ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதற்கு
28-08-2023..அன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக