யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும், காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி
தெரிவித்தார்.
நெடுந்தீவு கடல் மார்க்கப் போக்குவரத்து சேவைகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தன.
இதில் வடதாரகை திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கென வடமாகாண சபையால் வழங்கப்பட்ட நெடுந்தாரகை படகு பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நெடுந்தீவுக்கான போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மேற்கண்ட
வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதன் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளதென்றார்.
இதற்கமைய, இதன் வேலைகளுக்காக 35 .5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஆகி உள்ளது எனவும் கூறினார்.
அத்துடன், நீண்ட காலம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், குமுதினி படகி சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும்,
சத்தியசோதி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக