சனி, 27 பிப்ரவரி, 2021

தெஹிவளையில் ஒரு தொகை ஹெரோயின் 1.5 மில்லியன் ரூபா பணத்துடன் பெண் கைது

தெஹிவளையில் 1 கிலோ ஹெரோயின் மற்றும் 1.5 மில்லியன் பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகமையில் 750 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கொட்டாஞ்சேனையில் 43 கிராம் ஐஸ் போதைப் பொருள், 4 கைபேசிகளுடன் மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாட்டில் தப்பிச் சென்ற இராணுவ அதிகாரி ஹெரோயினுடன் கைது

ஹெரோயினுடன்,25-02-2021,  இன்று காலை கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ 
கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

 


சிறிலங்கா ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது

 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா  அரசாங்கம் முற்றாக 
நிராகரித்துள்ளது.
அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச 
அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு
 பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் சிறிலங்கா
 சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்று 
வருகிறது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்று இரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

புதன், 24 பிப்ரவரி, 2021

நாட்டில் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
.23-02-2021.அன்று  மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறானதொரு கருத்து சுகாதார ஊழியர்களுக்கு மத்தியில் பரவிவருவதாக 
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த
 வேலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம் மிகக் குறைந்த வருமானம் கொண்ட 
குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
.முறையான கல்வி அல்லது தொழில்முறை 
தகுதிகள் அல்லது திறன்கள் இல்லாதவர்கள் மட்டுமே அத்திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் தொழிலாளர்கள், துப்புரவு பணிகளில் 
ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்களாக பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்குப் பின்னர், அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். இருப்பினும், அவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி
 தெளிவுபடுத்தினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், 22 பிப்ரவரி, 2021

விடுதலைப்புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

பிரிட்டன் அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் விதத்தில் காணப்படுகின்றது என 
குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடு;ப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை என நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.’
ஜனவரி 2009 முதல் மே 2009 முதல்வரை 5000 முதல 7000வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கான சுயாதீன மாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளன என்பது உட்பட பல முக்கிய விடயங்களை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் முன்வைக்கும் கட்டு;க்கதை போல 40,000க்கும்அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்த மிகமோசமான யுத்த குற்றத்தினை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என யுனிசெவ் என தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை படையணியில் இணைப்பது பயிற்சிவழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பிரிட்டனில் வாழும் அடெய்ல்பாலசிங்கம்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் ஏன் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு ஐநாவை கேட்கவில்வை என கேள்வி எழுப்பவேண்டும் என நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

இம்முறை காணொளி ஊடாக ஜெனிவாச் சமர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை குறித்து  விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.  
இதேவேளை, 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24ஆம் திகதி காலையில் இலங்கையின் சார்பில்  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கின்றார்.  அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில்  ஜெனிவா சபையில்  உரையாற்றவுள்ளார்.
முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 22ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன.  அதாவது
 பல நாடுகளின்  வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ளனர். முக்கியமாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்  ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
அத்துடன் ஜேர்மனி, தென்னாபிரிக்கா, டென்மார்க், சுவீடன் , ஜப்பான், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய 
நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் சபை அமர்வில்  உரையாற்றவுள்ளனர். மேலும், 
22 ,02-2021.ஆம் திகதி  நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் லீ  உரையாற்றவுள்ளதுடன் 23-02-2021.ஆம் திகதி 
அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரைநிகழ்த்தவிருக்கிறார். இதன்போது 
இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  
அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் புதிய இராஜாங்க செயலர் அன்டி ஜே, பிலிங்கன் மற்றும் பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் ஆகியோர்  உரையாற்ற 
ஏற்பாடாகியுள்ளது.  
மேலும், முதல்நாள் அமர்வில்  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர்  உரையாற்றவுள்ளனர்.
  மனித உரிமைகள் ஆணையாளரின்  முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று 
தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, சீன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் 22ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் உரையாற்றும்போது இலங்கை தொடர்பாக பிரஸ்தாபிப்பார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக சீனா உரையாற்றும்போது தாம் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது பிரஸ்தாபிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும்  மேற்குறிப்பிட்ட நாடுகளின் பி
ரதிநிதிகள் உரையாற்றும்போது இலங்கையின் விவகாரம் 
குறித்தும்  கருத்து வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார 
அமைச்சர்  கலாநிதி ஜெய்சங்கர் இந்தச் சபை 
அமர்வில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று 
எதிர்பார்க்கப்படுகின்றது.  
மேலும், இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும், அது தவறான தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கை அரசானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.  
இது இவ்வாறு இருக்க இம்முறை 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணை பிரிட்டன், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளது. தற்போது அந்த அறிக்கையின்  உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
இந்த வரைவில் தமிழர் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்பான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
 தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், இம்முறை புதிய பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  கொண்டுவரப்படும் பட்சத்தில் அதனை இலங்கை முழுமையாக நிராகரிக்கும் என்று அமைச்சர் உதய கம்மன்பில
 தெரிவித்தார்.
இது தொடர்பாக வாக்கெடுப்பை இலங்கை கோரும்  என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது. வாக்கெடுப்பைக் கோரும் பட்சத்தில் சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் என்றும் 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா இலங்கையிடம் உறுதியளித்திருக்கின்றது. அந்தவகையில் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக 
அமைந்திருக்கின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டு இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30 .1  என்ற பிரேரணை பின்னர்  2017ஆம் ஆண்டில் 34.1 என்றும், பின்னர் 2019 ஆம் ஆண்டில்  40-1 என்றும் நீடிக்கப்பட்டது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னைய நல்லாட்சி அரசு அனுசரணை வழங்கியது. ஆனால், 2019இல் ஆட்சிக்கு 
வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு அனுசரணையை மீளப்பெற்றது.  அந்தவகையிலேயே 
இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>






யாழில் தமிழ் மொழிக்கு விழா எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2021ம் ஆண்டுக்கான உலக தாய்மொழித்தினம் ,21.02.2021,இன்றைய தினம். நாவலர் பொது மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் 
கலந்துகொண்டிருந்தனர்.
 சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
 உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
 மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தாய்மொழி தின நிகழ்வுகளின் கலை நிகழ்வுகளாக வாத்திய பிருந்தா, கவியரங்கம், தமிழ்மொழியின் தொன்மை எனும் தொனிப்பொருளில் இசை நிகழ்வு, கவிதை, நடனம், குழு பாடல், நாடகம் என்பன 
இடம்பெற்றுள்ளன.
நிகழ்வின் விருந்தினர்களுக்கும் நிகழ்வின் பார்வையாளர்களுக்கும் வடை, மோதகம், கஞ்சி போன்ற தமிழர் பாரம்பரிய உணவுகள் கமுகுத் தடலினால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் பாரம்பரிய முறையில் 
வழங்கப்பட்டன.
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கின்ற தமிழ் மொழியினுடைய தொன்மையையும் பெருமையினையும் உலகறிய பறைசாற்றும் வண்ணம் இந்நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மொழிகளுக்கெல்லாம் மூத்த 
மொழி ஆகிய தாய்த் தமிழ் மொழிக்கு விழா காண்பதில் பெருமிதம் கொள்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 20 பிப்ரவரி, 2021

கிளிநாச்சியில்கஜேந்திரகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமைத் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி  காவல் துறை  இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து காவல் துறை வாக்குமூலத்தைப் பதிவு 
செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோட்டபாய கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில், இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டத் தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டு 
வரவுள்ளன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடிதமொன்றின் ஊடாக சிறீலங்காவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருச்செந்தூரன் மில் வீதி தொலைத் தொடர்புக் கோபுரத்தினால் பல்வேறு அபாயம்

வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிவருகின்றனர்..
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:-உக்கிளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுமதியின்றியும் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று
 வருகின்றது .
சுமார் நூறு அடி உயரமாக அமைக்கப்படவுள்ள இக்கோபுரத்தைச் சூழவுள்ள பகுதியில் வசித்து வரும் 30 தொடக்கம் 35 வரையான குடும்பங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது .
இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம்,நகரசபை,பிரதேச செயலாளர்,சுற்றுச்சூழல் பாதுகாப்புச் நகரசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு 
தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டும் இதன் நிர்மாணப்பணிகளைத் தடுப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை
 .20-02-2021.இன்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இப்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட அரச ஊழியர்கள் எனப்பலதரப்பட்டவர்கள் வசித்து 
வருகின்றனர்.
மக்கள் குடியிருப்புப்பகுதியில் இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தினால் பல்வேறு அபாயமான அச்சுறுத்தல்கள் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி மக்கள் குடியிருப்பு அற்ற பகுதிகளில் இக்கோபுரத்தின் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலும்
 தெரிவித்துள்ளனர் .
இவ்விடயம் குறித்து வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் நகரசபையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இதன் பணிகளை மேற்கொள்வதற்கு தடை.
அறிவறுத்தல் நகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது. பணிமேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..!! மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புபல்கலைக்கழகங்களுக்கு 
இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.இதற்காக
 பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள்.இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்து பீட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




விசாரணை யாழ். முதல்வர் மணிவண்ணனிடம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம்,19-02-2021. இன்று பிற்பகல் வாக்குமூலம் 
பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை காவல் துறை  மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெற்றனர்.
 மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் இன்று பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற ஆறு காவல் துறை  நிலையங்களைச் சேர்ந்தகாவல் துறை  அதிகாரிகள் 
வாக்குமூலம் பெற்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் சிங்கள மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்ய காவல் துறை  முயன்ற போதும் அதற்கு
 மறுப்புத் தெரிவித்த வி. மணிவண்ணன்தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடமாட்டேன் என உறுதியாகக் கூறினார். இதனையடுத்து தமிழ் மொழியில் வாக்கு
 மூலம் பெறப்பட்டது

நிலாவரை.கொம் செய்திகள் >>



இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும்நிலை

அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்கொள்கின்றது என தெரிவித்துள்ள  மாற்றுக் கொள்கைகள்  நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்குகின்றது என
 குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்ககொள்கின்றது சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்குகின்றது என தெரிவித்துள்ள அவர்மோதல்களை மோதல்களை உருவாக்குகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐம்பது வருடங்களில் வடபகுதி மக்கள் கிழக்கு மக்கள் முஸ்லீம்கள் மலையதமிழர்கள் ஒன்றிணைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியிலேயே என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ள பாக்கியசோதி சரவணமுத்து நல்லிணக்கம் குறித்து தாங்கள் என்ன செய்கின்றனர் என்பது குறித்து அரசாங்கம் ஆழமாக சிந்திக்கவேண்டும் எனவும் கு
றிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் குறித்த குற்றச்சாட்டுகள் கேள்விகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சார்ஜன்ட் சுனில்ரத்நாயக்க போன்ற ஒருவரிற்கு பொதுமன்னிப்பை வழங்கிவிட்டு நாங்கள் உள்நாட்டு பொறிமுறைகளை முன்னெடுக்கின்றோம் என தெரிவிக்கவும் முடியாது என அவர் 
தெரிவித்துள்ளார

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 18 பிப்ரவரி, 2021

வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

 யாழில் வீட்டுத் திட்டத்துக்கான மீதிப் பணத்தை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றிலில் 17-02-2021,அன்று ,புதன்கிழமை, ஆர்ப்பாட்டத்தில்
 ஈடுபட்டனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியான வீட்டுத்திட்டம் கடந்த அரசினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக 
வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்ட வேலைகளை படிப்படியாக முடிக்கும் பட்சத்தில் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா 
வழங்கப்பட்டுள்ளது.
 பின்னர் எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.அதன் பின்னர் நிதி நிறுவனங்களிடம் கடன்பட்டு வீட்டு வேலைகளைச் செய்தும் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை.
பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமலும் வீட்டை முழுமையாக்காமலும் நிர்க்கதியில் இருப்பதாக தெரிவித்த மக்கள், தாம் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும்
 குறிப்பிட்டனர்.
எனவே இந்த வீட்டுத் திட்டத்துக்கான மிகுதிப் பணத்தை மிக விரைவில் பெற்றுதர ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 17 பிப்ரவரி, 2021

நாட்டில் போராட்டம் வரலாறு காணாத வெற்றியைக் கண்டது

 நாட்டில் தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது.
வடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது.
உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் பங்களிப்பு இருந்தது. அனைத்துப் பிரதேசங்களிலும், கிராமங்களிலும் இருந்து எமக்கு ஆதரவளித்த எமது சகோதரங்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அத்தோடு பல அரசியற் பிரமுகர்களும் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார்கள்.
இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றது. அதனைப் பற்றி நாங்கள் அலசி ஆராய வேண்டிய தேவையில்லை. ஏனெனில் போராட்டம் வெற்றியளித்தது என்ற செய்தி மட்டுமே 
எங்களுக்குத் தேவை.
நாட்டின் தெற்கிலும், சர்வதேச ரீதியில் இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது ஒரு சில கட்சிகள், சில தனிநபர்கள் இதனைக் குழப்புவதற்காகப் பல பிரயத்தனங்களைச் செய்திருந்தார்கள். அதன் சலசலப்புகள் தான் அவையே தவிர வேறெதுவும் இல்லை.
இந்தப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது உலகம் பூராகவும் பார்க்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே
 செய்திருந்தோம்.
ஆனால் சிலர் நான் தெரிவித்த கருத்துக்களை வைத்து சாணக்கியன் ஏமாற்றிவிட்டார் என்ற கருத்துக்களைச் சொல்லுகின்றார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேச சமூகம் அனைத்திற்கும் தெரியப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு தனி நிகழ்வை மையப்படுத்தி செய்ததாக யாரும் கருதுவார்களாக 
இருந்தால் அது தவறு.
தற்போது பலரும் பலவாறு சொல்லுகின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் போது செயற்குழு என்ற ஒரு கட்மைப்பு உருவாக்கபபட்டது. அந்தக் குழுவிலே பங்குபெறாதவர்கள், அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள் எல்லாம் இந்த
 நிகழ்வைப் பற்றிக் கருத்துச் சொல்வது மிகவும் வேடிக்கையான ஒரு விடயம்.
இந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் 
திசைதிருப்பக்கூடாது.
இந்தப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்கள். ஊடக சந்திப்புகளெல்லாம் நடத்தியிருந்தார்கள். இன்று காலையில் கூட கல்முனை நீதிமன்றத்தால் எனக்கு இந்தப் போராட்டம் தொடர்பில் வழக்கிற்கான அழைப்பாணை கிடைக்கப்பெற்றது. ஆனால் ஒரு சிலருக்கு இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது கேள்விக்குரிய விடயம்.
இந்தப் போராட்டத்தின் வெற்றியை மாத்திரம் கருதி நாங்கள் பல விடயங்களை அலசாமல் இருந்தாலும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊடக சந்திப்புகள் நடத்தி இந்தப் போராட்டத்தைப் பற்றிய கருத்துகளைச் சொல்வதைப் 
பார்க்கும் போது.
சில அடையாளம் இல்லாதவர்கள் தங்களின் அடையாளத்தை உருவாக்குவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றார்களா? என்று ஒரு சந்தேகமும் இருக்கின்றது.
ஏனெனில், உண்மையில் சட்டரீதியான சிக்கல் வரும் போது அனைவருக்கும் சேர்த்துத் தான் அது வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் வந்ததாக நான் அறியவில்லை
இந்தப் போராட்டத்தை வெற்றியாக முடித்தமையையிட்டு ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் ஏனெனில் அந்த எழுச்சி நிகழ்வு எமது தமிழினத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு விடயம். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட 
ஒரு விடயம்.

ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகளைப் பார்த்தால் நகைச்சுவைப் படங்கள் நடிப்பது போல் சில செயற்பாடுகள் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக 
இருக்கின்றது.
சிறுபிள்ளைத் தனமான அரசியற் செயற்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்றுமே செய்யாமல் இருந்து ஒரு பஸ் வண்டியை ஓட்டி விளம்பரம் தேடுவதான காட்சிகளைக் கூட 
காண்கின்றோம்.
ஒரு பாதையில் போகமுடியாவிடின், பஸ் வண்டிக்கு சாரதி இல்லாவிட்டால் புதிய சாரதியொருவரை நியமனம் செய்வதும், அந்தப் பாதையைச் சீர்செய்வதும்தான் அபிவிருத்தி என்று சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள் செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களில் நகைச்சுவைப் படங்கள் நடிப்பதை அவர்கள் தவிர்க்க 
வேண்டும்.
நேற்றைய தினம் நீர்ப்பாசன விடயங்கள் சம்மந்தமாக இராஜாங்க அமைச்சரொருவர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மையில் அங்கு தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே தயாரித்து 
முடிக்கப்பட்ட திட்டங்கள். முதலாவது பாராளுமன்ற அமர்வின் பின்னர் நான் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களைச் சந்தித்து 
எமது மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் குறையில் காணப்படுகின்ற நீர்வழங்கல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுகையில் ஒரு மாத காலத்திற்குள் திட்டங்களைத் தயாரித்து வழங்குவதாக தெரிவித்து, அதையும் 
அவர் தந்திருந்தார்.
அந்த நேரம் நமது அபிவிருத்திக் குழுத் தலைவர் சிறையிலே இருந்தார். அவர் அறிய வாய்ப்பும் இருந்திருக்காது. எனவே அவையெல்லாம் முடிந்த விடயங்கள். அவ்வாறான முடிந்த விடயங்களைக் கையில் எடுத்து ஒரு இராஜாங்க அமைச்சரைக் கொண்டு வந்து கூட்டம் நடாத்துவதென்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு விடயம்.
இதை விடுத்து புதிய நீர்வழங்கள் திட்ங்கள், புதிய தண்ணீர்த் தாங்கி நிறுவும் திட்டங்கள், புதிய வீதிகள் நிர்மானித்தல், புதிய பஸ்கள் இறக்குமதி போன்ற செயற்பாடுகளைச் செய்து, அதற்காக நிகழ்வுகளை நடத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள்.
அதேபோன்று சப்ரிகம என்ற திட்டம், கடந்த கம்பெரலிய திட்டம் என்பது பாரிய அபிவிருத்தித் திட்டமாகும். அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 60 கோடி ரூபாய்களுக்கு மேல் ஒதுக்கீடு 
செய்யப்பட்டது.
ஆனால் தற்போதைய சப்ரிகம திட்டத்தில் கம்பெரலியவில் 10 வீதம் கூட ஆளுந்தரப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அபிவிருத்தி செய்வோம் என்று மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தார்கள். இருந்தாலும், இவர்கள் விளம்பரம் தேடும் ஒரேயொரு விடயத்தை மாத்திரம் நன்றாகச் செய்கின்றார்கள்.
நாங்கள் இன்று மக்களுக்காகப் போராடி வழக்குகளுக்கான அழைப்பாணைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிலர் நகைச்சுவைப் படங்களை நடித்து விளம்பரம் தேடுவது மிகவும் 
வேடிக்கையான ஒரு விடயம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தினூடாக அரசியல் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். இதுதான் முக்கியமான விடயம்.
இதன்போது மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் மற்றும் முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிப்பு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் வடக்கு கிழக்கிலே தேசியம் சார்ந்த நாங்கள் எங்கள் வாக்கு வங்கியை  அதிகரிக்க முடியாது.
இது நாங்கள் ஒன்றுபட வேண்டிய ஒரு காலம். இதனை விரும்பாதவர்கள் தான் மிகவும் கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள், கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
மக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், அரச கைக்கூலிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சமே அவர்களை இவ்வாறு சொல்ல 
வைக்கின்றது.
இதனை இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. ஆனால், தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கிலே அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தடுப்பூசி போட மறுப்பு

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு 16-02-2021, இன்றுமுன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
அதாவது, குறைந்தப்பட்சம் ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொவிட் அவதான நிலையில் உள்ள தரப்பினர் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முதலில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிற்கும் வடதாரகை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும்,  காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி 
தெரிவித்தார். 
நெடுந்தீவு கடல் மார்க்கப் போக்குவரத்து சேவைகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை  ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தன. 
இதில் வடதாரகை  திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கென வடமாகாண சபையால் வழங்கப்பட்ட நெடுந்தாரகை படகு பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
இந்நிலையில், நெடுந்தீவுக்கான  போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மேற்கண்ட
வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதன் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளதென்றார். 
இதற்கமைய, இதன் வேலைகளுக்காக 35 .5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடு  செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஆகி உள்ளது எனவும் கூறினார்.
அத்துடன், நீண்ட காலம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், குமுதினி படகி சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும், 
சத்தியசோதி தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

தமிழின உணர்வாளர் கிருபா அவர்கள் பிரான்சில் மரணம் 13.02.21

ரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில்  13.02.2021,சனிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மூதாளர் அவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் முத்தையன்கட்டு,
வலதுகரை ஆகிய இடங்களை
 வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், பிரான்சில் சார்சல் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்கள் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று 
வந்த நிலையில்13.02.2021 சனிக்கிழமை அன்று,இரவு சாவடைந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் சுதந்திர நாளைக் கரிநாளாகக் கொண்டு பிரான்சில் சிறிலங்காத் தூதரகத்தின் முன்பாக இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளும் இவர், சிங்கள மொழியில், தமிழர்களின் குரலை வெளிக்காட்டத் தவறமாட்டார்.
இதுமட்டுமல்லாமல், பிரான்சில் நடைபெறும் அனைத்து எழுச்சி நிகழ்வுகளிலும் தனது உடல்நிலையை கருதாமல் இவர் முதலாவதாகக் கலந்துகொள்வார்.
ஜெனிவாவில் இடம்பெறும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்வதற்கு தொடருந்து மற்றும் பேருந்துகளில் செல்வதற்கு முதலாவதாக பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்வார்.
ஒவ்வொரு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போதும் தமிழீழ இலச்சினை பொறிக்கப்பட்ட துணியை கழுத்தில் கட்டியிருப்பதுடன், தமிழீழ தேசியக்கொடியைக் கையில் ஏந்தியிருப்பார்.
தமிழின விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் மண்ணிலும் குரல்கொடுத்துவந்த குரல் இன்று 
ஓய்வடைந்துள்ளது.
அன்னாரின் இழப்பினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்வு பற்றிய தகவல்கள் பின்னர் 
அறிவிக்கப்படும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

சிறிலங்கா வடக்கில் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கியது ஏன்?

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 வடக்கு மாகாணத்தில் ; மூன்று தீவுகள் சீன கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்.
 அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது கிழக்கு& ; முனையத்தினை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என 
அறிவித்துள்ளது. 
அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு ,அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்றையும் சீன கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள் இது மிகவும் பாரதூரமான விடயமாகும். முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா  பார்த்துக்கொள்ளும்.
 ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது  எனது கருத்து. 
 தற்போதைய அரசானது இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காக செயற்படுகின்றார்கள் 13 வது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால் கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்கு பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது மிகவும்
 சட்டத்திற்கு முரணானது.
 எமது தமிழ் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நிலை 
காணப்படுகின்றது.
 இந்தியாவில் இருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்கு கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும் அதேபோல் இலங்கை அரசானது இதனை தெரியாமல் செய்யவில்லை தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.
 அதாவது ஜெனிவாவில் இந்தியாவினுடைய ஆதரவை தாங்கள் பெறுவதற்காக, இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்று தரவேண்டும் என்ற  அடிப்படையிலும் இவற்றை செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



சனி, 13 பிப்ரவரி, 2021

பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவில் அங்குரார்ப்பணம்

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் நாளை(14) இரணைதீவில் இடம்பெறவுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய இரணைதீவை அண்டிய கடற்பிரதேசததில் ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம்> கடலட்டை வளர்ப்புக்கு ஏதுவான கடல் பரப்பினை அடையாளப்படுத்தியது.
குறித்த திட்டத்திற்கு தேவையான முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உற்பத்தி செய்யப்படுகின்ற கடலட்டைகளை கொள்வனவு 
செய்து நவீன தொழில்நுட்ப முறையில் பதனிட்டு 
வெளிநாடுகளுக்கு உற்பத்தி 
செய்வதற்கும் 45 வருட தொழில் அனுபவத்தினைக் கொண்ட ´சுகந்த் இன்டர்நேஷ;னல் பிரைவேட் லிமிடெட்´ என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் முன்வந்திருந்தது.
இந்நிலையில் நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தனியார் முதலீட்டாரள்கள் இணைந்த பொறிமுறையூடாக அமைக்க தீர்மானிக்கப்பட்ட பாரிய கடலட்டைப் பண்ணையின் பயனாளர்கள் அனைவரும் இரணைதீவை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மத்தியில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது
 கடற்றொழில் அமைச்சரின் திட்டவட்டமான தீர்மானமாக இருந்த நிலையில், முதற் 83 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 1 ஏக்கர் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான ஆரம்ப முதலீட்டுகள் அனைத்தையும் தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுக் 
கொண்டுள்ளது.
இலங்கையிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்ப பதனிடும் பொறிமுறை உள்ளடக்கப்பட்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையின் ஊடாக சுமார் 500 உறுப்பினர்களைக் கொண்ட 
83 குடும்பங்கள் நேரடித் தொழில்முனைவோராக்கப்பட்டுளளனர். இதனுடாக சுமார் 500 தொழிலாளர்கள் நேரடித் தொழில் வாய்ப்பினையும் சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டதின் அடிப்படையிலும் நேரடி வழிநடத்தலிலும் முதற் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டத்தில் பயனாளர்களாக இணைந்து கொள்வதற்காக இரணைதீவை சேர்ந்த சுமார் 135 கடற்றொழிலாளர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



>>>>>

முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம்(TeqBall)வடமாகாணத்தில்

சிறீலங்கா விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை 9 மணிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal play ground) 
நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தனை, இலங்கை ரெக்பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது.
இந்நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் வட.மாகாண விளையாட்டு கழகங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரெக்பந்தாட்ட உபகரணங்களை கையளித்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெக்பந்தாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டு ரெக்பந்தாட்ட மேசை வழங்கி வைக்கப்பட்டன என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

உடகோஹோவிலவில் சிறுமி கர்ப்பமான நிலையில் பேய் கலைப்பவரின் வீட்டிலிருந்து மீட்பு.

திருமலையில்  15 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தி வந்த பேயோட்டுபவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கந்தளாயை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று ஹாலி எல, 
உடகோஹோவில பகுதியில் வசித்து வந்தபோதே ஆசாமி சிக்கினார். ஹாலிஎல பொலிசார் கைது செய்யப்பட்ட பேயோட்டுபவரின் வயது 38.பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பேயோட்டும் நபர், யக்கல மற்றும் கலகேதிஹேன பகுதிகளைச் சேர்ந்த இரண்டு 
பெண்களுடன் வசித்து வருகிறார்.
கந்தளாய் பகுதிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் ஜெயந்திகம பகுதியிலுள்ள சிறுமியின் வீட்டிற்கும் சென்றுள்ளார். சிறுமியுடன் உறவை ஏற்படுத்திய பின்னர், பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். வாகனமொன்றில் கடத்தி, ஹாலி எலவிற்கு 
அழைத்து வந்திருந்தார்.ஹாலி எலவில் தொடர்பிலிருந்த பெண்ணின் வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பேயோட்டப்பட வேண்டிய பெண்களை அவர் வீட்டில் அழைத்து 
வந்து தங்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், சிறுமியையும் வீட்டில் தங்க அந்த பெண் அனுமதித்திருந்தார்.2020 டிசம்பர் ஆரம்பத்தில் மகள் காணாமல் போயுள்ளதாக, சிறுமியின் 
தாய் சூரியபுர 
பொலிசில் புகார் அளித்தார்.காணாமல் போன 
சிறுமி குறித்து ஹாலிஎல பொலிசார் நடத்திய விசாரணைகள் மற்றும் ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொடர்ந்து,
 சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அப்போது, 
சிறுமி கர்ப்பமாக
 இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹாலி எல பொலிசார் நடவடிக்கை எடுத்து
 வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



ஒரு போதும் படையினரின் மோசமான செயல்களை மன்னிக்க முடியாது

நாட்டில் சீருடையிலிருந்த ஒரு இராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான 
காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்புவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தநிலையில் சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
ஒரு ஒழுக்கமான நிறுவனமாக இது படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாதென்று இராணுவம் கூறியுள்ளது.முதற்கட்ட விசாரணையில் குறித்த இராணுவ உறுப்பினருக்கும் பொதுமக்கள் குழுவுக்கும் இடையே பல சம்பவங்கள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.