ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

மலையகத்தை சேர்ந்த மாணவி பிரபல இந்திய பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “சரிகமப“. இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா என பல நாடுகளில் உள்ள தமிழ் மற்றும் ஏனைய மொழிகளைச் சேர்ந்த சிறுவர்கள் போட்டியாளர்களாக 
கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஸா என்பவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருவதுடன், அவர் மிகவும் பிரபல்யமான போட்டியாளராகவும் இருக்கிறார். மற்றுமொறு இலங்கை சிறுமியாக மலையகத்தில் இருந்து அசானி 
பங்குபற்றியுள்ளார்.
கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானி இன்றைய தினம் சரிகமப நிழ்ச்சியில் பாடினார். அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பாடுவதற்கும் அனுமதியளித்துள்ளனர்.
'ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ' என்ற பாடலையே அசானி இன்று பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டும் அவர் பாடவில்லை. தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார். 
அசானி அவரது திறமையை மாத்திரம் இன்று வெளிப்படுத்தவில்லை. இலங்கை வாழ் ஒட்டுமொத்த மலையக மக்களின் உணர்வுகளையும் அவர்களது துன்பகரமான வாழ்க்கையையும் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.
சரிகமப நிகழ்ச்சியில் உச்சம் தொட்டு இறுதிப் போட்டிவரை சென்று வெற்றிவாகையுடன் அவர் இலங்கை திரும்ப வேண்டுமென 'ஒருவன் செய்திப்பிரிவு' வாழ்த்துகிறது.
இந்த நிழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அசானி, வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு பராயம் முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் 
கூறினார். தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.
அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.
 அசானி அடுத்துவரும் வாரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சரிகமப நிழ்ச்சியில் தொடர்ந்து பாட அனுமதியளிக்க நடுவர்கள் தீர்மானிப்பார்கள் என எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.