வியாழன், 30 ஜூன், 2022

அவுஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று காலை நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ந்நிலையில் நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
நாடுகடத்தப்பட்டவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களுள் 5 வயதுக்கு குறைந்த இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என விமான நிலைய தகவல்கள்
 தெரிவித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 29 ஜூன், 2022

திருமணம் இலங்கையரை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் 
நீடிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தம்மிக 
பெரேரா கூறினார்.
இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள்.யாழ்பாணம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 28 ஜூன், 2022

கண்டி, மாத்தறை யாழ் ஆகிய இடங்களில் கடவுச்சீட்டை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம்

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா 
தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும்.
இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை 
ஆரம்பிக்கப்படும்.
இதன்முதற் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.
தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை 
மாற்றியமைக்கப்படும்.
இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





ஞாயிறு, 26 ஜூன், 2022

நாட்டில் மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் கொடுத்த ‘செட்’ உரிமையாளர்

மஹரகம – தெஹிவளையில் பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தெஹிவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் அமைந்துள்ள Highway Enterprises எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இன்று பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்
 செய்யப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் எம்.டி.எஸ். பெரேரா மக்கள் படும் துன்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பெருமளவான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இங்கிரியவில் உள்ள உருகல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் இரவு பகலாக எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.மேலும், மக்களின் அசௌகரியத்தை உணர்ந்தே இந்தச் செயலை மேற்கொண்டதாக அதன் உரிமையாளர் கெலும் பிரசன்ன தெரிவித்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 24 ஜூன், 2022

இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி மாணவன் மாலைதீவில் சாதனை

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 
சதுரங்கப்போட்டிகள்
 ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் June 17 – 22ஆம் திகதி வரை மாலைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.9 சுற்றுக்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு Draw உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் ஜனுக்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாடசாலுக்கு யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்ந்த பிரகலதானன் ஜனுக்சனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வியாழன், 23 ஜூன், 2022

காலியில் நான்கு மாணவிகளை பதம்பார்த்த 12 வயது மாணவன்

காலியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் நான்கு மாணவிகள் பிளேட் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.அருகிலுள்ள பாடசாலையொன்றின் தரம் 7இல் கல்வி பயிலும் 12 வயது மாணவனொருவன் ஒருவரே குறித்த மாணவிகளை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
9,12 மற்றும் 15 வயதுடைய மாணவிகள் நான்கு பேரையே அவர் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
விஞ்ஞான கூட ஆய்வுக்கு பூவொன்றையும் பிளேட் ஒன்றையும் எடுத்து வரும்படி ஆசிரியர் கூறியுள்ளார்.
அதன்படி மாணவர்கள் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். விஞ்ஞான கூட ஆய்வுகள் முடிவுற்ற பின்னர் பாடசாலை முடிந்து செல்லும் போது பிளேடால் மாணவிகளை வெட்டி காயப்படுத்த வேண்டுமென மூன்று மாணவர்கள் கூடிப்பேசியுள்ளனர்.
இதன்படி பாடசாலை முடிந்து செல்லும்போது ஏனைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாணவனை தவிர்த்து விட்டுச்சென்றுள்ளனர்.
இந்த மாணவன் மாத்திரம் நான்கு மாணவிகளின் கைகளை பிளேடால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.12 வயது மாணவன் என்பதால் கராபிட்டிய வைத்தியசாலையில் மனநோய் வைத்தியரிடம் அனுப்பி சான்றிதழ் ஒன்றை பெறவுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 22 ஜூன், 2022

நாட்டில் எரிவாயு பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் நடவடிக்கை

நாட்டுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை,  இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 19 ஜூன், 2022

இலங்கையில் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல்

நாட்டில் இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து, பயணம் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.இந்த விபத்துக்களில் சைக்கிளை செலுத்திய 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் வீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நிஹால் தல்துவ அறிவுறுத்தல் 
வழங்கியுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 17 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களின் வேலை மற்றும் கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் அரச பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றால் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை, இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், மருத்துவம், எரிபொருள் விநியோகம், உணவுப்பொருள் விநியோகம் உட்பட்ட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

புதன், 15 ஜூன், 2022

சில வாகனங்களின் பாவனைக்கு இலங்கையில் தடை

இலங்கையிலுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் சில வாகனகங்களின் பாவனைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வைக் கொண்டுவரும் பிரேரணையாக 2000cc க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அனைத்து கார்கள் மற்றும் ஜீப்களின் பாவனைக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட வேண்டும் 
என கோரியுள்ளார்.
ஆடரம்பர வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை கொண்டு, நீண்ட காலத்திற்கு முச்சக்கரவண்டிகளை
 செயற்படுத்த முடியும்.
ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் உதய கம்பன்பில மேலும் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





செவ்வாய், 14 ஜூன், 2022

அளவெட்டியில்இலங்கையர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய யாழ் தமிழர்

யாழ்.அளவெட்டி பகுதியில் இயற்கை முறையில் விவசாயம், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் லோகநாதன் எனும் விவசாயி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.
யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இவருக்கு சிறந்த விவசாயி என்ற நாமத்தை வழங்கியுள்ளது.
இயற்கை எரிவாயு, இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி போன்ற பல முயற்சிகளில் ஈடுபடும் லோகநாதனை பற்றிய சிறு 
பார்வை இதோ,
அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாதன் ஒரு சிறந்த விவசாயி,கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது சிறந்த முயற்சி ஊடாக இயற்கை முறையில் விவசாயத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்ட ஒரு சிறந்த தொழில் முயற்சியாளர் ஆவர்.
இயற்கை முறையில் கிடைக்கும் கழிவுகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இவரே தயாரிக்கின்றார். தனது சொந்த அனுபவத்தாலும் முயற்சியாலும் பல புதிய உத்திகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இயற்கை முறையில் இவர் தயாரிக்கின்றார்.
இயற்கை உரம் போலவே விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பூச்சிகளை விரட்டக் கூடிய பூச்சி நாசினிகளையும் இவர் இயற்கை முறையில் தயாரிக்கின்றார்.
தனது விவசாய தேவைக்குரிய சகலவற்றையும் எவ்வித செயற்கை இரசாயனத்தை நம்பி இருக்காமல் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரத்தினை தயாரித்து அதன் மூலம் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்றார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






திங்கள், 13 ஜூன், 2022

இலங்கையில் விசித்திரம் ஆடை வாங்கினால் அரிசி இலவசமாம்

 

நாட்டில்  ஆடை கொள்வனவு செய்தால் அரிசியை இலவசமாக வழங்க இலங்கையின் பிரபல ஆடை நிறுவனம் ஒன்று ஏற்பாடு 
செய்துள்ளது.
அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை தமது நிறுவனத்தில் வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு குறித்த ஆடை நிறுவனம் 
ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், 5,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள ஆடை அல்லது பொருட்களை வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்வனவு செய்யும் வகையில் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரமபிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 10,000 ரூபாய்க்கு ஆடை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பைகள், குடை, உணவுப் பாத்திரங்கள் போன்ற பரிசுப்பொருட்களை இந்த ஆடை நிறுவனங்கள், முன்பெல்லாம் வழங்கி வந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 12 ஜூன், 2022

குருந்தூர்மலை தமிழர் பகுதியில் குடிகொள்ள ஊர்வலமாக நகரும் புத்தர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் (இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்) குருந்தாசோக
 புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும்.12-06-2022. இன்று. காலை 09.00 மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ், விமானப்படை, கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.
பிரதேச தமிழ் மக்களால் வழிபடப்பட்டு வந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் 
அங்கு வழிபாட்டுக்குச் 
செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற தடைவிதிக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தொல்லியல் அகழ்வாராட்டசி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில், அங்கு பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் இராணுவத்தினால் 
அமைக்கப்பட்டு வந்தது.
அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் 
தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு 
இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை 
ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு 
குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான
 இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் 
இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
சிங்கள மக்கள் யாருமற்ற தமிழர்கள் பூர்வீக்கமாக வாழும் இந்தப் பகுதியில் முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகள், பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிகப் பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இன்றைய நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும், குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு பிரதிஷடை செய்யவுள்ள புத்தர் சிலை தற்போது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
எனவே இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை எதிர்க்க 
தமிழர் நிலங்களை குறிப்பாக ஆதிசிவன் ஐய்யனார் ஆலயத்தை காக்க அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



சனி, 11 ஜூன், 2022

புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்களை குசிப்படுத்த என்னென்ன அம்சங்கள் தெரியுமா

வாட்ஸ் அப் செயலியில் பல புதுப்பித்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தப் புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் 2 ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றை பகிர முடியும்.
தற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ் – அப் குரல் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 10 ஜூன், 2022

முக்கிய அறிவிப்பு பேருந்துகளில் நாட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு

நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார்.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற
 எண்ணுக்கு அழைக்கவும்.
பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன.தொலைபேசியில் வரும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்
 சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அழிவடைந்து செல்லும் தமிழர்களின் தொழில்

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மற்பாண்ட தொழில் அழிவடைந்து செல்லும் நிலை
 ஏற்பட்டுள்ளது.
இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் ,மடுக்கரை, செம்மண் தீவு, கருக்காய் குளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மற்பாண்ட தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருளுக்கான விலையேற்றம் காரணமாக சட்டி, பானை, அடுப்பு, சிட்டி விளக்குகள் போன்ற பொருட்களை வியாபாரிகள் எவரும் அவர்களிடம் வந்து பெற்றுக்கொள்வது இல்லை என மற்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தூர பிரதேசங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது எனவும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் கவலை
 தெரிவித்துள்ளனர்.
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு எரிபொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் தடையில்லாமல் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே எமது பாரம்பரிய தொழிலை தொடர்ச்சியாக 
செய்ய முடியும் .
மேலும் பலர் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு தொழிலுக்குச் சென்றுள்ளார்கள். தங்களது காலத்தின் பின்பு தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக காணப்படும் இந்த மற்பாண்ட தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆட்கள் இல்லை.
காலப்போக்கில் மன்னார் மாவட்டத்தில் இந்த மற்பாண்ட தொழில் அழிந்து போகக் கூடும் என மற்பாண்ட தொழிலாளர்கள் கவலை 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






புதன், 8 ஜூன், 2022

நாட்டில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்கள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கையில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் 
தெரிவித்த அவர்,
“நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும்.
எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 
ஆண்டுகளாகும்.
இதனூடாக விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர சீரழிவுக்காக அல்லவென இதனூடாக புலப்படுகிறது எனவும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




Blogger இயக்குவது.