தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தையை அனுமதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் கூறியுள்ளார்.
விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி அனைத்துப் பாடப்பிரிவுகளையும் பயின்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலைத் திறக்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். .
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதலின் பேரில் 'பெஞ்ச்மார்க் 4' எனும் உலகின் அங்கீகரிக்கப்பட்ட நவீன ஆய்வுகூட வசதிகளை மருந்துப் பரிசோதனைக்காக இலங்கையில் ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக