பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு வீதம் 2023 பெரும் வீழ்ச்சி.. காரணங்கள் என்ன?
பிரான்ஸில் இவ்வாண்டின் அரைப்பகுதிவரை பிறந்த குழந்தைகளின் தொகையை பார்க்கும் போது இவ்வாண்டு குழந்தை பிறப்பு 2022ம் ஆண்டை விட 7 சதவித வீழ்ச்சியை காட்டுவதாக INSEE கவலை
தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 313 300 இறப்புக்கள் பதிவாகியுள்ளதையும், பிறப்புக்கள் 314 400 பதிவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள INSEE அமைப்பு இது இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பிறப்பு வீதத்தில்
பெரும் வீழ்ச்சி என தெரிவிக்கின்றது, இந்த நிலைக்கு பல காரணிகள் இருப்பதாக தெரிவிக்கும் பத்திரிகையாளரான Simon Ricottier. முதல் காரணம், இளய தம்பதிகளிடம் காணப்படும் பொருளாதர
நெருக்கடி என்கிறார்.
இதனால் பல தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுவதாக குறிப்பிடும் Simon இன்றைய நிலையில் Ukraine போர், காலநிலை மாற்றம், காரணமாக இளையோரின் வேலைகளிலும் ஆபத்தான நிட்சயம் அற்ற நிலையும் இதற்க்கான அடுத்த காரணியாக இருப்பாகவும்
குறிப்பிடுகிறார்.
குழந்தைகளை வளர்ப்பது தங்களின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக அமையுமோ என பயம் கொள்ளும் இளையோரின் மனோநிலையும் இதற்க்கு ஒரு காரணம் என தொரிவிக்கப்படும் அதேவேளை, ஒரினச்சேர்க்கை முறையும், ஒழுங்கற்ற இளையோரின் குடும்ப வாழ்க்கை முறையும் காரணங்களாக அமைவதாகவும் தொரிவிக்கப் படுகிறது.
இந்த வீழ்ச்சிக்குரிய காரணங்களில் இளம் பெண்கள் மிகச்சிறிய வயதில் இருந்து கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன் படுத்துவதும், இளவயதில் கருச்சிதைவு செய்துகொள்வதும், இளவயது ஆண், பெண் இருபாலாரிடமும் அதிகரித்து விட்ட போதைவஸ்து மற்றும் மது பாவனையும் மருத்துவக் காரணங்கள் என்கிறார் மகப்பேறு மருத்துவ பேராசிரியர் Dr.Marie-Madeleine.கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக