யாழ்.அளவெட்டி பகுதியில் இயற்கை முறையில் விவசாயம், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் லோகநாதன் எனும் விவசாயி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.
யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இவருக்கு சிறந்த விவசாயி என்ற நாமத்தை வழங்கியுள்ளது.
இயற்கை எரிவாயு, இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி போன்ற பல முயற்சிகளில் ஈடுபடும் லோகநாதனை பற்றிய சிறு
பார்வை இதோ,
அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாதன் ஒரு சிறந்த விவசாயி,கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது சிறந்த முயற்சி ஊடாக இயற்கை முறையில் விவசாயத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்ட ஒரு சிறந்த தொழில் முயற்சியாளர் ஆவர்.
இயற்கை முறையில் கிடைக்கும் கழிவுகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இவரே தயாரிக்கின்றார். தனது சொந்த அனுபவத்தாலும் முயற்சியாலும் பல புதிய உத்திகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இயற்கை முறையில் இவர் தயாரிக்கின்றார்.
இயற்கை உரம் போலவே விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பூச்சிகளை விரட்டக் கூடிய பூச்சி நாசினிகளையும் இவர் இயற்கை முறையில் தயாரிக்கின்றார்.
தனது விவசாய தேவைக்குரிய சகலவற்றையும் எவ்வித செயற்கை இரசாயனத்தை நம்பி இருக்காமல் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரத்தினை தயாரித்து அதன் மூலம் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக