செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நிகழ்ந்த விபத்தில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகில் மாணவன் படுகாயம்.

நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகில் விபத்து மாணவன் படுகாயமடைந்துள்ளார்.இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த ஹயஸ் வாகனம் மேதியதில் 300வீட்டுத்திட்டம் நாவற்குழி பகுதியை சேர்ந்த சி.சாந்தன் என்ற மாணவன் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 3 ஏப்ரல், 2017

நேரக் கணிப்பு இயந்திரம் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர் வரவினை பதிவுச் செய்வதற்கு நேரக் கணிப்பு இயந்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், இரண்டாம் தவணையில் இருந்து கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும்என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், முன்னதாக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும்இளைஞர் விவகார அமைச்சு அறிக்கை ஒன்றை பின்வருமாறு வெளியிட்டிருந்தது.
வட மாகாணத்தில் உள்ள தேசிய மற்றும், மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார்மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் வரவை பதிவு செய்யும் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இரண்டாம் தவனையில் இருந்த இந்த திட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும். குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை அபிவிருத்திக் குழு நிதி அல்லது உள்ளீட்டுக்கான நிதியை 
பயன்படுத்த வேண்டும்.
பாடசாலைகளில் இயந்திரப் பயன்பாடு தொடர்பான தரவுகளை கோட்டக் கல்வி அலுவலகங்கள்ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர் பெற்று அதனை இந்த மாதம் 19ம் திகதிக்குமுன்னர், அறிக்கையிடல் வேண்டும் என அமைச்சின் செயலாளர் அறிக்கையில்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>Blogger இயக்குவது.