சனி, 23 செப்டம்பர், 2023

நாட்டில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன 
தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் 60,000 பேருக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த 5,000 ஹெக்டேயர் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை விரைவாகக் கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து 
பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து 
ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மதா இணையம்.>>>

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

விரைவில் சமூக வலைதளங்களை கண்காணிக்க அமுலாகவுள்ள சட்டம்

 

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது 
மேடா ( Meta) நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
தினமும் இணையம் மூலமான குற்றங்கள் தொடர்பில் 14000 முறைபாடுகள் பதிவாகின்றன.அவற்றில் 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன.
எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் குறிப்பிடுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 21 செப்டம்பர், 2023

மாத்தறை கனங்கே பகுதியில்உருவாக்கப்பட்டுள்ள சோசலிச பஸ் தரிப்பிடம்

மாத்தறை கனங்கே பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு 
வருகின்றது.
 இந்த பஸ் தரிப்பிடம் உழைப்பு மற்றும் சோசலிசத்தின் சின்னங்களான அரிவாள் மற்றும் சுத்தியலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 உள்ளூர் இளைஞர்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த பஸ் 
தரிப்பிடம், பாடசாலை மாணவர் ஒருவரால் திறக்கப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



புதன், 20 செப்டம்பர், 2023

பெல்ஜியத்தில் புராதன சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு பதினாறு லட்சம் அபராதம்

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார். 
அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில்
 இருந்துள்ளார். 
தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்பெறுமதி வாய்ந்த சிகரட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு 
சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.  
கல்முனை பகுதியைச்சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


திங்கள், 18 செப்டம்பர், 2023

இரத்தினபுரி பிரதேசத்தில் உணவு விஷமானதால் மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை 
ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பும் போது ஏற்பட்ட சுகவீனம் 
காரணமாக சிறுவர்கள் குழு வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 சுமார் 30 சிறுவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

யாழ் தாவடியில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் ஐவர்: வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் யுவதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில், அந்த யுவதியை காதலித்ததாக 
கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது16-09-2023 சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசியதுடன் , வீட்டின் மீதும் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி 
மீதும் தாக்குதல் மேற்கொண்டு சேதங்களை ஏற்படுத்தியதுடன் , வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு 
தப்பி சென்று இருந்தது.
தாக்குதலில் வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வீட்டில் வசிக்கும் யுவதி மீது உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் காதல் வயப்பட்டு இருந்ததார் என்றும், அந்த காதல் விவாகரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
அதனை அடுத்து யுவதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூவரை 16-09-2023.சனிக்கிழமை மாலை பொலிஸார் 
கைது செய்துள்ளனர். மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 16 செப்டம்பர், 2023

நாட்டில் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் அகற்ற நடவடிக்கை

பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு 
மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்
 தெரிவித்தனர்.
வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் சட்ட ஏற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு வினவியமைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு
 தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இதில் எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் 
குறித்து ஆராயப்பட்டன.
எந்த சட்ட அடிப்படையில் அவ்வாறான உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள், எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என அரசாங்க 
நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியது.
இது விடயம் தொடர்பான தகவல்களைக் கூடிய விரைவில் குழுவில் சமர்ப்பிக்குமாறு கொழும்புத் துறைமுக நகர பொருளாதார 
ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
துறைமுக நகரத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் தொடர்பிலும் குழு மேலும் கேள்வியெழுப்பியது.
எனவே, குறித்த ஒழுங்குவிதிக்கு அனுமதி வழங்க முன்னர் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
ஸ்மார்ட் சிட்டி எண்ணக்கருவுக்கு அமைய தனியான 
நிலப்பரப்பில் துறைமுக நகரம் அமைக்கப்பட்டிருக்கும் 
நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் கழிவுநீர் முகாமைத்துவம், 
புதுப்பிக்கத்தக்க சக்தி, உரிய வடிகாலமைப்புக்கான 
பொறிமுறைகள் காணப்படுகின்றனவா என்றும் குழு, 
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.
கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் வடிகாலமைப்புத் தொடர்பில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கிடைத்த அனுபவம் துறைமுக நகரத்தை அமைக்கும்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குழுவின் 
நிலைப்பாடாக இருந்தது.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் துறைமுக நகரின் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தியில் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டமையும் இங்கு தெரியவந்தது.
இவை அனைத்தும் வரி செலுத்தும் நாட்டு மக்களின் பணம் என்பதால் இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை என்றும் குழு 
கேள்வியெழுப்பியது.
இதற்கமைய துறைமுக நகரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் வகைப்படுத்தல் மற்றும் வருமானம் கிடைக்கும் மார்க்கங்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கடுவெல நீதவான் மீது லேசர் பேனாக் கற்றையை பயன்படுத்திய ஆசிரியர் கைது

நாட்டில் டியூஷன் வகுப்புகளில் விளக்கமளிக்கப் பயன்படுத்தப்பட்ட லேசர் பேனாவை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்ய ஆசிரியர் ஒருவர்
 மீது கடுவெல நீதிமன்றில் 15-09-2023.இன்று முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது.
 கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார வழக்கு ஒன்றை நடத்தியபோது லேசர் பேனாக் கற்றையை நீதவான் மீது காட்டி கடமைக்கு குறுக்கிட்டதால் நீதிமன்றப் பதிவாளர் திருமதி திலுபா பிரியதர்ஷனி 
கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு 
செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தை சோதனையிட்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார.15-09-2023 இன்று உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தேசிய மனநல நிறுவனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மனநல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின் உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், சந்தேக நபரின் தொலைபேசி தரவு பதிவுகளை சரிபார்த்து அந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் 
உத்தரவிட்டார்.
 கோட்டே கொட்டுவெம்மா வீதியில் வசிக்கும் சதுஷ்க ஜனித் டயஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 14 செப்டம்பர், 2023

சாம்பல்தீவில் வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரையும் வியக்க வைத்துள்ளது

நாட்டில்  திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இத் திருமணம் 07-09-2023.வியாழக்கிழமை அன்று திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.
உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி
இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதனை சிவநெறி முறையில் குருவாக ஏற்று திருமணம் 
நடைபெற்றுள்ளது. இதன்போது சட்ட ரீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.
அதேவேளை புதுமணத் தம்பதியினருக்கு பரிசாக சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, மணமகனால் மணமகளுக்கும், மணமகளால் மணமகனுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த
 உறுதி செய்தனர்.
அதேவேளை இதுபோல எட்டு திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 13 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க 
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா"
 பொறுத்தப்பட்டமையால் , சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்கள் கவன குறைவினாலையே 
சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் ரயில் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 12-09-2023.அன்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 செப்டம்பர், 2023

மடு சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் துண்டிப்பு க்கு வெளியான தகவல்

நாட்டில்  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில்,முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
 பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில் அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை 
அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின் 
இணைப்பை துண்டித்து உள்ளனர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை 
செலுத்தப்பட்டது.
நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதுடன் 
நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்று இருப்பதுடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல் 
ஏற்பட்டுள்ளது.
 தொடர்ச்சியாக வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்திய போது உடனடியாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியும் இதுவரை இணைப்பை வழங்காது வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சீன பொறியியலாளர்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பணியமர்த்துவது குறித்து தகவல்

நாட்டில்  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன
 பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 அது அந்த சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு 
வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பின்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற நொரொச்சோல் தயாராகி வருவதாக வெளியான செய்திகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்
இலங்கை மின்சார சபையின் தற்போதைய வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 
நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 19 பேர் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வெளிநாட்டு பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சோ அல்லது மின்சார சபையோ எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அனுமதியையும் பெறவில்லை என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 9 செப்டம்பர், 2023

போலியாக விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்காவில் கைது



போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் 08-09-2023.அன்று  மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
 நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  08-09-2023.அன்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
 அங்கு குறித்த இளைஞன் தனது அனுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், குறித்த இளைஞன் தம்வசம் வைத்திருந்த போலாந்து குடியுரிமை விசா போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
 பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி விசா 40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு தரகரிடமிருத்து தான் பெற்றுக்கொண்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
 இதனையடுத்து குறித்த இளைஞன் பயணத்திற்காக எடுத்துவந்த , பயணப் பை மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 இதன்போது, குறித்த இளைஞனிடம் இருந்த 
கைப் பையில் 
மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆவணங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,குறித்த இளைஞனைக் 
கைது செய்த, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், அந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
என்பதும் கறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மிரட்டிய தமிழர்கள் அதிரடிக் கைது

கனடாவின், கிரேட்டர் டொராண்டோ பகுதியில் இயங்கிய வாகனத் திருட்டு குற்ற வலையமைப்பை அந்த நாட்டு பொலிசார் 
கைது செய்துள்ளனர்.
இந்த குற்றக்கும்பலில் இலங்கைத் தமிழர்களும் உள்ளடங்குகிறார்கள். “புராஜெக்ட் வின்னி” என பெயரிடப்பட்ட நடவடிக்கையை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக பீல் பொலிசார் மேற்கொண்டு, இந்த குற்றவலையமைப்பை கைது செய்துள்ளனர்.
2 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள கிட்டத்தட்ட இரண்டு டஜன் திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பீல் பிராந்திய துணை பொலிஸ் தலைவர் மார்க் ஆண்ட்ரூஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராம்ப்டனில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் ரேஞ்ச் ரோவர் திருடப்பட்டபோது விசாரணை
 தொடங்கியது என்றார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், வாகனத் திருட்டு விசாரணையில் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். (பீல் போலீஸ்) “பீல் மற்றும் யோர்க் பிராந்தியத்தில் இதே குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இதேபோன்ற பிற வாகன திருட்டுகளை புலனாய்வாளர்கள் இணைக்க
 முடிந்தது,” என்று ஆண்ட்ரூஸ் வழக்கு பற்றிய செய்தி வெளியீட்டு வீடியோவில் கூறினார்.
திருடப்பட்ட சில வாகனங்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதற்கு முன்னர் ஒன்டாரியோவில் மோசடியான முறையில் மீண்டும் வின்னிங் செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டதால் விசாரணைக்கு “புராஜெக்ட் வின்னி” என்று பெயரிடப்பட்டது என்று ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில், 13 லாண்ட் ரோவர்ஸ், 5 டாட்ஜ் ராம்கள், 2 போர்ஷ்கள், ஒரு ஹோண்டா சிஆர்வி மற்றும் ஒரு காடிலாக் எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றை பொலிசார் மீட்டனர். அவை 1,950,000 டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 
“புராஜெக்ட் வின்னி” தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலர் போலி ஆவணங்களை வெளியிட்டதாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், மற்றவர்கள் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணையாளர்கள் மொத்தம் 42 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கிடையில், விசாரணையில் தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தொடர்ந்து தேடுகின்றனர் – 39 வயதான கால்வின் பீகொக் மற்றும் அடையாளம் தெரியாத நபர்.
பீல் பிராந்தியம் மற்றும் அண்டை பகுதியில் இயங்கும் கால்வின் பீகொக், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை உடைமையாக்குதல், மோட்டார் வாகனம் திருடுதல் மற்றும் மோட்டார் வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 
தேடப்படுகிறார்.
வாகன உரிமையாளருக்கு சந்தேகம் வராத விதமாக பழகி, வாகனத்தை வாங்குவதாக நடிப்பதே கால்வின் பீகொக்கின் வேலை.
பின்னர், வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக கூறுவார். வாகன உரிமையாளரையும் ஏற்றிக் கொண்டு, வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக புறப்பட்டு, வழியில் உரிமையாளரை தாக்கி கீழே தள்ளிவிழுத்தி விட்டோ அல்லது 
வேறு வழிகளை பயன்படுத்தியோ வாகனத்துடன் தப்பிச்
 சென்று விடுவார்.
கடந்த மாதம், பீல் பொலிசார் கலிடனில் ஒரு வன்முறை கார் திருட்டின் வீடியோவை வெளியிட்டனர், கால்வின் பீகொக் காருடன் தப்பிச் செல்வதற்கு முன்பு சோதனை ஓட்டத்தின் போது இருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 7 செப்டம்பர், 2023

நாட்டில் இவ்வருடத்திற்குள்வாகன இறக்குமதி சாத்தியமற்றதாம் நிதி இராஜாங்க அமைச்சர்

இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 290 வகையான வாகன இறக்குமதிக்கு இவ்வருட இறுதிக்குள் அனுமதி வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
 இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
 பிரத்தியேக பாவனைக்காக அல்லாது ஏனைய தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து 
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக, இதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இவ்வருட இறுதிக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி வெளியானது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 6 செப்டம்பர், 2023

எயார் கனடா கனடா விமானத்தில் வாந்திக்கு மன்னிப்பு கோரிய நிறுவனம்

கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
 விமானம் ஒன்றில் இருக்கைகளில் வாந்தி காணப்பட்டதாகவும் இவை உரிய முறையில் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் 
தெரிவிக்கப்படுகிறது.
 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் முதல் மொன்றியால் வரையில் பயணத்தை மேற்கொண்ட விமானம் ஒன்றில் இவ்வாறு பயணிகள் இருக்கைகள் அசுத்தமாக காணப்பட்டுள்ளது.
 கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். 
அசௌகரிகங்களை எதிர்நோக்கிய அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாகவும், இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 5 செப்டம்பர், 2023

செனல் 4 காணொளியின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம்
 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பின்னணியில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் 
செயற்பட்டுள்ளதாக, கொழும்பின் சிங்கள ஊடகம் செய்தி 
வெளியிட்டுள்ளது.
 இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக நாளைய தினம் (செப்டெம்பர் 05) பிரித்தானியாவின் செனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல வருடங்கள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் வழங்கிய 
சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தி டைம்ஸ் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், அசாத் மௌலானாவிற்கு சுவிட்சர்லாந்தில் அகதி 
அந்தஸ்த்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உயிர்த்த
 ஞாயிறு தாக்குதல் தொடர்பில், 
அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, திட்டமிட்ட வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அத பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி 
குறித்த காணொளி செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரச புலனாய்வுப் பிரிவின் 
பிரதானி மேஜர் ஜெனரல் 
சுரேஷ் சலே, தனது சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த ஒளிபரப்பு பிற்போடப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையிலான தொடர்பு குறித்த அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ள அனைத்து
 விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், 
மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் சலே இலங்கையில் சேவையில் இருக்கவில்லை எனவும், சலே ஆவணங்களுடன் செனல் 4விற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், குறித்த அத பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 4 செப்டம்பர், 2023

நாட்டில் வங்காலையில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்

மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களுடன் வன்னி மண் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் குருதிக்கொடை முகாம்  03-09-2023.அன்று ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித 
ஆனாள் ஆலய வளாகத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணி வரை நடை பெற்றது.
 'உதிரத்தை தானம் செய்!உதிரப் போகும் ஒரு உயிர் உதிராமல் இருக்க காவல் செய்' என்ற நோக்கத்திற்காக நடைபெற்ற இரத்த தான முகாமுக்கு நிதி அனுசரணை யாழ் மதர் கெயார் வைத்தியசாலை 
உரிமையாளர் வைத்திய கலாநிதி குலசிங்கம் சுரேஷ்குமார் 
வழங்கி வைத்தார்.
 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.சுமார் 50க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் குருதி தானம் செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புயல் காரணமாக விமானங்கள் ரத்து

தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. 
இது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் 
ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில விமானங்கள் புறப்பட தாமதமானது. 
இதனால் விமான நிலையத்துக்கு வந்திருந்த 
பயணிகள் பெரும் அவதியடைந்தனர். அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்தும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.