செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து  கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.
இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அக் கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில், 170,000திற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக
 தெரியவருகிறது.
செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவது, எதிர்வரும் பரீட்சைகளை நடத்துகின்றமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடுகின்றமை ஆகிய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் அத்தியாவசியம் என்றால், அந்த மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் செயன்முறைப் பரீட்சையின் ஊடாக பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

இராணுவத்தினரால் யாழ் குடாநாட்டில் நடந்த விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் –கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி பயனித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



புதன், 25 ஆகஸ்ட், 2021

நாட்டின் பொருளாதார சிக்கல் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டின் பொருளாதாரம் இன்று மூன்று வழிகளில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நிய செலாவணி இல்லாமல், உணவு மற்றும் மருந்து இல்லாமல் மக்கள் இறப்பார்கள் என்றும் 
அவர் சுட்டிக்காட்டினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 23 ஆகஸ்ட், 2021

வேன் மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் 23-08-2021. இன்று  இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வேன் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் வேனின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது
இந்நிலையில் குறித்த வேன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சூம் வழியாக கலைஞர்கள் நடாத்திய நிகழ்வு உலக சாதனையாக பதிவு

இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டும் இவ்வாறான உலக சாதனையொன்றும் படைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக சுமார் 10,000 நடனக் கலைஞர்கள் நடேசனுடைய புகழை விளக்கும் வண்ணம் நடேச கௌத்துவத்தினை ஒரே நேரத்தில் நடனமாடினார்கள். இதில் பல்வேறுபட்ட இந்திய மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்தும் பல நடனக் கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந் நிகழ்வினை பத்மா சுப்ரமணியம் அவர்கள் 
ஆரம்பித்து வைத்தார்.
பல நாடுகளில் இருந்தும் பங்கு பற்றிய மாணவர்களுள் எமது இலங்கை திரு நாட்டிலிருந்து மட்டக்களப்பு மண்ணிலிருந்து திருமதி வசந்தி நேரு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிருத்திய கலாலய ஆசானாகிய திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவர்களுடைய  6 மாணவர்கள் பங்கு கொண்டு உலக சாதனை பெற்று மண்ணுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து
 கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவிட் நிதியத்திற்கான நிதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அதுமட்டுமன்றி கோவிட் அசாதாரண காலகட்டத்திலும்   விரிவரங்க நிகழ்கலையினூடாக(ZOOM ) கலைமணி மதுரை சு. முரளிதரன் அவரின் நெறியாழ்கையின் கீழ் பல நாட்டு கலைஞர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த உலக சாதனை நடன நிகழ்விலும் மட்டக்களப்பினை சேர்ந்த நிருத்திய கலாலய ஆசிரியரும், முனைவர் பட்ட ஆய்வாளருமான திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவருடைய மாணவிகளான (டானி ருக்ஷிக்கா மோசஸ் சஞ்சுலா ராஜேந்திரம், ஆனந்தசேகர் ரம்யா, 
ராமுசங்கர் ரஜித்ரா, லோகநாதன் நிரோஷனா, ரவிந்ரகுமார் ரக்ஷிதா, சுவர்ண சந்திரண் சாருண்யா, பத்மசிறி கிஷானி, பிரான்சிஸ் தர்ஷிக்கா, தியாகராஜன் அபிராஷினி, அருட்செல்வன் அக்ஷனா, கார்த்திகா தேவானந், சுரேஷ்குமார் கிஷோனியா ஷான்ருக்ஷி, கேதாரணி முருகதாஸ்) ஆகிய 14 மாணவர்களும் 
பங்கு கொண்டனர்.
இந்த நடன நிகழ்வானது கின்னஸ்  உலக சாதனை பதிவேட்டில் பதியப்பட்டு மீண்டும் உலக சாதனை படைத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 21 ஆகஸ்ட், 2021

கொழும்பில் ஊரடங்கு நேரத்தில் நடந்த அகோரம் தீவிர விசாரணையில் பொலிஸ்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில்.21-08-2021. இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக
 தெரியவருகிறது.முகம்
துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்
 செல்லப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் யாழில் முண்டியடிக்கும் மக்கள்

நாடு முடக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
நாட்டில் ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலையங்கிளில் மக்கள் திரண்டு எரிபொருளினைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு 
எனவும் கூறப்பட்டது.
இதயைடுத்து இன்று பிற்பகல் முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 18 ஆகஸ்ட், 2021

இறுமாப்புடன் இலங்கை அரசாங்கம் நாட்டை முடக்க முடியாது

நாட்டை முடக்கவே மாட்டேம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். எனினும், நாடு முழுவதும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.17-08-2021.அன்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்கினால், நாட்டின் பொருளாதாரத்தை
 முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அன்றாட வருமானத்தை உழைப்போர் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்
 மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 16 ஆகஸ்ட், 2021

இலங்கை அமைச்சரவையில் இன்று ஏற்பட இருக்கும் திடீர் மாற்றம்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தின்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய
 அமைச்சர்களின் 
அமைச்சுப் பொறுப்புகளிலும் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மின்சக்தி அமைச்சராகவும் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சர் மற்று கல்வியமைச்சர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச்செல்ல உரிய நடைமுறையொன்றை கல்வியமைச்சர் உருவாக்க
 தவறியிருந்ததுடன் வேதன உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வியமைச்சுக்கு இயலாமல் போயிருந்தது.இதன்காரணமாக 
கல்வியமைச்சர் மீது கடுமையான எதிர்ப்புகளை
 மக்கள் முன்வைத்திருந்தனர்.
அவ்வாறே ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை பேச்சாளராக வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துகளால்
 அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெண்கள் மட்டும்இந்த பதிவினை அவசியம் படியுங்கள்.பணம் வருமாம்

பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் கையில் புழங்கும் பணத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்கிறது சாஸ்திரம். சாஸ்திரம் கூறும் பல உண்மைகள் கசக்க செய்தாலும் அதில் இருக்கும் நுண்ணிய உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் அதன் மகத்துவமான அர்த்தம் விளங்கும். பெண்கள் இப்படி தங்களை வைத்திருந்தால்
அவர்களுடைய கைகளில் பணமானது எப்பொழுதும் விரயமாகாமல் புழங்கி கொண்டே இருக்கும். பெண்கள் எப்படி உடை அணிய கூடாது? அப்படி அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
எந்த நாட்டினராக இருந்தாலும் பழங்காலத்தின பெண்கள் இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படியான உடையை உடுத்திக் கொள்ள மாட்டார்கள். எட்டு முழம் கண்டாங்கி சேலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று கூற வரவில்லை! ஆனால் பெண்கள் இப்படி உடை அணிந்தால் அவர்களுடைய லக்ஷ்மி கடாட்சம்
அவர்களை விட்டு நீங்கி விடுகிறது எனவே பணப்புழக்கமும் குறைகிறது. நம் முன்னோர்களும் நமக்கு சொல்லிக் கொடுத்தது இது தான்! இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படியான உடைகளை ஒரு பெண் அணிந்து கொண்டால், அவளிடம் இருக்கும் மகாலட்சுமி விலகி சென்று விடுவாள். பின்னர் அவர்கள் என்ன தான் கை நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அவர்களிடம் அது தங்காமல் போய்விடும்
நாகரீக உடை அணியும் பெண்களுக்கு தான் இன்று அதிக சம்பளம் என்று நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் அணியும் உடைக்கும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் தொடர்பு உண்டு. கை நிறைய பணம் சம்பாதித்தாலும் அத்தகைய உடை அணியும் பெண்களிடம் நிம்மதி இருக்காது. அவர்களுக்கு மனதில் ஒருவிதமான உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். மன உளைச்சல், மன இறுக்கம் என்று கூறப்படும் நவீன
வகை நோய்களுக்கு ஆட்பட்டு தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வரை கொண்டு சென்று விட்டுவிடும்.
பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல! நம்மிடம் இருக்கும் மகாலட்சுமியை நம்மிடமே தக்க வைத்துக் கொள்ளும் சூட்சமம் தான் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பத்து ரூபாய்க்கு பழம் வைத்து பிழைக்கும் பெண்கள் கையில் இருக்கும் பணப்புழக்கம் கூட, லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்களிடம் இருப்பது இல்லை. தேவையற்ற செலவுகள், வீண் விரயங்கள், நிம்மதியின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு 
ஆட்படுவார்கள்.
புடவை அணிந்து கொண்டாலும், நாகரீகமான மாடர்ன் உடை அணிந்து கொண்டாலும் பெண்களுடைய இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படி மட்டும் அணியக் கூடாது. இடுப்பு, கணுக்கால் மூடிய உடைகளை அணியும் பெண்களிடம் பணப்புழக்கம் சரளமாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். எப்படி வேண்டுமானாலும் உடை அணிவது சுதந்திரம் என்றால் 
நீங்கள் நைட்டி போட்டு கொண்டு உங்கள் அலுவலகத்திற்கு சென்று வரலாமே! இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும் என்பது தான் நியதி.
அதே போல மகாலட்சுமி உங்களை விட்டு செல்லாமல் இருக்க நேர்த்தியாக அடுத்தவர்களின் கண்கள் உறுத்துவது போல் உடை அணியாமல் இருப்பது ஒன்றே வழியாகும். பார்க்கும் கோடிக்கணக்கான 
கண்களை கொண்டதை மனதை நம்மால் சுத்தப்படுத்த முடியாவிட்டாலும், நாம் ஒருவர் அணியும் உடையின் மூலம் அதனை எளிதாக சாதித்து காட்ட முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதை உணராமல் விதண்டாவாதம் பேசினால் மாறப் போவது எதுவுமில்லை

நிலாவரை.கொம் செய்திகள் >>> >




Blogger இயக்குவது.