாரதி மருதானையில் கொடூரமாக தாக்கப்பட்டார்

மருதானை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இரும்புக் கம்பி மற்றும் வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.
 மருதானை மொஹிதீன் பள்ளிவாசல் வீதியில் கடந்த 10 ஆம் திகதி குறித்த முச்சக்கரவண்டி பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதியுள்ளது. பின்னர் மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 அதன்பின்னர் மேற்படி முச்சக்கரவண்டி பள்ளிவாசல் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் வாள்களுடன் அவ்விடத்துக்குவந்த குழுவொன்று அச்சாரதியை சரமாரியாக தாக்கும் காட்சி அருகிலுள்ள சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
 இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் சாரதியை மட்டுமல்லாது முச்சக்கரவண்டியையும் தாக்கி சேதப்படுத்தி அதனை புரட்டிப்போடும் காட்சியையும் காணக்கூடியதாக உள்ளது.
 மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் வேளையில் முச்சக்கரவண்டி சாரதி ஓடி உயிர்த்தப்ப முயலுவதையும் சிசிரீவி காட்சிகள் ஊடாக 
காணக்கூடியதாக உள்ளது.
 பலத்த காயமடைந்த 22 வயதான முச்சக்கரவண்டி சாரதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, சிசிரீவி காட்சிகளைக் கொண்டு சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 15 ஏப்ரல், 2021

அவுஸ்திரேலியாவால் இலங்கைக்கு ஆட்அதிநவீனட்ரோன் கொமராக்கள்

ஆட் கடத்தல் குறித்து விசாரணைஅவுஸ்திரேலியாவில் இருந்து 5 அதிநவீன ட்ரோன் கொமராக்கல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக இவ்வாறு ட்ரோன் கொமராக்கள்
வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோன் கொமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமையவே இவ்வாறு ட்ரோன் கொமராக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை தளபதி
 ரியர்அட்மிரல் மார்க் ஹில் 

தெரிவித்துள்ளார்.இவ்வாறான ட்ரோன் கொமராக்கள் ஆட் கடத்தலை தடுக்க பெரும் உதவியாக அமையும் என நம்புவதாக
 அவர் கூறியுள்ளார் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>அடுத்த மாதத்திற்குள் மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் ரணில்விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன
 தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தலைவர் தவிசாளர் வஜிர அபேவர்தன
 தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>Blogger இயக்குவது.