இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் நேரில்
சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கை – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் தடவையாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக