நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு 12 ஆயிரத்து மேற்பட்ட பாது காப்புப் படையினர் சேவையில் ஈட்டுப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊட கப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண
தெரிவித் துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் சகல வணக்கஸ் தானங்களுக்கும் மற்றும் கிஸ்தவ தேவாலங்களுக்கும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல் துறை, இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையின் ஆகியோரின் அனுசரணையில் குறித்த பாதுகாப்பு
முன்னெடுக்கப் படவுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் அமைந்துள்ள சகல வணக்கஸ் தானங்களுக் கள் மற்றும் கிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகில் 9 ஆயிரத்து 356 காவல் துறை, விசேட அதிரடிப் படையின் 146 பேர் , இராணுவத்தினர் 2540 பேர் விசேட பாதுகாப்பிற்காகச் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அதிக பாதுகாப்புப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக