வெள்ளி, 15 ஏப்ரல், 2022

தமிழர்களுக்கு கனடாவில் குடியேற கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

கனடாவில் தமிழர்கள் இலகுவாக குடியேற வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்
கனடாவிற்கு வர விரும்பும் எந்த தமிழ் குடும்பமும், குடியேறுவதற்கான வழியை திறந்து விடுவேன் என்று, கனடாவின் கொன்சர்வேடிவ் கட்சித் தலைமைப் போட்டியில் இறங்கியுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் பட்ரிக் பிரவுன் நடத்திய கலந்துரையாடலின் பொது இந்தத் தகவல்களை வெளியிட்டதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வாக்குறுதியை வழங்கும், சிறியதொரு காணொளி தமக்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கனடாவில் அமுலிலுள்ள விடுதலைப் புலிகளை, மீதான தடையை நீக்குவதாகவும், அவர் இதன் போது உறுதியளித்துள்ளார்.
உக்ரேனியர்கள் அல்லது வியட்நாமிய படகு அகதிகளைப் போல, தமிழ் அகதிகளுக்கு கனடா உதவ தவறியதற்கு மன்னிப்பு கோருவேன் என்றும் பட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.