புதன், 19 அக்டோபர், 2016

திடீர் முடிவு எடுத்தஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் ?

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் இருந்து கம்போடியாவில் குடியமருவதற்கு இலங்கை அகதிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இரண்டு இலங்கை அகதிகளும் ஒரு சிரிய அகதியும் கம்போடியாவில் குடியமர திடீரென சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்தவர்களை திருப்பி அனுப்புவதுடன், தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் வெளியேற்றும் முயற்சியில் தற்போது அவுஸ்திரேலிய 
அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்துள்ள இலங்கை, சிரியாவைச் சேர்ந்த மூன்று அகதிகளுக்கு 15,000 டொலர்களை அவுஸ்திரேலியா அரசு தருவதாக Refugee Action Coalition அமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இதுவரை 5 அகதிகள் கம்போடியாவுக்கு சென்றுள்ளனர். பின்னர் அதில் மூவர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.