சனி, 30 ஏப்ரல், 2022

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இகுறித்த விரிவுரையாளரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக அதிபர் மற்றும் ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் வைத்து பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ன்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 28 ஏப்ரல், 2022

நாட்டில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் மோசமான செயல்

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் உள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையில் வைத்து ஒருவித போதை பொருளை நுகர்வது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் புகைத்தல் பொருட்கள் 
பாதுகாப்பாக அடைத்துவரும் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த தாளில் ஒருவகையான தூள் கலந்த பொருளினை சூடேற்றி அதிலிருந்து வெளிவரும் புகையினை மணக்கும் செயற்பாடு தொடர்ச்சியாக குறித்த பாடசாலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரிந்த நிலையிலும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் பெண் மாணவிகளும் கல்வி கற்கின்ற நிலையில் ஒரு சில ஆண் மாணவர்களின் செயற்பாடுகளால் ஏனைய மாணவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 20 மேற்பட்ட மாணவர்கள் தமது கைகளை பிளேட்டினால் வெட்டிய பின்னணியில் போதைப் பொருள் பாவனையே இருப்பதாக 
குற்றச்சாட்டுள் எழுந்தன.
அகவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி குறித்த பாடசாலையில் இடம்பெறும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் தலையீடு செய்வது காலத்தின் தேவையாகும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


புதன், 27 ஏப்ரல், 2022

நாட்டில் மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
ற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நவீன் டி சொய்சா 
தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை.
அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில், நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இது தவறான வழிமுறை என்றே நாங்கள் கருதுகிறோம்.
ஆகவே, மருந்துகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும். டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், மருந்துகளின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசாங்கம் மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்” என்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
செவ்வாய், 26 ஏப்ரல், 2022

நாட்டில் நாளை மரக்கறி விநியோகம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கு இடம்பெறாது

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் முழு அடைப்பு போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில், கையிருப்பிலுள்ள மரக்கறிகளை 28ஆம் திகதி அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம்,கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து 
எடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி, மரக்கறி விவசாயியை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>திங்கள், 25 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் கொள்வனவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி
 செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின்
விலைகளும் சிறிதளவு குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க
முடியும் என குறித்த சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.தற்போது டொலர் மதிப்பு உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நாட்டில் எதிர்வரும் வாரத்தில் விலை அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருள்கள்

 

எதிர்வரும் வாரம் முதல் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் அனைத்து இருப்புகளும் தற்போது தீர்ந்துவிட்டன. புதிய பங்குகளை இறக்குமதி செய்யாமல் 
இரண்டு வாரங்கள்.
குறிப்பிட்ட அளவு பால் மா அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு கொண்டு வரப்படும். டொலர் மதிப்பை கருத்தில் கொண்டு பொருட்கள் வந்தவுடன் பால் மாவின் விலை அதிகரிக்கும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வெள்ளி, 22 ஏப்ரல், 2022

திருநெல்வேலியில் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

யாழ்.திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம்.19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,குறித்த விரிவுரையாளரது குடும்பம் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய இடை நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாக 
பொலிஸார் கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளரது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 21 ஏப்ரல், 2022

இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியது

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தியா வழங்க உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடனுதவி வழங்கப்படுவதாக 
தெரிவித்துள்ளார்.
மேலும் பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 450 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் நீடித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைக்கப் பெறுவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும் என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அதுவரையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>புதன், 20 ஏப்ரல், 2022

நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் விசேட கோரிக்கை

எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்தல் மற்றும் சேதப்படுத்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அனைத்து எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்களை தடை செய்யாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
“நேற்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களுக்கிடையில், பவுசர்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் எரிபொருள் பவுஸர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல 
இடம்பெற்றுள்ளன.
எரிபொருள் வழங்கல் தடைப்பாட்டால் விசேடமாக அத்தியாவசிய உணவு மற்றும் மருத்து உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லும் நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்களை தடுப்பதனை தவிரக்குமாறும் அவற்றிற்கு சேதம் ஏற்படுத்துவதனை தவிர்க்குமாறு விசேட கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றை தினம் கிடைக்கும் எரிபொருள் தொகையை உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமையான முறையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசேடமான மக்களும் அதே போன்ற சமாதானமான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும்
எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சேதப்படுத்துவதனை தவிரக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் மீண்டும் இறக்குமதிக்கு அனுமதிக்கும் கோட்டாபய அரசாங்கம்

 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.
நாட்டில் நாளாந்தம் 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே 10 வது நாளாக தொடர்ந்து போராட்டம் 
நீடித்து வருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>திங்கள், 18 ஏப்ரல், 2022

நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட நடவடிக்கை

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில்.18-04-2022. இன்று தடை உத்தரவு பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ள கோட்டை பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தடை உத்தரவு கோரிக்கையின் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பாதையில் உள்ள தடைகள் நீங்கும் என நம்புவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஒருவாரகாலம் நாட்டை முடக்குவதற்கு ஆலோசனை இன்று அறிவிப்பு

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால்.17-04-2022. இன்று மாலை விசேட அறிவிப்பு வெளியாகலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

தமிழர்களுக்கு கனடாவில் குடியேற கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

கனடாவில் தமிழர்கள் இலகுவாக குடியேற வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்
கனடாவிற்கு வர விரும்பும் எந்த தமிழ் குடும்பமும், குடியேறுவதற்கான வழியை திறந்து விடுவேன் என்று, கனடாவின் கொன்சர்வேடிவ் கட்சித் தலைமைப் போட்டியில் இறங்கியுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் பட்ரிக் பிரவுன் நடத்திய கலந்துரையாடலின் பொது இந்தத் தகவல்களை வெளியிட்டதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வாக்குறுதியை வழங்கும், சிறியதொரு காணொளி தமக்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கனடாவில் அமுலிலுள்ள விடுதலைப் புலிகளை, மீதான தடையை நீக்குவதாகவும், அவர் இதன் போது உறுதியளித்துள்ளார்.
உக்ரேனியர்கள் அல்லது வியட்நாமிய படகு அகதிகளைப் போல, தமிழ் அகதிகளுக்கு கனடா உதவ தவறியதற்கு மன்னிப்பு கோருவேன் என்றும் பட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>Blogger இயக்குவது.