திங்கள், 25 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் கொள்வனவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி
 செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின்
விலைகளும் சிறிதளவு குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க
முடியும் என குறித்த சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.தற்போது டொலர் மதிப்பு உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.