செவ்வாய், 25 அக்டோபர், 2016

பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்!!!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது  இந்தநிலையில்  குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது
இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.
இதனையடுத்து  பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம்
 ஏற்பட்டு ள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக 
காட்சிஅளிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.