சனி, 4 ஜூன், 2022

கொழுப்பு கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யா விமானம்

கடும் அதிருப்தியில் ரஷ்யா 
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகேவை நேற்று அழைத்து இந்த எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சு
 தெரிவித்துள்ளது.
ஜூன் 2 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோவிற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உடனடி தீர்வுக்கு வலியுறுத்தல்
இந்தநிலையில் பாரம்பரியமாக நட்புறவு கொண்ட இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக, குறுகிய காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு இதன்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சு
 கேட்டுள்ளது.
வர்த்தக பிணக்கு ஒன்று தொடர்பிலேயே இந்த விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
மொஸ்கோ நோக்கிச் செல்லும் குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி, 191 ரஷ்ய சுற்றுலா பயணிகளுடன் மொஸ்கோவிற்கு பயணிக்கவிருந்த Airbus A330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தடுத்து வைக்கப்பட்டது.
வழக்கின் முழு விபரம்
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு வரும் எதிர்வரும் 16ம் திகதி வரை 
நடைமுறையில் இருக்கும்.
இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் ரஷ்ய விமானங்கள் தடுத்து வைக்கப்படாது அல்லது கைது செய்யப்பட மாட்டாது என குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய போக்குவரத்து நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த போதிலும் விமானம் தடுத்து
 வைக்கப்பட்டது.
இந்தநிலையில் மொஸ்கோ செல்லும் விமானத்தை இலங்கையில் இருந்து புறப்படவிடாமல் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு ரஷ்யாவின் முதன்மையான ஏரோஃப்ளோட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நேற்று (ஜூன் 03) கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குறித்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமித் தர்மவர்தன 
முன்னிலையாகியிருந்தார்.
சர்வதேச மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி, விமானங்கள் புறப்படுவதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் சட்டப்பூர்வ அதிகாரம் குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு இருப்பதாக அவர் இதன்போது
 தெரிவித்தார்.
எனினும் அவ்வாறான தடை உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவின் பிரதான விமான சேவை நிறுவனமான Aeroflot சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, முறைப்பாட்டாளரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த தடை உத்தரவு பெறப்பட்டதன் அடிப்படையில் இடைநிறுத்த உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திடம் கோரினார்.
இதனையடுத்து இந்த கோரிக்கையை ஜூன் 08 ஆம் திகதி பரிசீலிக்க
 நீதிமன்றம் முடிவு செய்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.