புதன், 26 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2018 தனது இல்லத்தில் வெகு
 சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 10 ஜூன், 2018

உலக கின்னஸ் சாதனை படைத்தார், திரு.அருணந்தி ஆரூரன்

திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார்,
கர்நாடக சங்கீத கச்சேரியில் அதி கூடிய நேரம் 40 மணி நேரம் தொடர்ந்து பாடி, 29 மணி 40 நிமிட உலக கின்னஸ் சாதனையை
 முறியடித்து, தொடர்ந்து பாடி
திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் 
சாதனை படைத்தார், என்பதில் இலங்கையராகநாம்  பெருமை
 கொள்வோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 1 ஜூன், 2018

ஸ்ருட்கார்ட் நகரில் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 16/06/18

யேர்மனியில்16/06/2018 அன்று  ஸ்ருட்கார்ட் நகரில் இயங்கிவரும்,உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பும்,நோர்வேயில் இயங்கும் அடுத்த தமிழ் தலைமுறைகள் அமைப்பும் இணைந்து வழங்கும்,தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவும் நோக்குடன் நடாத்தப்படும் இந்த நிகழ்வுக்கு 
யேர்மனி வாழ் மக்கள் பூரண 
ஆதரவு வழங்கி எங்கள் தாயக உறவுகளின் கண்ணீர் துடைக்க கரம் கோர்ப்பீர்கள் என்று நம்புகின்றோம்,உங்களை சந்திக்க யேர்மனி மதுரக்குரலோன் கண்ணன் அவர்களும் அவர்களுடன் இணைத்த கலைஞர்களுடன்.ஈழத்தில் தனது
 இரண்டு கால்களை இழந்தும்.மற்றவர்களுக்கு உதவிசெய்யும் பண்பாளன் நல்ல பாடகர் நல்ல தோல் கருவி வாசிக்கத் தெரிந்த சமூக சேவையாளன் செல்வன் நிமால் அவர்களும் டென்மார்க்கில் இருந்து தாயகப்பாடகர் இரா செங்கதிர் அவர்களும் பிரான்ஸ்சில் இருந்து 
திரு இந்திரன் அவர்களும் சுவீஸ்ல் இருந்தும் எழுச்சிகுயில் அம்றிதா அவர்களும். நடன தாரகை செந்தூரி அவர்களின் குழுக்களும்.நூறன்பேர்க் மற்றும் ஸ்ருட்காட் மாணவ மாணவிகளும்
 இன்னும் பல கலைஞர்கள் சுவீஸ்ல் இருந்து வருகின்றார்கள் ,இவர்களை சந்திக்க அரிய வாய்ப்பு,வருங்கள் உறவுகளே உங்கள் கரங்களால் தாயக மக்களின்
 கண்ணீர் துடைப்போம்,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 மே, 2018

என்.வி. சிவநேசனுக்கும் அவர்பாரியாருக்கும் தமிழ்பண்டிதர் படட்டும் வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான
 பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம்
இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 28 ஏப்ரல், 2018

திரு-திருமதி என்.வி. சிவநேசன் அவர்களுக்கு தமிழ்பண்டிதர் படடம்

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி 
கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமதி நகுலா சிவநாதனுக்கு தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கப்பட்டது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில் வசிக்கும் திருமதி நகுலா சிவநாதன் அவர்களுக்குதமிழ்மாணி என்ற பட்டம் பெற்றுக்கொண்டார்.
25 வருட ஆசிரியர் சேவையைப் பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்கள்
தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்
செம்மொழியாம் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும்
உயர்ந்த இலக்கிற்காக கிடைத்த பரிசாகும் இவருக்காண இந்தச்சிறப்புத்தனை அனைவரும் வாழ்த்தி நிற்க  இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து ; 8 பேர் படுகாயம்

 முல்லைத்தீவு பரந்தன் வீதியில்.12.04.2018.. காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் இவ்வாறு 
விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 12 ஏப்ரல், 2018

முறிகண்டியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்பாற்ற கிணற்றிலிருந்து இன்று சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சிறுவன்
 அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட 
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து
 வருகின்றனர்.சிறுவனின் அகால மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





புதன், 21 மார்ச், 2018

சாவகச் சேரி வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர் குழு அட்டகாசம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலை பொருட்களை 
சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் போது வைத்தியசாலையின்
 இரும்புக் கதவு, மேசை ஆகியன சேதமடைந்துள்ளன.அட்டகாசத்தில் ஈடுபட்ட இந்த குழு, வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மிரட்டி விட்டு தப்பிச் 
சென்றுள்ளது.
இன்று(21-03-2018) காலை வைத்தியசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களை மிரட்டியமைக்காக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அச்சுதனினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் 
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..நேற்றையதினம்(20-03-2018) செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் சாவகச்சேரி நகரை அண்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் வீதியில் 
கிடந்துள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலைக்கு தெரியப்படுத்திய நேரத்தில் அம்புலன்ஸ் இல்லாமையை காரணம் காட்டியதில் இந்த விஷமச் செயல் இடம்பெற்றதாக 
தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குறித்த சமயம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பொலிஸ் வீரர்கள் தினம் காங்கேசன்துறையில் நடைபெற்றது

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் (21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர
 பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூரப்பட்டது.இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ்
 அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிசிர 
குமார ஹேரத் மற்றும் பிரியந்த ஆகியோர் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ளடங்கும் பலாலி அச்சுவேலி
 இளவாலை தெல்லிப்ளை காங்கேசன்துறை நெல்லியடி பருத்தித்துறை வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
 கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வாகனங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டன

அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், மற்றும்
 பஸ் வண்டியிலும் வந்த பெரும்பான்மை இன காடையர்களால் அடித்து தீவைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று நள்ளிரவு  வேளையில்
 இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது
நேற்று நள்ளிரவு வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தாக்குதலை தொடர்ந்து சம்பவ பிரதேசத்தில் பதட்ட நிலை நிலவியதனால் ,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில்
 ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் விரைவுபடுத்தப்படுவதாக அம்பாறை தலைமை பொலீஸா
ர் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 20 ஜனவரி, 2018

ஓமந்தை மக்கள் யாழ்- கொழும்பு ரயிலை மறித்து போராட் டம்

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.குறித்த புகையிரதமானது சுமார் 
ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான 
நேரம் வழிமறித்து வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான 
பாதையை மறித்து 
புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த புகையிரதம் மக்களால் வழிமறித்து நிறுத்தி 
வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறானதொரு 
நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக புகையிரதத்தை வழிமறித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு 
உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சற்று முன், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலையீட்டினால் 
புகையிரதம் செல்வதற்கு வழிவிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு கிழமைக்குள் குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தருவதாக அவர் மக்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 19 ஜனவரி, 2018

மாப்பிள்ளைக்கு பெப்பே காட்டிவிட்டு கள்ளக் காதலனுடன் மணமகள் ஓட்டம்!!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.
வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் முடித்­தார்.மனை­வியை தாயா­ரு­டன்
 வீட்­டில் விட்­டு­விட்டு வெளி­நாட்­டுக்­குச் சென்று மணப்­பெண்னை எடுப்­ப­துக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.இந்­த­நி­லை­யில், இங்கு கடந்த 7மாதங்­க­ளாக வசித்து வந்த குறித்த மணப்­பெண் தனது 
திரு­ம­ணத்­துக்கு வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட வாக­னச்­சா­ர­தி­டன் சென்­று­விட்­டார் என்று மணப்­பெண்­ணின் உற­வி­னர்­கள் வவு­னியா பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­னர்.இரு­வ­ரை­யும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார் மணப்­பெண்­ணின் விருப்­பத்­தைக்
 கேட்­ட­னர்.
அப்­போது, மணப்­பெண் வெளி­நாட்டு மண­ம­கன் தேவை­யில்லை என்­றும், அவ­ரு­டன் நடை­பெற்ற திரு­ம­ணத்தை இரத்­துச் செய்­து­விட்டு, தனது காத­ல­னு­டன் வாழ விரும்­பு வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.இது­தொ­டர்­பில் ஆராய்­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 18 ஜனவரி, 2018

மண்ணில் இலங்கையின் ஒரு பகுதி புதைந்து போகும் பேராபத்து?

இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் 
தெரியவந்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 80 வீதமானவை இவ்வாறு புதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளது.
இவ்வாறான ஆபத்து நிறைந்த பகுதியில் 6000 குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு இலட்சத்து 61 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 வருட யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட டைனமைட்டுகளை விடவும் அதிகமான டைனமைட்டுகள் பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஒருவரும் சிந்திக்கவில்லை எனவும், கற்பாறைகளை உடைத்து இலாபம் பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமே அனைவரும் சிந்தித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த மாவட்டத்திற்கான வரைபடம் 
ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரினோம் எனினும் வழங்கப்படவில்லை.
 அதிக மக்கள் வாழும் பகுதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பதுளைக்கு ஆபத்து ஏற்பட்டால் முழுமையான இலங்கையின் விவசாயமும் 
பாதித்து விடும்.
சேனாநாயக்க சமுத்திரம், எலஹெர, பராக்கிரமபாகு சமுத்திரம், கிரிதலை, மின்னேரியா, கவுடுல்ல ஆகிய அனைத்திற்கும் பதுளை ஊடாகவே நீர் வழங்கப்படுகின்றது.
பதுளைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 9 மாவட்டங்களின் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.