நாட்டில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில்,முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில் அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை
அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின்
இணைப்பை துண்டித்து உள்ளனர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை
செலுத்தப்பட்டது.
நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதுடன்
நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்று இருப்பதுடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல்
ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்திய போது உடனடியாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியும் இதுவரை இணைப்பை வழங்காது வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக