சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த 
நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து 
பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 25 அக்டோபர், 2016

பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்!!!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது  இந்தநிலையில்  குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது
இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.
இதனையடுத்து  பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம்
 ஏற்பட்டு ள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக 
காட்சிஅளிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 22 அக்டோபர், 2016

திடீரென காணாமல் போன யாழ். புத்தூரில் குளம் ( நிழல் படம் )

வீணாக கடலுக்குச் செல்லும் மழை நீரை தேக்கி வைத்து 'விவசாயம் பார்க்கவோ அன்றி நன்னீர் மீன் வளர்க்கவோ' தனது சொந்தக் காணியில் குளம் கட்டுகிறார்,  நல்ல சமூக சேவை மனம்
 உடைய ஒருவர். 
அந்த மனிதர் வவுனியா கனகராயன்குளத்தில் இந்த தூய பணியில் ஈடுபட்டுள்ளார். வவுனியாவுக்கு நீங்கள் பயணம் செய்யும் போது A 9 சாலை ஓரமாக கனகராயன்குளத்தில் இதைப் பார்க்கலாம். 
ஓ... எங்கள் யாழ்ப்பாணத்தில்???
புத்தூரில் உள்ள குளம் ஒன்றுக்கு மண் போட்டு மூடுகிறார், கட்டட காடு எழுப்புவதற்காக ஒருவர்.  
வெவ்வேறு சிந்தனை உடைய இரண்டு மனிதர்கள். 'முன்னவர் போல மிகச் சிலரும், பின்னவர் போல கோடி பலரும்' நம்மில் உள்ளனர். இதில் எந்த அணியின் பக்கம் நீங்கள் நிற்கப் போகின்றீர்கள்?
நிச்சயம்  இது ஒரு வினை என்றே 
கூற வேண்டும் !!!
'வினை விதைத்தவன் வினையை அறுத்தே தீர வேண்டும்' காத்திருங்கள்... கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாரி மழை வெள்ளத்துக்கு சென்னை மாநகரம் அள்ளுண்டு கடலில் மூழ்கியது போல, யாழ்ப்பாணமும் இந்தப் பேரிடரை எதிர் கொள்ளும் காலம் வெகு தூரத்தில்
 இல்லை! 
ஓ... எங்கள் யாழ்ப்பாணமே அப்போது நீ என்ன செய்வாய்? ஊர் கூடி ஒப்பாரி வைப்பதற்கு கூட அப்போது யாரும் 
இருக்க மாட்டார்களே...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
புதன், 19 அக்டோபர், 2016

திடீர் முடிவு எடுத்தஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் ?

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் இருந்து கம்போடியாவில் குடியமருவதற்கு இலங்கை அகதிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இரண்டு இலங்கை அகதிகளும் ஒரு சிரிய அகதியும் கம்போடியாவில் குடியமர திடீரென சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்தவர்களை திருப்பி அனுப்புவதுடன், தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் வெளியேற்றும் முயற்சியில் தற்போது அவுஸ்திரேலிய 
அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்துள்ள இலங்கை, சிரியாவைச் சேர்ந்த மூன்று அகதிகளுக்கு 15,000 டொலர்களை அவுஸ்திரேலியா அரசு தருவதாக Refugee Action Coalition அமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இதுவரை 5 அகதிகள் கம்போடியாவுக்கு சென்றுள்ளனர். பின்னர் அதில் மூவர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 18 அக்டோபர், 2016

அருணோதய மாணவன் கோல் ஊன்றிப் பாய்தலில் சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.
நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது) 4.61 உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.
அதேவேளை, 17 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ். மாவட்ட மாணவிகளே பெற்றனர்.
யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி மாணவி சீ.ஹெரீனா 2.7 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், 2.6 மீற்றர் உயரம் பாய்ந்து பளை மத்திய கல்லூரி மாணவி டி.திவ்யா வெள்ளிப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி எஸ்.சங்கரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, 21 வயதுக்குட்பட்ட 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கோல் ஊன்றிப் பாய்தலில், தெல்லிப்பழை மகாஜன கல்லுரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,பளை மத்திய கல்லூரி மாணவி ஜே.சுகிர்தா 3.20 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் 
பெற்றிருந்தனர்
அத்துடன்,17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுரி மாணவன் ஏ.புவி தரன் 3.80 மீற்றர் பாய்ந்து, தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.
இந்தப் பிரிவில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்களான ஆர்.ஜதுசன் 3.60 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தையும், யு. சலக்சன் 3.55 மீற்றர் தாண்டி மூன்றாம் இடத்தையும் 
பெற்றுக்கொண்டனர்.
கோல் ஊன்றிப் பாய்தலில் 17 வயது ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் யாழ். மாவட்ட மாணவர்க ளே அள்ளியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யூனியன் கல்லூரி 200 ஆவது வருட கொண்டாட்டங்கள் ஆரம்பம்

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த விழாவானது நேற்றைய தினம் காலை 9 மணிக்கு அதிபர் ரீ.வரதன் தலைமையில் கல்லூரியின் சண்டேஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன்  
நடைபெற்றது
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை எஸ்.சேனாதிராஜா, சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் ரீ.தவராஜா, கௌரவ விருந்தினர்களாக
 வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன், வலிகாம வலய கல்விப்பணிப்பாளர் எஸ். சந்திரராஜா, தெல்லிப்பளை பிரதேசசெயலக திட்டமிடல் பிரிவின் உப தலைவர் என். ரதி, தெல்லிப்பளை பிரதேச செயலக கல்வித்துறை உத்தியோகஸ்தர் எம். ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து 
சிறப்பித்திருந்தனர்
அத்துடன் கல்லூரியின் "யூனியன்ஸ் 200 "எனும் ஆண்டு விழா சிறப்பு நூலானது  வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்களால் வெளியிட்டு வைக்கபட்டது. .குறித்த நிகழ்வின் இரண்டாவது நாள் கொண்டாட்டம் இன்றும் நடைபெற்று வருகின்றமை
 குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 13 அக்டோபர், 2016

கேலக்சி நோட் 7 போன்கள், பாவனையாளருக்குஎச்சரிக்கை!!!

சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அனைவரும் தங்களது மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது 
சாம்சங்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதாக பல புகார்கள் வந்தன.
அப்படி புகார் கூறிய வாடிக்கையாளர்களுக்கு அதே ரக மாடலில் வேறு போனை நிறுவனம் தர அதுவும் தீ பிடித்து வெடிப்பதாக புகார் எழுந்தது.

2.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பி வருவதால் சாம்சங் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாம்சங் கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களின் 
விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு செல்போன்களை மாற்றித் தருவதை நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தவகை போன்களை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய போன்களை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பல்வேறு புகார்களின் எதிரொலியாக சாம்சங் நிறுவனம் உற்பத்தியையும் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நான்கு பிள்ளைகளின் தந்தை நாவற்குழியில் வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய கதிர்காமன்.சந்திரசேகரன் என்ற குடும்பஸ்தரே  கொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் நேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 7 அக்டோபர், 2016

காட்டில் திடீர் என பரவிய தீயினால் முல்லையில் 20 ஏக்கர் எரிந்து நாசம்!

முல்லைத்தீவு வசந்திபுரம் கிராமத்து பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது
இன்று பிற்பகல் ஒருமணியளவில் முருகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும் வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள 
காட்டில் திடீர் 
என தீ பரவியுள்ளது குறித்த பிரதேசத்தினை அண்மித்ததாக இருக்கின்ற இரண்டு இராணுவ முகாமில் காவல்கடமையில் இருந்த வர்களால் அவதானிக்கப்பட்டதனை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ
 நீர்த்தாங்கி வாகனங்களின் துணையோடு சுமார் இரண்டு மணி நேரத்துக்குள் தீ மக்கள் குடியிருப்பினுள் செல்லாதவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
இருப்பினும் குறித்த காட்டுப்பகுதியில் சுமார் இருபது ஏக்கர்வரை எரிந்து நாசமாகி உள்ளது குறித்த பிரதேசத்தை இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பயன்படுத்துகின்றமையால் குறித்த தீ இயற்கையால் ஏற்ப்பட்டதா அல்லது மனிதர்களால் ஏற்ப்பட்டதா என  
அறியப்ப டவில்லை
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 5 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கிருஷ்ணா கண்ணன் (05.10.2016)

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2016. .இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக
 கொண்டடினார்  .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  செல்வச்சந்நிதி முருகன் 
இறை ஆசியுடன் 
 என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வயதோ 10 நிறையோ 192 கிலோ உலகின் குண்டுப் பையன்!!! (படங்கள்)

                                     உலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பெர்மான. 10 வயதேயான இவரின் நிறை 192 கிலோவாகும். வளர்ந்த இருவர் சாப்பிடும் உணவை ஒரே தடவையில் உண்டு விடுகிறார் இந்தக் குண்டுப் பையன். தினமும் 5 தடவைகள் உணவு

அரிசி, மீன், மாட்டிறைச்சி, மரக்கறி சூப், சோயா என்பவற்றை இவர் சாப்பிடுகிறார். உடல் எடையை குறைக்க சாப்பாட்டை குறைத்தால் அவரால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஆர்யாவின் உடல் எடை அதிகரிப்பு குறித்து அவரின் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். முக்கியமாக

ஆர்யாவுக்குப் பொருத்தமான உடைகளுக்காக அவரின் பெற்றேர் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். சாரம் அணியும் அவருக்கு அது அப்படியே பொருந்தி விடுகின்றது. இவரது உடல் எடையால் அவர் பாடசாலையில்

இருந்து இடைநிறுத்தப்பட்டு விட்டார். வீட்டிலேயே இருக்கும் இந்த சிறுவனின் ஒரே கவலை தன்னை ஒத்த சிறுவர்களுடன் ஓடியாடி விளையாட முடிவதில்லை என்பதே  
இங்குஅழுத்தவு் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 4 அக்டோபர், 2016

மீண்டும் யாழ்ப்பாணத்தில் காத்தவராயன் கூத்து நாடகம்!

அருகி வரும் நாட்டார் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில்  காத்தவராயன் கூத்து இசை நாடகம்
நடைபெற்றது.
சுன்னாகம் றோட்டரக் கழகத்தின் ஏற்பாட்டில்  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் அருணாச்சலம் மண்டபத்தில்  இந்த நாடகம்  நடைபெற்றது இந்த நாடகத்தை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 3 அக்டோபர், 2016

தமிழ் சிறுவனால் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.
மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும், இப்போதிருக்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புற்றுநோயாகவும் காணப்படுகின்றது. கதிர்வீச்சு,  chemotherapy ஆகியவற்றால் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்தமுடியும்.
இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் தாக்கிய பெண்களில் உற்பத்தியாகும் ஐடி4 (ID4) எனும் புரதத்தைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழிமுறையைக் கண்டுபிடித்ததன்மூலம் மருந்துகளால் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைக்கு நோயாளியை மாற்ற முடியும் என கிருதின் 
தெரிவித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்புக்காக, பிரிட்டனில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானிகளுக்கான The Big Bang Fair என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களில் கிருதினின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒருவருக்கு Alzheimer எனப்படும் நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கான முதலாவது அறிகுறி தென்படுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே அதைக் கண்டறியும் சோதனை முறையைக் கண்டு பிடித்ததற்காக, கடந்த ஆண்டு புGoogle Science Fair விருது கிருதினுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.