யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய கதிர்காமன்.சந்திரசேகரன் என்ற குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் நேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக