இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யோகட் உட்பட பால் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்குறிப்பிட்ட வரியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பிள் மற்றும் திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாவாக
அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கோகோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு 200% மேலதிக வரியை நிதி
அமைச்சு விதித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக