தாயகத்தில் அமைதியான போராட்டத்துக்கு வழங்கிய முன்னுரிமையை ஏன் தென்னிலங்கை ஊடகங்களால் வழங்க முடியாமல் போனது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ்-முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸ் கருத்துத்
தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகங்கள் அந்த அமைதியான போராட்டத்துக்கு வழங்கிய முன்னுரிமையை ஏன் தென்னிலங்கை ஊடகங்களால் வழங்க முடியாமல் போனது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
”எந்தவொரு ஜனநாயக பண்பிலும் அமைதியான போராட்டம் என்பது ஒரு முக்கியமான உரிமையாகும். இதன்மூலம் நியாயமான கவலைகள்
கேட்கப்பட வேண்டும்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் போராட்டத்தை தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பியிருந்ததைப் பார்த்தேன்.
ஆனால் அது ஏன் கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்களால் பரவலாக அந்த போராட்டம் மறைக்கப்பட்டது? இது பற்றி நான் சிந்தித்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக